அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி

Vinkmag ad
அப்துல் கலாம்  அவர்களுக்கு அஞ்சலி
தென்கோடியில் பிறந்தாய்
கீழ்க்கோடியில் மறைந்தாய்
பலகோடி மக்களின்
மனங்களில் நிறைந்தாய் .

தமிழனாய்ப்  பிறந்தாய்

தமிழ்வழி கற்றாய்

தமிழின் சிறப்பையும்

தமிழனின் பெருமையும்

தரணியெங்கும் புகழ்ப்

பரணிபாடவைத்தாய்

அணுகுண்டு சோதனையால் 
அண்டம் அதிர  வைத்தாய் 
அக்னி ஏவுகணையால் 
அகிலமே வியக்க வைத்தாய் .
 
சாதி மதம்  கடந்து 
சமத்துவம் கடைப்பிடித்து
 சமுதாயம் முன்னேற 
சாதனைகள் நிகழ்த்தினாய் ,
 
அரசியல் சார்பற்று
அனைவருக்கும் பொதுவாய் 
அனைவரையும் மதித்த 
அன்பாலும் பண்பாலும் 
அனைவர் மனத்திலும் 
அழியாத இடம்  பிடித்தாய் .
 
நீ  மறைந்த நாளில் 
அராஜகம் இல்லை  ,அடி தடி இல்லை 
பேருந்துகள்  எரிக்கப் படவில்லை 
சட்டம்   ஒழுங்கு சீர்கெடவில்லை 
கடைகள் சூறையாடப் படவில்லை 
ஒரு ஒழுக்கம் நிறைந்த மாமனிதருக்கு 
சமூக விரோதிகள் கூட , 
சட்டத்தை மதித்து 
கட்டுப்பாட்டோடு அஞ்சலி செலுத்திய விதம் 
யாருக்கும் கிடைத்ததில்லை 
யாருக்கும் கிடைக்காது .
 
உமக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் கூட்டம் 
வணிகர்களிடமும் மக்களிடமும் 
கட்டாய வசூல் செய்து 
வாகனங்கள் வரவழைத்து 
மதுவும் பிரியாணியும் கொடுத்து 
அழைத்து வரப்பட்டதல்ல . 
 
 
இதைவிட சிறந்த அஞ்சலி 
யாருக்கும் கிடைத்ததில்லை 
யாருக்கும் கிடைக்காது 
 
வையத்துள் வாழ்வாங்கு வாழும் 
மெய்யான மனிதரைத் தம்நெஞ்சின் 
மையத்தில் வைத்து  மரியாதை 
செய்யத் தயார் என்று 
செப்பாமல் செப்பிவிட்டோம் 
 
 எளிமையின் சின்னமாய் 
கடமையில் கண்ணுமாய்
நேர்மையின் வடிவமாய்
தேச நலன் முதன்மையாய்
இளைஞர்களின் கலங்கரை விளக்கமாய்
மாணவர்களின் வழிகாட்டியாய்
மதங்களனைத்தையும் நேசிக்கும்
பதம்  கொண்ட மனத்தினராய்
குரான் வழித் தொழுகையும்
குறள் வழி வாழ்க்கையும்
பிறர்க் குதவி செய்யும்
அறத்தின் வடிவமாய்
அன்பு உள்ளத்தினராய் 
பண்பு நிறைந்தவராய் 
கற்பிக்கும்  கலைமகளாய்
 கண்ணியத்தின் திருவுருவாய் 
பார் போற்றும் வித்தகராய்
உதார  குணம் கொண்ட  உத்தமராய் 
உதாரண புருஷராய்  ,
நீர் வாழ்ந்த காலத்தில் 
வாழ்ந்ததுவே  எங்களுக்குப் 
பெருமையாகும் .
உங்கள் பாதையில்  பயணித்தல் 
எங்கள் கடமை
 
உங்கள் ஆன்மா சாந்தியடைவதாக .
அன்புடன் 
சிலேடை சித்தர் சேது  சுப்ரமணியம் 

  

News

Read Previous

ஸ்ரீவடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் பூக்குழி உற்சவ விழா

Read Next

மாற்றம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published.