துணிவு

Vinkmag ad
துணிவு

குண்டர் படையோடு கொலை , கொள்ளை செய்து

கண்டபடி வாழ்வது துணிவல்ல தோழா  – அந்த
குண்டரை எதிர்த்து , அவர் குரல்வளை நெரித்து

மண்டியிடவைப்பதே துணிவாகும் தோழா .

 

மனைவிக்கு பயந்து , தாயினை விரட்டி

தனிமையில் வைப்பது துணிவல்ல தோழா

இருவருக்கிடையில் பாலமாய் இருந்து

இணைந்திடச் செய்வதே துணிவாகும் தோழா .

அக்கிரமக் காரரைத் தனியனாய் எதிர்த்து

அடிவாங்கிச் சாதல் துணிவல்ல தோழா

தக்க துணைகொண்டு பக்குவமாகவே

சிக்கவைப்பதே துணிவாகும் தோழா .

சாதியைக் காரணம் காட்டியே காதலை

பாதியில் விடுவது துணிவல்ல தோழா

நீதியின் துணையோடு , நிரந்தரத் துணையாய்

நிலைத்திடச் செய்வதே துணிவாகும் தோழா .

 
மரணத்திற் கஞ்சாது மடியில் கருசுமந்து 
மகவை ஈன்றெடுக்கும் மாதாவின் துணிவு

அன்னியர் ஆட்சியை எதிர்த்தது அண்ணல் காந்தியின் துணிவு
எண்ணியது கிட்டும் வரை முயல்வது வெற்றியாளன் துணிவு

தருணத்திற்குக் காத்திருப்பது தன்னம்பிக்கையாளன் துணிவு
மரணத்திற்கும்  அஞ்சாதது மாவீரன் துணிவு

தடைகளைத் தகர்ப்பது தகுதியாளன் துணிவு
விடைகளைக் காண்பது விவேகியின் துணிவு

தோல்வி கண்டு துவழாது  வெல்ல  முயற்சிப்பதே துணிவு 

 ஊழ்வினை என்றெண்ணாது ஊக்கம் தரும் துணிவு   
 
அறிவிலியாய் அஞ்சி அஞ்சி வாழ்வதல்ல வாழ்க்கை 
அறிவின் துணையோடு வெல்ல வேண்டும் துணிவு.

எவரும் நம்மை இகழாதவாறு எவ்விதமும் 
தவறு செய்யா மனமிருந்தால் தானே வரும் துணிவு .
 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
27.06. 2015


News

Read Previous

கருப்பென்பது உயிரின் நிறம்

Read Next

துபாயில் இலவச சட்ட உதவி பெற …

Leave a Reply

Your email address will not be published.