அலைபேசி மென்பொருள்கள் போட்டிகள்

Vinkmag ad
தமிழ் இணைய மாநாடு 2015
தகவல் தொழில் நுட்ப போட்டிகள்
அலைபேசி மென்பொருள்கள் உருவாக்கம்
 
14—வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் மே மாத இறுதியில் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டுப் பொதுமக்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் சில போட்டிகள் நடைபெற உள்ளன.
 
தமிழ் கணினித் தொழில்நுட்பத்துக்கு உதவும் வகையில் சிறப்பான கைப்பேசி குறுஞ்செயலியைத்  தயாரிக்கும் திட்டம் உங்களிடம் உள்ளதா? 
உங்களுக்கு 1000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசு காத்திருக்கிறது!!!
 
உலகளாவிய தமிழ் குறுஞ்செயலிப் போட்டி
1. உலகத் தமிழ் மாணவர்  சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்கு பெறலாம். உங்களது குறுஞ்செயலி திட்டத் தயாரிப்பை contest@infitt.org  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய விபரங்கள்  வருமாறு:
  உங்களது யோசனை என்ன? மாதிரி பயனீட்டாளர் திரைகள், குறுஞ்செயலி எவ்வாறு செயல்படும்? இதை தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன? உங்களது தயாரிப்பு இந்தப்போட்டியில் வெற்றி பெறும் என்று நீங்கள் கருதுவதற்கான காரணத்தை சுருக்கமாக விளக்கும் வீடியோ  செயல் விளக்கம். 
  நீங்கள் தயாரித்த குறுஞ்செயலி.
 
2.  குறுஞ்செயலி  தமிழ்க் கணினி தொழில்நுட்பத்தை அடிப்படைக் கருத்தாக கொண்டிருக்க வேண்டும்.
  கற்றல்
  விளையாட்டுகள்
  அகராதி மற்றும் பொருளின் தொடக்கம் பற்றிய ஆய்வை அடிப்படையாகக் கொண்ட கண்டுபிடிப்புகள்
  தேர்வுகள்
  மின்னணு ஆளுகைக்கான குறுஞ்செயலிகள்
  திட்டமிடுகை
  உற்பத்தி திறன் மேம்படுதலுக்கான கருவிகள்.
  கலாச்சாரப் பாதுகாப்பு
  சுற்றுலாத்துறைக்கு உதவுதல்
  உடல் செயல்திறன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல்
  இதர நூதன கண்டுபிடிப்புகள்
 
3. கீழ் வரும் தகுதிகளின்படி விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்படும்.
  35% நூதன கண்டுபிடிப்பு & தமிழில் இது ஒரு புதிய முயற்சி, பயன்படுத்துவோரின் செயல்முறையை மாற்றத்தகுந்ததாக இருத்தல், அவரது தினசரி வாழ்க்கையின் ஒரு அத்யாவசிய பகுதியாக மாறுதல்.
  15% பயன்படுத்துவோரின் அனுபவங்கள்.
  35% செயல்படுத்துதல் — ஆண்ட்ராய்டு  பயன்படுத்தி குறுஞ்செயலியை நீங்கள் தயார் செய்திருந்தால், அது உங்களுக்கு கூடுதல் தகுதியாக கருதப்படும்.
  15%  உங்களது விளக்கம் — உங்களது இந்த யோசனை எப்படி வெற்றி பெறும்? குறுஞ்செயலி எவ்வாறு சிறப்பாக செயல்படும் என்பது பற்றிய உங்களது வீடியோ.
 
4. பிரிவுகள்
  பள்ளி/கல்லூரி மாணவர்கள்
  பொதுமக்கள்
 
 
உலகத் தமிழ் தொழில் நுட்ப மன்றம் மற்றும் போட்டி குறித்த தகவல்கள்:
உலக அளவில் தமிழ்க் கணினி தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக அர்ப்பணித்துக்  கொண்ட  லாப நோக்கமற்ற அரசு சாரா அமைப்பு உலகத் தமிழ் தொழில்நுட்ப மன்றம். லாப நோக்கமற்ற அமைப்பாக இது அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘தமிழில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்தவற்றை மேம்படுத்த உதவுதல், தொழில்நுட்பக் கூட்டங்கள், தமிழ் மேம்பாட்டு அமைப்புகளுக்காக வருடாந்திர கூட்டங்கள்/மாநாடுகளை நடத்துதல், மண்டல அளவில் இதில் ஆர்வமுள்ள குழுக்கள் மற்றும் தேசிய அரசு அமைப்புகளிடையே இணைப்பு பாலமாக இருத்தல், பன்னாட்டு நிறுவனங்கள், தர நிர்ணய அமைப்புகளுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை அளித்தல், தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்/விழிப்புணர்வை அதிகரித்தல், தமிழ்த் தகவல் தொழில்நுட்ப பணிமனைகளில் திறமையான இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்தல் போன்றவையே உலகத் தமிழ் தொழில்நுட்ப மன்றத்தின் நோக்கம். இந்த அமைப்பு, அடுத்த தமிழ் இணைய மாநாடு 2015—ஐ சிங்கப்பூரில் (யூனிசிம் வளாகம்) வரும் மே மாதம் 30ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதிவரை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ் இணைய மாநாடு 2015—ஐ ஒட்டி உலகத் தமிழ் தொழில் நுட்ப மன்றத்தால் நடத்தப்படும் போட்டிகளின் ஒரு பகுதியே இந்த உலக தமிழ்க் குறுஞ்செயலி தயாரிப்பு போட்டியாகும்.
 
