காயல் வாஹிதின் சிரிப்புகள்

Vinkmag ad

காயல் வாஹிதின் சிரிப்புகள்

துபாய்

தொடர்பு எண் : 050 3520 676

1.ஒருவர் : அவர் ஏன் ஓட்டலில் இட்லியை வாங்கி வீட்டிற்கு கொண்டு போய் சாப்பிடுகிறார்கள்?

மற்றவர் :ஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வருமாம் அதனால் தான்

 

2.ஒருவர் :நான் ஐந்து ரூபாயோட சென்னைக்கு வந்தேன்

அப்படியா

இன்னொரு ஐந்து ரூபாய் கொடு திரும்பி கிராமத்துக்கே போய் விடுகிறேன்.

 

3.ஒருவர் : படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே ஏன்?

மற்றவர் : அது மசாலா படம் ஆச்சே

 

4.ஒருவர் : சுவாமி என் மனைவியை அடக்க என்ன வழி

சுவாமி :என்னுடன் நின் வந்துவிடு

 

5.நர்ஸ் : டாக்டர் இந்த பேஷண்டுக்கு மயக்கமருந்து கொடுத்தாலும் மயக்கமாக மாட்டேங்கிறார்

டாக்டர் :ஆப்ரேஷன் முடிந்ததும் பில் எவ்வளவு ஆகும்னு காட்டுங்க மயக்கமாயிடுவார்

 

 

  1. டாக்டர் :உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி ?

நோயாளி : நான் பயப்படறது நோய்க்கு அல்ல டாக்டர் உங்களுக்கு தான்

 

7.ஒருவர் : எங்கு விழுந்தால் அடிபடாது?

மற்றவர் : போட்டோவில் விழுந்தால்

 

  1. பெண் : டாக்டர் என் கணவர் தூக்கத்தில் பேசுறார்

டாக்டர் : அப்பவாது அவர் பேசட்டும் விட்டுடுங்க

 

9.ஒருவர் : உங்க மனைவி போட்டோவை பக்கத்துல வச்சிட்டு கதை எழுதுறீங்களே என்ன கதை ?

மற்றவர் : பேய்க்கதை தான்

 

  1. ஒருவர் : இன்னிக்கு பேங்க் லீவு இல்லைனா பணம் கிடைச்சிருக்கும் பேங்க்ல அக்கெளண்ட் வெச்சிருக்கியா ?

மற்றவர் : ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.

 

  1. தொண்டர் : எதுக்குயா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு ?

மற்றவர் : எதிர்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரமே இல்லைன்னு சொல்றாங்களாம்

 

  1. ஒருவர் : என் தம்பி பயங்கரமா ஓடுவான் அமெரிக்கா எல்லாம் போயிருக்கான்

மற்றவர் : ஓடியே வா

 

  1. ஒருவர் : கோயில் கட்ட 500 ரூபாய் போதுமா ? ஆச்சரியமாயிருக்கு

மற்றவர் : முதல்ல உண்டியல் தான் வைக்கறேனுங்க அப்புறம் தான் சிலையெல்லாம்

 

  1. இன்ஸ்பெக்டர் : யோவ் கான்ஸ்டபிள் 50 உன்ன என்னய்யா ஜெயிலுக்குள்ள இருக்கிற கேடி சல்யூட் அடிக்கிறான்

கான்ஸ்டபிள் : எனக்கும் அவனுக்கும் ஒரே நம்பர் சார் யூனிபார்ம்தான் வேற

 

  1. ஒருவர் : எவ்வளவு கஷ்டமான ஆப்ரேஷன் சக்சஸா முடிச்சிட்டீங்க வாழ்த்துக்கள்

டாக்டர் : இதெல்லாம் நம்ம கையிலயாயிருக்கு எல்லாம் ஆண்டவன் பண்றது

ஒருவர் : அப்படின்னா ஆப்ரேஷன் பீஸை உண்டியல்ல

 

 

  1. மீனாட்சி : வானொலியில் பனி செய்பவரைத் திருமணம் செய்தது தப்பாப்போனதே

லதா : ஏன்

மீனாட்சி : தினமும் படுக்கும் போது இன்றைய நிகழ்ச்சிகள் இத்துடன் முடிந்தது என்று சொல்லி விட்டுத்தான் முடிப்பார்

 

 

  1. மனைவி : என் பிறந்த நாளைக்கு பால்பாயாசம் மட்டும் போதும் என்று கூறுகிறீர் ?

கணவன் : அன்றைக்கு மட்டுமாவது அதை நீ செய்ய மாட்டாயா என்றுதான்

 

 

  1. ஒருவர் : என்ன அந்தப் பெரியவர் பின்னால் எப்பவும் இளைஞர் கூட்டம் ?

மற்றவர் : பெரியவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள்

 

  1. காதலன் : யாரோ ஒரு பிச்சைக்காரன் நம் பின்னாலேயே வருகிறான்

காதலி : ஐயோ. அது என் அப்பா

 

  1. ஒருவர் : மேனஜரிடம் கம்பி வியாபாரத்தை ஒப்படைச்சது தப்பா போச்சு

மற்றவர் : என்னாச்சு?

ஒருவர் : லாபப்பணத்தை எடுத்துகிட்டு கம்பி நீட்டிட்டார்

 

 

  1. சிறுவன் : நம்ம ஏரியா தாதா கடைக்கு போய் என்ன கேட்பார் ?

சிறுவன் : பணம் தாதா என்று

 

 

  1. ஒருவன் : உங்க ஓட்டல் மெதுவடை சூப்பரா இருக்கு எப்படி சுட்டிங்க ?

மற்றவர் : ஒரு வாரத்துக்கு முன்னாடி சுட்டதால் மறந்து போயிடுச்சு

 

 

  1. ஒருவர் : முன்னாள் மந்திரிக்கு இவ்வளவு பாதுகாப்பா ?

மற்றவர் : பாதுகாப்பு அவருக்கு இல்லை அவர்கிட்ட இருந்து பொதுமக்களை காப்பாத்துறதுக்கு

 

  1. டாக்டர் : தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட வேண்டும்?

நோயாளி : என்னால் முடியாது டாக்டர் எங்க கோழி வெள்ளை முட்டை தான் போடும் டாக்டர்

 

  1. ரசிகர் : உங்க படத்துல கதாநாயகனும் கதாநாயகியும் பாட்டுப் பாடிகிட்டே சண்டை போடறாங்களே ஏன் ?

டைரக்டர் : சண்டை இல்லைங்க. அது டான்ஸ் காட்சி

 

  1. ஒருவர் : திடீரென்று உங்க பையன் ஊமையாயிட்டானே என்னாச்சு?

அப்பா : போனமாசம் அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு

News

Read Previous

முதுகுளத்தூரில் பிளாஸ்டிக் பை ஒழிப்பு பிரசாரம்

Read Next

ஆசை

Leave a Reply

Your email address will not be published.