படித்துறை

Vinkmag ad
படித்துறை
=======================================ருத்ரா
வழி நெடுக விழி பார்த்து
அவன் காத்திருக்க..
அந்த சிவப்புப்பெட்டியின்
வாய் பிளந்து
காகிதக்குப்பைஎல்லாம்
அந்த தோல்பைக்குள் திணித்தபிறகு
மீண்டும் அந்த அடிவயிற்றில்
தடவிப்பார்த்து
அப்படியே அந்த காக்கிச்சடைக்காரர்
பிரசவம் பார்த்த களிப்பில்
ஒரு கடைசிக்கடிதம் ஒன்றை
கையில் படித்து தூக்கி வர
அந்த தெருவெல்லாம்
மானசீகமாய் கேட்கும்
“குவா குவாக்கள்” தூவிக்கிடக்க
நேரே
தெருவின் கடைக்கோடியில்
அவனிடன் கொண்டுவந்து நீட்டுவாறே
அது அல்லவோ
அவன் பிறந்த பயனுக்கு
அமுத மழை கொட்டும் நாள்!
அதைப்பிரித்து
எழுத்து எழுத்தாய் பார்ப்பான்.
இருப்பினும்
அந்த கோடுகளும் வளைவுகளும் சுழிவுகளும்
புள்ளிகளும்
அவனுக்கு தெரிவதெல்லாம்.
அவள் உதடுகள் தரும்
முத்தத்தின் ஜியாமெட்ரி அல்லவா!
படிக்கும் போதே
“வால் எயிறு ஊறிய”
வாசநீரில் கடிதமே கரைந்து போய்விடும்
அவலத்தில் அல்லவா நிற்பான்.
அந்த அவலம் கூட அவனுக்கு அமுதமே
அது ஒரு பொற்காலம்.
அதையெல்லாம் விட்டு விட்டு
இப்போ “அல்ட்ரா”த்தனமாய்
விசைப்பலகையில்
விரல் தட்டி
அவள்
“ஐ லவ் யூடா” ன்னு
ஆங்கில ஆல்பாபெட்டை அல்வா தடவி
அனுப்பி விடுகிறாளே!
இவர்கள் இதயங்களை
அடித்துத் துவைத்து
காயப்போட்டு வைத்திருப்பது
அந்த “விசைத்தட்டு”
படித்துறையில் தானோ ?
==============================================

News

Read Previous

நடிப்பை நம்பி ஏமாறாதே வீணாகாதே!

Read Next

செந்தமிழ் நாட்டிலே இந்தியா நன்று?

Leave a Reply

Your email address will not be published.