எனக்குள் ஓர் குழந்தை

Vinkmag ad
எனக்குள் ஓர்  குழந்தை
-அமீர்
விலையேற்றம் எதிர்த்து
ஒரு போராட்டம் …
சிலை அகற்ற மறுத்து
ஒரு போராட்டம் …
வியாபம்
தாத்ரி
குவாரி
நீதி கேட்டு போராட்டம் …
மாடு
செம்மரக்காடு
மது
மானபங்கத்தில் மாது
தடுத்திட போராட்டம் …
கோடானு கோடியில்
அரசின் திட்டங்கள்
குடிமகனின்
வாழ்க்கையோ
தெருக்கோடியில் …
வீட்டில்
வராதுவந்த விருந்தினர்
வந்து திரும்பினர் …
நாட்டில்
பெறாது பெற்ற விருதுகள்
வெந்து திருப்பினர் …
இவை  …
அத்தனையையும் ஒதுக்கி
பெய்யும் மழையைக் கண்டதும்
ரசிக்கிறது
எனக்குள் இருக்கும் குழந்தை !

News

Read Previous

பிளாஸ்டிக் பாதுகாப்பைத் தாண்டிய பயங்கரம்!

Read Next

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை 26 ஆம்ஆண்டு இலக்கியப் போட்டிகள்

Leave a Reply

Your email address will not be published.