காதலா? கடமையா? – குறுநாவல்

Vinkmag ad

காதலா? கடமையா? – குறுநாவல்

சித்திஜுனைதா பேகம்

தமிழில் முஸ்லிம் பெண்மணியால் எழுதப்பட்ட முதல் நாவல்

உரிமை – Creative Commons – Attribution-NoDerivs

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

மின்னூலாக்கம் -த.சீனிவாசன் tshrinivasan@gmail.com
மக்கள் தொடர்பு – அன்வர் – gnukick@gmail.com

மின்னூல் வெளியீடு – http://FreeTamilEbooks.com

2003 ல் இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் மின்னூலாக்கப் பட்டு இங்கு
http://www.tamilheritage.org/old/text/etext/sidi/sidistor.html
வெளியிடப் பட்டது.

மதிப்புரை

மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலா நிதி
டாக்டர் உ,வே, சாமிநாதையர்
அவர்கள் அன்புடன் அளித்த மதிப்புரை

இப்போது சில காலமாக ஆண் பாலாரைப் போலவே பெண் பாலரும் கல்வி விஷயத்தில்
இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண்
பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில் மிக்க மேம்பாடுற்று
விளங்குகின்றனர். தமிழ் சம்பந்தப்பட்ட மட்டில், மகம்மதியப் பெண்மணிகளில்
நன்றாகப் படித்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண் பாலாரில் அந்த
வகையிற் பல வித்துவான்கள் உண்டு.

சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய “காதலா
கடமையா” என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு
மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ்
நூல்களை பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு
விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல்
ஓவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும்
செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன்
நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும்
நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள்
கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய ‘நூல்களில் நல்ல
பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது. பொது மக்கள் இதனை வாங்கிப் படித்து
இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்.

ஆங்காங்குச் சில எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் உள்ளன. அவை
அடுத்த பதிப்பில் நீக்கப்படுமென்று நம்புகிறேன்.

இங்ஙனம்
வே. சாமிநாதையர்.

பதிவிறக்க*
http://freetamilebooks.com/ebooks/kadhala-kadamaiya/

News

Read Previous

முதுகுளத்தூரில் மகளிர் தின விழா

Read Next

வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா?

Leave a Reply

Your email address will not be published.