அல்ஹிஜாமா டாக்டர் ஹலினா இம்ரான் பேட்டி

Vinkmag ad

அல்ஹிஜாமா!டாக்டர் ஹலினா இம்ரான் பேட்டி

‘மணிச்சுடர்’ அலுவலகத்துக்கு 23-02-2015 திங்கள்கிழமை இரு பெண்கள், ஒரு கைக்குழந்தையுடன் வந்தனர். சென்னை மேத்தா நகர் ஃபாத்திமா மதரஸா மஸ்ஜிது பொருளாளர் பொறியாளர் அஹமது சாஹிப் அவர்கள் இங்கே அனுப்பி வைத்தார் என்று கூறினார்.
இன்ஜினீயர் அஹமது, மிகவும் அறிமுகமானவர்; பொது நல, மஹல்லா ஜமாஅத் சேவையாளர். சமீபத்தில் அவருக்கு சில உடற் பிரச்சினைகள் ஏற்பட்டதால், சில பல சங்கடங்களைச் சுமந்தவர் என்பது எனக்குத் தெரியும்.
வந்த பெண்மணிகளில் ஒருவர் தன்னை டாக்டர் ஹலினா ரஜியா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அஹமது அவர்களுக்கு நான்தான் சிகிச்சையளிக்கிறேன். இப்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். தனக்குள்ள சுகக்குறைவு எங்கள் மருத்துவத்தில் சுகம் கிடைத்தவுடன் சுக நிறைவும் பெற்று வருகிறார்.

ஆகவேதான், தன்னைப் போல சுகவீனம் உள்ளவர்கள் நாங்கள் அளிக்கும் மருத்துவத்தால் நன்றாகவே நலம் பெறுவர். இதனை ‘மணிச்சுடரில்’ கூறி வாசகர்களுக்கு தெரிவிக்கக் கூறுங்கள் என்றார். அதனால்தான் இங்கே வந்தோம் என்றார் அப் பெண்மணி.
அப்படி என்ன அதிசய வைத்தியம் செய்கிறீர்கள்? என்று கேட்டபோது, நாங்கள் செய்வது நபி வழி மருத்துவம் – அல்ஹிஜாமா என்றார். அல்ஹிஜாமா வைத்தியம் பற்றி தமிழகத்தில் கேள்விப்பட்டதில்லையே என்று நாங்கள் சொன்னபோது, இது நபி வழி மருத்துவம். நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்திலி ருந்து இன்று வரை நடைமுறையில் உள்ள வைத்தியம்தான். உடம்பில் உள்ள கெட்ட இரத்தத்தை அறுவை
சிசிக்சைக்குரிய சிறிய கூரிய பிளேடு போன்ற கருவியைப் பயன்படுத்தி வெளிக் கொண்டு வருவதுதான் அல்ஜிஹாமா. இதனை இரத்தம் குத்தி எடுத்தல் என்று முற்கால மார்க்க அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

சிரிஞ்சு ஊசியைப் பயன்படுத்தி இரத்தம் எடுக்கிறார்களே, அது போன்றதா இது? என்று கேட்ட போது, டாக்டரம்மா கூறியதாவது-
இரத்த தான ம் தருபவர்களின் உடம்பிலிருந்து நல்ல இரத்தம் தான் எடுக்கப்படுகிறது. ஆனால், அல்ஹிஜாமா வைத்திய முறையில் உடம்பில் உள்ள கெட்டஇரத்தம், கெட்ட கொழுப்பு போன்றவை வெளியே உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
‘கெட்ட இரத்தம் உடம்பில் இருப்பதால் உடல் உறுப்புகள் அதிகப்படியான வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உதாரணமாக கெட்ட இரத்தத்தை தூய்மைப்படுத்துவது – கெட்ட கொழுப்பை கரைப்பது – சுகர் அல்லது குளுக்கோஸ் வெளியேற்றுவது – மருந்துகளால் ஏற்படும் சங்கடங்களை நீக்குவது போன்ற வேலைகளை உடல் உறுப்புகள்தான் செய்ய வேண்டும். இது உடல் உறுப்புகளுக்கு கூடுதலான வேலைப் பளுவை
தருகிறது. இதனாலும் உடலில் பல பாதிப்புகள் நிகழ்கின்றன.

