இணையத்தை கலக்கும் இந்துஜா: பெங்களூரு தமிழ் பெண்ணின் திருமண நிபந்தனைகள்

Vinkmag ad

இணையத்தை கலக்கும் இந்துஜா: பெங்களூரு தமிழ் பெண்ணின் திருமண நிபந்தனைகள்

பெங்களூருவை சேர்ந்த இந்துஜா என்ற தமிழ் பெண் தனது திருமணத்துக்காக இணையதளம் தொடங்கியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள `புரட்சிகர’ நிபந்தனைகள் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத் தீயாக பரவியுள்ளது.

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இந்துஜாவின் பெற்றோர், தங்கள் மகளுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்து வைக்க திட்ட மிட்டுள்ளனர். எனவே தமிழகத் தில் உள்ள தங்களது உறவினர் கள் மத்தியில் மணமகனை தேடி யுள்ளனர். நல்ல வரன் அமையாத தால் செய்தித்தாள்களிலும், திருமணத்துக்கான இணைய தளங்களிலும், `மணமகன் தேவை’ என‌ விளம்பரம் கொடுத்துள்ளனர். இதனால் இந்துஜா அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இந்துஜா கடந்த 12-ம் தேதி தனது திருமணத்துக்காகmarry.indhuja.com என்ற புதிய இணையதளம் தொடங்கினார். அதில் `மணமகன் தேவை’ என குறிப்பிட்டு, தனது வருங்கால கணவர் எவ்வாறு இருக்க வேண்டும், திருமணத்துக்குப் பிறகு எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்புகளை வெளியிட்டார். தனது பிறந்த தேதி, உயரம், எடை, விருப்பங்கள் உள்ளிட்ட தனது சுய குறிப்பையும் வெளியிட்டார்.

பி.இ. படித்துவிட்டு சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றி வரும் அவர், பயணம் செய்வது, புகைப்படம் எடுப்பது மற்றும் ஆங்கில திரைப்படங்கள் பார்ப்பது, வலைப்பூ எழுதுவது போன்றவை தனது பொழுதுபோக்கு என்று கூறியுள்ளார்.

புரட்சிகர நிபந்தனைகள்

திருமணத்திற்கு பிறகு, ”நீண்ட கூந்தல் வளர்த்துக்கொள்ள மாட்டேன். எப்போதும் ஆண்களைப் போல‌தான் முடி வெட்டிக்கொள்வேன். வழக்கம் போலவே எனது விருப்பப் படி வாழ்க்கையை வாழ்வேன். குடும்பப்பாங்கான மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது.

திருமணத்துக்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனக்கூறும் மணமகனுக்கு முன் னுரிமை வழங்கப்படும் என்பது போன்ற `புரட்சிகர’ நிபந்தனை களை விதித்துள்ளார். இதற்கு அவரது நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்துஜாவின் வித்தியாசமான `திருமண இணையதளம்’ இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத் தீயாக பரவியது. அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அவரது துணிச்சலான முடிவுக்கு பாராட்டு தெரிவித்துள் ளனர். கடந்த சில நாட்களில் அவரது இணையதளத்தை உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 3 லட்சம் பார்த்துள்ளனர்.

DATA:
Traffic Ranks for indhuja.com
Global rank  – 65,747
Rank in India   – 2,343 (Percent of Visitors 87%)
US Rank – 46,023  (Percent of Visitors 8%)
Other countries (~ 5%)
Upstream Sites
Which sites did people visit immediately before this site?
Site Percent of Unique Visits
  1.  facebook.com 48.8%
  2.  google.com 10.1%
  3.  google.co.in 2.1%
  4.  tripigator.com 1.5%
  5.  youtube.com 1.5%

பல்வேறு மகளிர் அமைப்பு களும், தன்னார்வ தொண்டு நிறு வனங்களும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ள னர். இந்துஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதிலும் இருந்து பலர் பூங்கொத்துகளை அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக இந்துஜா பேசும்போது, “நான் திருமணத் திற்கு எதிரானவள் இல்லை. அடிப்படையிலே நான் பகுத் தறிவுவாதி என்பதால் எனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தேன். முதலில் இத்தகைய இணையதளம் தொடங்கிய‌தை ஆட்சேபித்த எனது பெற்றோர், இப்போது எனது விருப்பத்தை புரிந்துகொண்டனர். மிக சாதாரணமாக தொடங்கப்பட்ட இணையதளத்துக்கு, இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.

http://marry.indhuja.com/

News

Read Previous

கட்டுப்பாடு

Read Next

மனமெலாம் மாறல் வேண்டும் !

Leave a Reply

Your email address will not be published.