குவைத்தில் ‘புனிதர்களின் நந்தவனம்! பத்ர் களம் – சத்யமேவ ஜெயதே’ சிறப்பு நிகழ்ச்சி!

Vinkmag ad

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்

‘புனிதர்களின் நந்தவனம்! பத்ர் களம் – சத்யமேவ ஜெயதே’ சிறப்பு நிகழ்ச்சி!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாதத்தில் நடைபெற்ற பத்ர் யுத்தம் பற்றிய சிந்தனைகளையும், படிப்பினைகளையும், அதனால் ஏற்பட்ட இஸ்லாமிய எழுச்சியையும் தெளிவான வகையில் எளிய முறையில் அழகிய தமிழில் எடுத்துரைக்கும் விதமாக கீழ்க்கண்டவாறு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்ஃகைத்தான், குவைத்.

நாள்: 03.07.2014 வெள்ளிக்கிழமை இன்ஷா அல்லாஹ்…

 

நேரம்: நண்பகல் 11:45 மணி முதல்….

தலைமை: மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ –  தலைவர், K-Tic.

ஜும்ஆப் பேருரை: மவ்லவீ ஹாஃபிழ் காரீ M. முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ – துணைத் தலைவர், K-Tic

சிறப்புரை: தராவீஹ், கியாமுல் லைல் தொழுகைகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகளுக்காகதமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர் 

மவ்லவீ அல் ஹாஃபிழ் அல்ஹாஜ் அஷ்ஷைஃக் “திருக்குர்ஆன் விரிவுரையாளர்” தமிழ்த் தென்றல் ஏரல்அ. பீர் முஹம்மது பாகவீ அவர்கள்

ஃகதீப், ‘ஜாமிவுல் கபீர்’ பள்ளிவாசல், ஜங்ஷன், திருநெல்வேலி  / பொறுப்பாளர், ‘மன்பவுல் ஃகைராத்’ மகளிர் கல்லூரி, ஏரல், நெல்லை மாவட்டம் /  ஆசிரியர், ‘சிந்தனைச் சரம்’ மாத இதழ், மதுரை

கருப்பொருள்: ‘புனிதர்களின் நந்தவனம்! பத்ர் களம் – சத்யமேவ ஜெயதே’ 

குறிப்பு:

  • சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் சங்கத்தின் இணையதளத்தில் நேரடியாக ஒளி/ஒலிப்பரப்பு செய்யப்படும்.
  • பெண்களுக்கு தனியிட வசதி உண்டு
  • வாகனங்களை நிறுத்த பரந்து விரிந்த விசாலமான இட வசதி உண்டு

மேலதிக விபரங்கள் இணைப்பில்…

குவைத்தில் வசிக்கும் சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன், தங்களின் சொந்தங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வருமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் சங்க நிர்வாகிகள்.

புனித ரமழானில் கணக்கில்லா நன்மைகளை பெற்றுக் கொள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வீர்! தங்களின் பொருளாதார உதவிகளை அள்ளி வழங்கிடுவீர்!! களப்பணிகளிலும் பங்கெடுப்பீர்!!!

தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.

துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் /  டெலிகிராம் / அலைபேசி: (+965) 97 87 24 82

மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com

இணையதளம்: www.k-tic.com

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic

முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic

நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live

ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12

News

Read Previous

தஞ்சாவூர் கொலையில் 7 பேர் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண்

Read Next

இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக்கலை : வீடியோ பதிவு

Leave a Reply

Your email address will not be published.