இப்படி உடம்பில் உள்ள உறுப்புகளுக்கு கூடுதல் வேலைப் பளுவை ஏற்படுத்தாமலும், கெட்ட இரத்தத்தை மட்டுமே வெளியேற்றுவது அல்ஹிஜாமா வைத்தியத்தின் மிக முக்கிய அம்சமாகும்.
உடலில் உள்ள கெட்ட இரத்தம் உறிஞ்சி எடுக்கப்பட்டவுடன் புதிய நல்ல இரத்தம் உற்பத்தியாகி உடம்பில் புதிய சுறுசுறுப்பும், தெம்பும் ஏற்படுகிறது.
நபி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: “அல்லாஹ் எந்த நோயையும் அதற்கான நிவாரணியை அளிக்காமல் ஏற்படுத்துவதில்லை – முதுமை என்னும் நோயைத் தவிர’ – (திர்மிதி).
ஒவ்வொரு நோய்க்கும் மருந்து இருக்கிறது. ஒரு நோய்க்கு சரியான மருந்து அளிக்கப்பட்டால் அல்லாஹ்வின் அனுமதியின் பேரில் அந்த நோய் குணமடைகிறது. (முஸ்லிம்)
மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது; தேன் அருந்துவது; நெருப்பால் சூடிட்டுக் கொள்வது. எனது சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்வதை தடுத்துள்ளேன். (புகாரி).

டாக்டரம்மா மேலும் கூறியதாவது-புதுச்சேரி பி. எஸ்.எஸ் கல்லூரியிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், ஸ்ரீலங்கா கொழும்பு பல்கலைக்கழகத்திலும் னுஹஏ, ஆனு (ஹஊரு), ஞா.னு., (ஹஊரு) ஆகிய பட்டங்களை பெற்றுள்ளேன்.
மதுரையில் இந்தப் புதிய அல்ஹிஜாமா வைத்தியம் செய்து வந்தேன். எனக்கு திருமணமாகி எனது கணவர் இம்ரான் சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் பணி புரிகிறார். ஆகவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு குடிபெயர்ந்துள் ளோம். சென்னை பல்லாவரம் இனாயத் திருமண மஹாலுக்கு பின்புறம் அல் ஷிஃபா அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வருகிறேன். 29/9, பொன்னி நகர் முதல் தெரு, பம்மல், சென்னை 600
075 இல்லத்திலும் மருத்துவம் செய்கிறோம்.

எங்களை தொடர்பு கொள்வதற்கான முகவரி:-டாக்டர் ஏ. ஹலினா இம்ரான் (செல்: 8870482669)இமெயில்: hயடiயேசயதலைய@பஅயடை.உடிஅஎங்கள் கிளினிக்குக்கு வந்தும் வைத்தியம் செய்து கொள்ளலாம். தொலைபேசியில் தொடர்பு கொண்டால் நோயாளியின் இருப்பிடத்துக்கு சென்றும் அல்ஹிஜாமா சிகிச்சை அளிக்கிறோம் என்றார். டாக்டர் ஹலீனா இம்ரான் தனது அல்ஹிஜாமா வைத்திய முறையில் மிகுந்த நம்பிக்கை
கொண்டிருக்கிறார் என்பது அவரது பேச்சின் மூலமூம் அவர் காட்டிய ஆர்வம் மூலமும் தெரிந்தது.
சிகிச்சை பெற்றுவரும் மேத்தா நகர் அஹமது இன்ஜினியரை தொடர்பு கொண்டு கேட்டபோது அல்ஹிஜாமா வைத்தியம் தனக்கு எதிர்பாராத சுகத்தை தந்திருப்பதாக கூறுகிறார்.
அல்ஹிஜாமா வைத்தியமும், நபி வழி சுன்னத்களில் ஒன்றுதான்.அல்ஹிஜாமா சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் நோய் தீருவதுடன் நபி (ஸல்) அவர்களின் ‘சுன்னத்’ ஒன்றையும் புதுப்பித்த பேறும் பெறலாம் என்றே தோன்றுகிறது.- பேட்டி : வாணியம்பாடி அர்ஸத்

http://muslimleaguetn.com/mc_170315.asp

__._,_.___

News

Read Previous

20ம் தேதி துபாயில் அகமும்..புறமும் பயிற்சி முகாம்

Read Next

தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!

Leave a Reply

Your email address will not be published.