சென்னை, தஞ்சை -கும்பகோணம் சுற்று வட்டரப்பகுதி மக்களின் கவனத்துக்கு ….

Vinkmag ad
சென்னை, தஞ்சை -கும்பகோணம் சுற்று வட்டரப்பகுதி மக்களின் கவனத்துக்கு ….
டாக்டர் அர்விந்த்  சிறந்த கண் மருத்துவர்
எனக்குத்தெரிந்த கண்மருத்துவர்களில் மிகவும் கெட்டிக்காரர், திறமையானவர்.
இவர் சொந்த ஊர் கும்பகோணம். இவருக்கு கும்பகோணம் மடத்து தெருவிலும்,சென்னையிலும் கண் மருத்துவமனைகள் உள்ளன
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் MBBS படித்துவிட்டு மதுரை அரவிந்த் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை( MS) மருத்துவம் படித்தவர்.
1.லண்டனிலுள்ள ராயல் காலேஜ் ஆப் ஆப்தால்மாலாஜி ல் உறுப்பினாராக சேர்ந்த முதல் முதுநிலை கண் மருத்துவர்
2.2006 ஆம் ஆண்டில் லேசர் முறை கண் சிகிச்சைக்காக சான்றிதழ் பெற்றவர்
3.இந்தியாவிலேயே முதன் முதலில் CUSTOMIZED TORIC MULTIFOCAL LENS IMPLANT செய்து சிறப்புப் பெயர் பெற்றவர்
4.இந்தியாவிலேயே முதன் முதலில் EXPRESS GLAUCOMA DRAINAGE DEVICE செய்து சாதனை படைத்தவர்
5.2010ஆம் ஆண்டில் தலை சிறந்த இளம் கண்சிகிச்சை மருத்துவருக்கான மிகவும் கவுரவமாக மதிக்கப்படுகின்ற BC ராய் விருது பெற்றவர்.
இங்கிலாந்தில் உள்ள ஜேம்ஸ பேஜெட் மருத்துவமனையிலும், கனடாவிலுள்ள கிம்பெல் கண் மருத்துவமனையிலும் பணிபுரிந்துள்ளார்
சென்னை வாசன் கண் மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அதிகாரியாகவும் ( the CHIEF MEDICAL OFFICER ) பணிபுரிந்துள்ளார்.
இதுவரை 25,000க்கு அதிகமான CATARACT ஆபரேசன்களும் 5000 LASIK ஆபரேசன்களும் செய்துள்ளார்.
எனது மனைவிக்கு இரண்டு கண்களுக்கும் 2011இல் ஒரு கண்ணுக்கும் 2014 அக்டோபர்15ஆம் தேதி மற்றொரு கண்ணுக்கும் மிக சிறப்பாக CATARACT ஆபரேசன் செய்தார். ஆபரேசன் செய்து ஒருமணி நேரத்திலேயே வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.என் மனைவியின் இரண்டு கண்களிலும் ஆபரேசனுக்குப்பிறகு எந்த ஒரு சிறிய பிரச்சனைகள் கூட இறை அருளால் இல்லை.
எனது ஒன்றுவிட்ட அக்காவுக்கு  தஞ்சையில் உள்ள பல கண் மருத்துவர்களும் இவர்களுக்கு இனி அறுவை சிகிச்சை செய்ய முடியாது கண்ணாடி மட்டும் அணிந்து சமாளித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். நான் எனக்கு மிகவும் அறிமுகமான நண்பர் டாக்டர் அர்விந்த்  அவர்களிடம் அறுவை சிகிச்சைக்காக  அனுப்பினேன்.சென்ற திங்கட்கிழமை 16/02/2015 அன்று டாக்டர் அரவிந்த் அவர்களிடம் அறுவை சிகிச்சை (ஆபரேசன் செய்து ) கண்பார்வை நன்கு தெரிகிறது. எனது இந்த அக்காவின் பக்கத்துவீட்டு பெண்மணியும் இதேபோல் அவரிடமே அதே நாளில்  டாக்டர் அர்விந்த்  அவர்களிடம் அறுவை சிகிச்சை (ஆபரேசன் செய்து ) கண்பார்வை நன்கு தெரிகிறது.
மிகவும் திறமையான அதே சமயம் சிலரைப்போல காசு பிடுங்கும் மருத்துவர்களிடமிருந்து மாறுபட்ட நல்ல பண்பாளர் எனது நண்பர் டாக்டர் அர்விந்த். 
தேவையற்ற செலவுகளை இழுத்துவிடும் பழக்கமில்லாத நல்ல பண்புள்ள மருத்துவர்.
நண்பர்களும், உறவினர்களும் தங்களுக்கோ தங்களது குடும்பத்தினர் அல்லது உறவினர்களுக்கோ கண்சிகிச்சை/மருத்துவம் செய்யவேண்டி இருப்பின் டாக்டர் அர்விந்த் அவர்களை அணுகி ஆலோசனை பெற்று ஆபரேசன் செய்துகொண்டு தெளிவான கண்பார்வையுடன் சந்தோசமாக வாழலாம்.
அவரது மருத்துவமனைகள் முகவரி
அர்விந்த் கண் மருத்துவமனை (Dr ARVIND VISION CARE)
13, மடத்து தெரு
சங்கர மடம் எதிரில்
கும்பகோணம் – 612 001
தொலை பேசி 0435-2420088 அலைபேசி 8925086413
அர்விந்த் கண் மருத்துவமனை (Dr ARVIND VISION CARE)
61, ரெட்டி பாளையம் சாலை ( REDDY PALAYAM ROAD )
வாவின் பேருந்து நிறுத்தம் அருகில்
முகப்பேர் மேற்கு
சென்னை –600037
தொலை பேசி 044-42605533 அலைபேசி 8807395008
இதை நீங்கள் விரும்பினால் தயவு செய்து லைக் செய்வதற்கு பதில் முடிந்தவரை நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் ஷேர் செய்யுங்கள் (பகிர்ந்து கொள்ளவும் )
அது பலரை சென்றடையும். நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கான நன்மையையும் உங்களுக்குக் கிடைக்கும்,
இன்சா அல்லாஹ்
அன்புடன்
வழுத்தூர் வாமா அ முகமது அலி
சென்னை

News

Read Previous

கட்டுரைப் போட்டிக்கு உதவி கோரி விண்ணப்பம்

Read Next

சென்னையில் மனநல ஆலோசனை மையம்

Leave a Reply

Your email address will not be published.