குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 10ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!

Vinkmag ad

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்

10ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!

மேலப்பாளையம் மவ்லானா எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி ஹழ்ரத் சிறப்புரை!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

 

குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்ணேற்றப் பயண நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), இம்மாதம் (மே 2015) 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 10ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்…

 

கருப்பொருள்:

அண்ணல் நபியின் விண்ணுலகப் பய

ம் – நன்மையே!

மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!

———————————–

தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்:

மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் அஷ்-ஷைஃக் அல்ஹாஜ்

எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி

ஹழ்ரத் அவர்கள்

முதல்வர்,  உஸ்மானியா அரபிக் கல்லூரி, மேலப்பாளையம், திருநெல்வேலி

  • தலைவர், மஜ்லிஸுல் உலமா சபை, மேலப்பாளையம், திருநெல்வேலி

நிகழ்ச்சிகள் அனைத்தும் www.k-tic.comல் நேரடி ஒலி/ஒளிப்பரப்பில்

நிகழ்ச்சிகளின் முழு விபரங்கள் இணைப்பில்….

 

தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும், செய்தியாளர்களுக்கும், சமூக வலைதள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.

————————————————————————————————

தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

குவைத்.

News

Read Previous

தந்தையாக சென்று தாத்தாவாக வந்துள்ளேன்!

Read Next

மின்னல் தாக்கி மாடு பலி

Leave a Reply

Your email address will not be published.