எதுவரை இயலுமோ அதுவரை…

Vinkmag ad

எதுவரை இயலுமோ எழுதிடு கவிதையை

அதுவரைப் புகழினை அடைந்திடு புவியினில்

எதுவரை முயற்சிகள் இயலுமோ முயன்றிடு

அதுவரை இலக்கினை அடைவது திறமையில்

எதுவரை விடியலும் எழுந்திடும் தருணமோ

அதுவரை உலகமும் அயர்விலாப் பயணமே

எதுவரைச் சுமைகளின் இடுக்கணைச் சுவைப்பதோ

அதுவரைப் பொறுமையாய் அமைந்திடு மனத்தினில்

எதுவரை வளைத்துனை எதிரிகள் தடுப்பரோ

அதுவரைச் சுழற்றிடு அழகிய முறையினில்

எதுவரை உவப்பினை இதமுடன் கொடுத்திட

அதுவரை உறவினால் அகமெலாம் மலர்ந்திடும்

எதுவரை பிறரையும் இழிவுடன் நினைத்திட

அதுவரை உனையுமே அனைவரும் நினைப்பரே

எதுவரை மரணமும் இறைவனால் விதித்ததோ

அதுவரை இருப்பது அழகிய வழியதே!

News

Read Previous

வைட்டமின் சி – மேலும் சில தகவல்கள்

Read Next

முதுகுளத்தூர் அருகே வங்கிக்கு செல்ல 25 கிமீ பயணம் விவசாயிகள் அவதி

Leave a Reply

Your email address will not be published.