முதுகுளத்தூரில் பெண்களுக்கான கோ-கோ, கபடி போட்டி

Vinkmag ad

டி.மாரீயூர் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், முதுகுளத்தூரில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கோ-கோ, கபடி போட்டிகள்   நடைபெற்றன.

முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியினை, பள்ளித் தலைமை ஆசிரியை ப்ரிட்டா செல்வக்குமாரி தொடக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத், உடற்கல்வி பயிற்றுநர்கள் ஆர். பாலசுந்தரம், கமால்பாட்சா, வேதமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோ-கோ போட்டி: 14 வயதுக்குள்பட்டோர் பிரிவு கோ-கோ போட்டியில், சவேரியார்பட்டணம் செயின்ட் சேவியர் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.  17 வயதுக்குள்பட்டோர் பிரிவில், சாயல்குடி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், சவேரியார்பட்டணம் செயின்ட் சேவியர் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.

  19 வயதுக்குள்பட்டோர் பிரிவில், சாயல்குடி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.

கபடி போட்டி: 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில், இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடத்தையும், விளங்குளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.

 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில், சாயல்குடி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், ஆப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.

 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில், சாயல்குடி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.  போட்டிக்கான ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியர்கள் அனிதா, ஐ. இளையராஜா,பி. கோகிலா ஆகியோர் செய்திருந்தனர். நடுவர்களாக முருகானந்தம், சரவணன், பழனி ஆகியோர் செயல்பட்டனர்.

  முடிவில், உடற்கல்வி ஆசிரியர் வடிவேல்முருகன் நன்றி தெரிவித்தார். போட்டியில், முதல் மற்றும் இரண்டாம் இடம்பெற்ற மாணவிகளை, மாவட்டக் உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத் பாராட்டினார்

News

Read Previous

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

Read Next

ச்சீய்… – மின்னூல் – சி.சரவணகார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published.