‘044 – 2595 2450’ என்ன தெரியுமா?

Vinkmag ad

ஆதரவின்றிச் சுற்றித்திரியும் குழந்தைகள் பற்றி தகவல் தெரிவிக்க, தொலைபேசி எண்

அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், காணாமல் போன மற்றும் ஆதரவின்றிச் சுற்றித்திரியும் குழந்தைகளைக் கண்டுபிடிக்க, ‘புன்னகையைத் தேடி’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் நலனோடு தொடர்புடைய துறைகள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் அடங்கிய, ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினர், ஜனவரியில், 3,000 குழந்தைகளைக் கண்டுபிடித்தனர். இந்நிலையில், இந்த மாதத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்கள் அடங்கிய குழுக்கள், கோவில்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஆதரவின்றி திரியும் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன.

தங்கள் பகுதியில் காணாமல் போன மற்றும் ஆதரவின்றிச் சுற்றித்திரியும் குழந்தைகள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விரும்பினால், 044 – 2595 2450 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது, ‘1098’ என்ற, ‘சைல்டு லைன்’ இலவச எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News

Read Previous

உற்பத்தி அளவையியல்

Read Next

காயிதே மில்லத்தும் நாகூர் ஹனீஃபாவும் !

Leave a Reply

Your email address will not be published.