மின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்

Vinkmag ad
மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மழைக் காலங்களில் புயல், வெள்ளம் காரணமாக பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படக் கூடும். எனவே, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதன் விவரம்:

* மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.
* உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும்.
* டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர் மற்றும் கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம்.
* வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். மேலும், சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
* மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.
* மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது.
* மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.
* மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.
* இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
* இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்.

News

Read Previous

தித்திக்கும் தீபாவளி !

Read Next

தீபஒளித் திருநாள்

Leave a Reply

Your email address will not be published.