சித்திரங்குடி

Vinkmag ad

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வெளிநாட்டுப்பறவைகள் வந்து தங்கும் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.  இவற்றில் சித்திரங்குடி முக்கியமானது.  ராமாநபுரத்தின் வேடந்தாங்கல் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.  இங்குள்ள அடர்த்தியான கருவேலமரங்கள் பறவைகளின் இனவிருத்திக்கு ஏதுவாக  இருப்பதால், ஆண்டுதோறும்  வடகிழக்கு பருவமழை காலங்களில் ஆஸ்திரேலியா, ஐரோப்பாவிலிருந்து இங்கு ஏராளமான பறவைகள்  வருகின்றன.
மாவட்ட சுற்றுலா வரைபடத்தில் இவ்வூர் பறவைகளின் சரணாலயமாக இடம்பெற்றுள்ளது.  கல்விச்சுற்றுலாத்தலமாகவும், வெளியூர் மக்கள் வந்து  பார்வையிடும் இடமாகவும் இவ்வூர் இருக்கிறது.  முதுகுளத்தூர் அருகில் அமைந்துள்ள கருஞ்சிரங்குளம் என்ற ஊரும் ராமநாதபுரம் மாவட்டத்தில்  பறவைகளின்  சரணாலயமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சரணாலயங்களுக்கு குட்டிஎடர்ன், வெள்ளைக்கழுத்து நாரை என  பல வெளிநாட்டுப்  பறவைகள் பறந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள்,  கடலோரப்பகுதிகளுக்கு ஏராளமான வெளிநாட்டு  பறவைகள் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை வந்து தங்கிச்  செல்கின்றன. இதனால் வானம் பார்த்த பூமி எனப்பட்ட இம்மாவட்டம், இப்போது  சுற்றுலாப் பயணிகளை கவரும்  சரணாலய பெருமையில் மிளிர்கிறது.

News

Read Previous

அழுக்ககற்ற முனைந்துநிற்போம்

Read Next

“இந்தியா, சர்க்கரை நோயாளிகளின் தலைநகராக விளங்குகிறது’

Leave a Reply

Your email address will not be published.