ரத்த தானத்தால் மாரடைப்பைத் தடுக்கலாம்

Vinkmag ad

ரத்த தானம் செய்வதால் மாரடைப்பைத் தடுக்கலாம் என்றார் மாவட்ட அரசு ரத்த வங்கி அதிகாரி வசந்தி.

கரூர் அருகே புன்னம் ஊராட்சியில் சத்திரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவற்றின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமை வாழ்த்தி மேலும் அவர் பேசியது:

ஒருமுறை ரத்த தானம் வழங்கிய ஒருவருக்கு 24 மணி நேரத்தில் மீண்டும் புதிதாக ரத்தம் உற்பத்தியாகும்.

ரத்த தானம் செய்வதால் புற்றுநோய், மாரடைப்பு போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கலாம். எனவே அனைவரும் அவசியம் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் வரவேற்றார். புன்னம் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத் தலைவர் தாதம்பாளையம் சுரேஷ் தலைமை வகித்தார்.

ஊராட்சித் தலைவர் சுப்ரமணியம், துணைத் தலைவர் மாலதிமுருகேசன், ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலைரமேஷ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பி. மார்க்கண்டேயன் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார்.

தொடர்ந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி தொழில்நுட்ப வல்லுநர் தழிழழகன் மற்றும் ரத்த வங்கி குழுவினர் கொடையாளர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.

முகாமில் பொதுமக்கள் 34 நபர்கள் ரத்த தானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு விரைவில் கரூர் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதவித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

News

Read Previous

ஓமந்தூரார் நினைவு தினம் – ஆகஸ்ட் 25

Read Next

இடத்தகராறில் பெண் காயம்: 6 பேர் மீது வழக்கு

Leave a Reply

Your email address will not be published.