எங்கு செல்கிறது நமது சமுதாயம் ?. : திருமண செலவுகள்

Vinkmag ad

அன்பு நண்பர் பிரசன்னா அவர்களுக்கு

உங்கள் மின் அஞ்சல் மூலம் நல்ல பல கருத்துகள் பல நல்ல மனிதர்களை சென்று அடைகிறது. வாழ்த்துகள்.

சமீப காலமாக நமது சமுதாயத்தின் மீது என் மனதில் தோன்றிய ஒரு சிறிய வருத்தம் . அதை உங்கள் மூலமாக  நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள ஆசை.

 

சென்னையில் ஒரு திருமணத்திற்கு சென்று இருந்தேன்.

கல்யாண சத்திரம் நல்ல விசாலமான கூடம். நாள் வாடகை 2 லட்சம் .மேலும் மின்சார ,தண்ணீர் போன்ற இத்யாதிகளுக்கு 50000 ருபாய் .

என் உறவினர் இரண்டு தினங்கள் வாடகைக்கு எடுத்து இருந்தார் . 5 லட்சம் ருபாய் ஆயிற்று .மேற் கொண்டு சாப்பாடு ,போக்குவரத்து போன்ற வகைகளுக்கு12 லட்சம் ருபாய் ஆயிற்று. மற்ற செலவுகளுக்கு 2 லட்சம் ஆயிற்று. இது தவிர மணப்பெண்,மணமகன் நகை,துணிமணிகள் செலவு தனி.அவர்கள் திருமணத்திற்கு பிறகு தனி குடித்தனம் செய்வதற்கு வாங்கி கொடுத்த பொருட்கள் செலவு தனி .ஆக ஒரு திருமணத்திற்கு இன்று நடக்கும் செலவு கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் .

 

 

எங்கு செல்கிறது நமது சமுதாயம் ?.

 

கொஞ்சம் யோசிக்கலாமா நண்பர்களே .

 

என் மன ஆற்றாமை தாங்காமல் தான் இந்த அஞ்சலை வரைந்து உள்ளேன். ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்

 

அன்புடன்

கிருஷ்ணன் ஜி

News

Read Previous

தொழிலதிபராக என்ன தேவை?

Read Next

கோவையில் பாரதி விழா

Leave a Reply

Your email address will not be published.