Packet Tracer மூலம் நெட்வொர்க் பயிற்சி ஏடு

Vinkmag ad

Packet Tracer மூலம் நெட்வொர்க் பயிற்சி ஏடு

நெட்வொர்க் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களை அல்லது கருவிகளையோ ஒன்றோடு மற்றொன்று தகவல் தொடர்பு பாதை வழியாக அமைவதேயாகும். நெட்வொர்க் மூலம் பயனாளர்கள் ஒருவரோடு ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்திட முடியும்.packettracer

ஒரு மென்பொருளை பற்றி நம் படிக்கும் பொழுது அதை எவ்வாறு நமது கணினியில் நிறுவ வேண்டும் என்ற குறிப்பு மிகவும் அவசியம். அந்த மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப கருத்தும் வாசகர்கள் எதிர்பார்க்கும் ஒன்று. “Packet Tracer மூலம்நெட்வொர்க்” என்ற இந்த புத்தகம் மேற்குறிப்பிட்ட வாசகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து உள்ளது. சில தகவல் மற்றும் தொழில்நுட்ப சொற்களை அப்படியே பயன்படுத்தி இருப்பது இந்த புத்தகதின் மற்றும் ஒரு சிறப்பாகும். “packet tracer” மென் பொருளின் அனைத்து பயன்பாட்டையும், இரத்தின சுருக்கமாக தந்திருப்பது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் “என்ன பார்த்தோம்” பகுதி அனைவருக்கும் பயன் உள்ளதாக அமையும்.

இந்த புத்தகம் தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கும், பயிர்ச்சி வல்லுநர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நெட்வொர்க் தொழில்நுட்பம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் network என்ற படத்தினை படிக்கும் வாய்ப்பினை பெறுகிறார்கள்,ஆனால் கோட்பாடுகள் அறிந்த அளவிற்கு பயிற்சிகள் மேற்கொள்ளுவது இல்லை. நிறுவனங்கள் பயிற்சி பெற்ற மாணவர்களை விரும்புகிறார்கள். network கருவிகள் விலை உயர்ந்ததாக இருப்பதால் மாணவர்கள் பயிற்சி செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாமல் இருந்தது. Packet Tracer போன்ற simulator மென்பொருள் மூலம் பயிற்சி செய்திட முடியும். ஆங்கிலத்தில் பல நூல்கள் உள்ளன, முதல் முயற்சியாக தமிழில் எழுதியுள்ளோம். படிப்போர் தங்கள் மேலான கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முனைவர். ராம்குமார் லக்ஷ்மி நாராயணன்,

திரு. மகேந்திர குமார்.

 

மின்னஞ்சல் – rajaramcomputers@gmail.com & mahendrakumarselladurai@gmail.com

 

வெளியீடு: http://FreeTamilEbooks.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.

 

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

மின்னூல் வெளியீடு: சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

News

Read Previous

புன்னகை தொலைந்த தினம்

Read Next

முதுகுளத்தூர் தெருக்களில் விசில் சத்தம் கேட்டால் வருவது குப்பை வண்டி அலார்ட் ஆகும் பொதுமக்கள்

Leave a Reply

Your email address will not be published.