கருப்பென்பது உயிரின் நிறம்

Vinkmag ad

கருப்பென்பது உயிரின் நிறம் – (கவிதை) வித்யாசாகர்



ருப்பென்ன
கருப்பா..?
ச்சீ அது வெள்ளையென்று
நம்பவைத்தவள் நீ..

என் கருப்பிற்கு உன்
புன்னகையால்
நட்சத்திரப்
பொட்டுவைத்தவள் நீ..

ரசித்து ரசித்தே
எனது கருப்பை
கண்களால்
துடைத்துவிட்டவள்..

காற்றிடையே
பேசிக்கொண்ட மனதை
கருப்புதாண்டி
கண்டுக்கொண்டவள்..

எனக்குக் கற்பென்பது
கருப்பென்று
கற்றுத்தந்தவள்
கூடவே வாசனையாய்
உயிரோடு ஒட்டிக்கொண்டவள்..

உயிர்கூட கருப்புதானே
கண்மூடினால்
எல்லாம் கருப்புதானே.. ?

ஆழக்கடல் முதல்
வாணம் மூடும்
போர்வைக் கூட கருப்பில்லையா..?

வேறென்ன..

இதோ
ஒரு கருப்பிற்கே
தவமிருக்கிறேன்
ஒரு மரணமே வந்து போ..,

உயிரும் உயிரும்
கருப்பாக கலந்துபோகட்டும்..
————————————————————
வித்யாசாகர்

News

Read Previous

ஷார்ஜாவில் வீடு வாடகைக்கு

Read Next

துணிவு

Leave a Reply

Your email address will not be published.