விதிமுறைகள்
  போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியில் இளநிலை பட்டதாரிகள் அல்லது பட்டத்தை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் 4 பேர் வரை  கொண்ட குழுவாக பங்கு பெறலாம். விண்ணப்பதாரர்கள், தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் உண்மைச் சான்றிதழ், மாணவர் அடையாள அட்டையின் பிரதி, படிக்கும் கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இருவரது பெயர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவைற்றை இணைக்க வேண்டும்.
  பொதுமக்களாக இருந்தால், 3 பேர் வரை கொண்ட குழுவாக பங்கேற்கலாம். அவர்கள் தங்களது குடியுரிமைக்கான ஆதாரம், முகவரி மற்றும் அடையாளம் பற்றிய தகவல்களை அனுப்ப வேண்டும்.
 முழுமை அடைந்த குறுஞ்செயலிகளே போட்டிக்கு அனுப்ப தகுதியானவை. போட்டிக்குப் பின்னர் இந்த குறுஞ்செயலிகளை உலகத் தமிழ் தொழில் நுட்ப மன்றம் தனது குறுஞ்செயலிக் கணக்கில் இலவசமாக வெளியிடும். இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள், குறுஞ்செயலிகளை உலகத் தமிழ் தொழில் நுட்ப மன்றம் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 
குறுஞ்செயலி தயாரிப்பாளர்கள், தயாரிப்பு வழிமுறைகளை உலகத் தமிழ் தொழில் நுட்ப மன்றத்துக்கு அனுப்ப வேண்டியதில்லை. தயாரிப்பு வழிமுறைகளை அவற்றை தயாரித்தவர்களே வைத்துக் கொள்ளலாம். 
 
குறுஞ்செயலியில் உலகத் தமிழ் தொழில் நுட்ப மன்றம் மற்றும் தமிழ் இணைய மாநாடு 2015 ஆகியவற்றின் ‘சின்னம்’ கட்டாயம் இடம் பெற வேண்டும். போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் 
 
குறுஞ்செயலியின் அறிவார்ந்த சொத்து உரிமையின் பெரும் பகுதியை போட்டியில் பங்கேற்கும் குழுவின் உறுப்பினர்கள் கொண்டிருக்க வேண்டும். 
 
ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாத, புதிய, நூதனமான குறுஞ்செயலிகள் மட்டுமே போட்டிக்கு உரியதாக கருதப்படும். 
 
அனுப்பும் போது காணாமல் போகும் பொருட்களுக்கு  உலகத் தமிழ் தொழில் நுட்ப மன்றம் பொறுப்பல்ல. போட்டியில் பங்கேற்றவர்களில்  தேர்ந்தெடுத்த நபர்களை, இறுதி முடிவெடுப்பதற்காக நடுவர்கள் தொலைபேசி அல்லது ஸ்கைப் வழியாகத் தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்கக் கூடும். வேறு எந்த குறுஞ்செயலியின் பிரதியாகத் தென்பட்டாலோ அல்லது அனுமதியற்ற விஷயங்களை குறுஞ்செயலி கொண்டிருந்தாலோ அதை சமர்ப்பித்த அணி தகுதி நீக்கம் செய்யப்படும். 
 போட்டியில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக இந்திய பங்கேற்பாளர்கள் ரூ.300 அல்லது உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் 10 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும். பதிவுக்கட்டணம் திரும்பத்தரப்பட மாட்டாது.
 ஐந்து உறுப்பினர் கொண்ட நடுவர் குழு பரிசுக்குறியவர்களை தேர்வு செய்யும். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. வெற்றியாளர்களின் பெயர்கள் தமிழ் இணைய மாநாடு 2015ல் அறிவிக்கப்படும். தமிழ் இணைய மாநாடு 2015ல் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளின் போது வெற்றியாளர்கள் பற்றிய தகவல் விளம்பரப்படுத்தப்படும். பரிசு பெறுவோரின் பட்டியல் உலகத் தமிழ் தொழில் நுட்ப மன்றத்தின் வலைத்தளத்திலும் வெளியிடப்படும். போட்டியை மேலும் சிறப்படைய எந்தக் காரணத்துக்காகவும், எந்த நேரத்திலும் விதிமுறைகளில் மாற்றம் செய்யவோ, திருத்தவோ உலகத் தமிழ் தொழில் நுட்ப மன்றத்துக்கு உரிமை உண்டு. போட்டிக்கான செலவுகளுக்காகவே பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உலகத் தமிழ் தொழில் நுட்ப மன்றம் தமிழின் நலனையும், அதன் மேம்பாட்டையுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் லாப நோக்கமற்ற அமைப்பு. சட்டபூர்வமான எந்த முறையீடோ அல்லது இதர நடவடிக்கைகளோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தகுதியான அனைத்து குறுஞ்செயலித் திட்டங்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
போட்டிக்கான முக்கிய தேதிகள்
  பதிவு மற்றும் குறுஞ்செயலித் திட்ட சமர்ப்பிப்பு: 2015 பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை.
 
  சமர்ப்பிக்கப்பட்ட குறுஞ்செயலித் திட்டங்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு: ஏப்ரல் 10ம் தேதி 2015
  வெற்றி பெற்ற திட்டங்கள் குறித்த அறிவிப்பு: மே மாதம் 30ம் தேதி 2015
 
 
உத்தமம் இந்திய கிளை

News

Read Previous

மனமெலாம் மாறல் வேண்டும் !

Read Next

விளங்குளத்தூரில் “அம்மா’ திட்ட முகாம்

Leave a Reply

Your email address will not be published.