கோவையில் பாரதி விழா

Vinkmag ad

 


11.12.2014

அலை அலையாய் பாரதிகள்…..ஆயிரம் பாரதிகள்                                                                                                                                                                            குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். பாரதியைக் கொண்டாடும் பாரதி திருவிழா குழந்தைகளின் கோலாகல சங்கமத்துடன் தொடங்குகிறது.கோவையில் பாரதி பாசறை நடத்தும் பாரதி திருவிழா நான்குநாட்கள் கொண்டாட்டத்தின் அங்கமாய் 1000 குழந்தைகள் பாரதி வேடமிட்டு அணிவகுக்கிறார்கள்.                                                                                                       பாரதி பிறந்த நாளான 11.12.2014 அன்று  கோவை ராம்நகர் காளிதாஸ் ரோட்டில் உள்ள சபர்பன் பள்ளி சாஸ்திரி மைதானம்தான் நம்ம ஊர் குழந்தை பாரதிகளின் குயில்தோப்பாக மாறப் போகிறது… மாலை 4 மணிக்கு மழலை பாரதிகள் தரிசனம் தருகிறார்கள்.

12.12.2014
————————————————————————————————————————————

பாரதி பல்லாயிரம்…

சொல்லாயிரம் தந்த சுடர்க்கவிஞன் பாரதியின் தமிழ் பேசி பல்லாயிரம் ரூபாய்களை பரிசாக வெல்லும்   வாய்ப்பை கோவை மாவட்ட பள்ளி மாணவ மாணவியர் பெறுகின்றனர்.பாரதி பாசறை நிகழ்த்தும் பாரதி திருவிழாவின் அங்கமாய் ‘பாரதி பல்லாயிரம்” எனும் தலைப்பில் இலக்கியப் போட்டிகள்

ராம்நகர் ராஜாஜிசாலையில் உள்ள சபர்பன் பள்ளியில் இன்று நடைபெறுகிறது…
பாரதி விழா மங்கலம்
மகாகவி பாரதிக்கு மாநகரே வியந்து பார்க்கும் விதமாய் விழா எடுத்து வருகிறது கோவை பாரதி பாசறை.இன்னும் மூன்று நாட்களுக்கு கலை இலக்கியம் என்று களைகட்டப் போகிறது..இன்று மாலை 5.30 மணிக்கு கோவை கிக்கானி பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் திரு.பவானி கிஷோர் குழுவினர் “பாரதி கானம்’ இசைக்கின்றனர்.
மாலை 6.30 மணிக்கு முனைவர் கவிஞர் சிற்பி விழா மங்கலத்திற்கு தலைமையேற்கிறார்.முனைவர் ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.முன்னதாக திரு.இயகோகா சுப்பிரமணியம் வரவேற்றுப் பேசுகிறார். திரு. ரமணிசங்கர் நன்றி நவில்கிறார்..இசைகேட்க, உரைகேட்க எல்லோரும் வருக
13.12.2014
 
அக்கினிக் குஞ்சுகள் அணிவகுப்பு
அரும்பும் அறிஞர்கள் படையெடுப்பு
கோவை பாரதி பாசறை வழங்கும் பாரதி திருவிழா நிகழ்ச்சிகள் இன்று காலை கோவை கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் நிகழ்கின்றன.இளைஞர்களுக்கு பாரதி எப்படியெல்லாம் சொந்தம் என்று கண்டும் கேட்டும் மகிழ ஒரு நல்ல வாய்ப்ப்பு.இளைஞர்களுக்கு பாரதி கனிவான தாய் என்னும் தலைப்பில் செல்வி.மு.தெய்வநாயகி, கண்டிப்பான தந்தை என்னும் தலைப்பில் இளம்கவி விவேக் பிரபு, அன்பான நண்பன் என்னும் தலைப்பில் செல்வி.ப.யாழினி, அறிவார்ந்த ஆசான் என்னும் தலைப்பில் அருட்சகோதரி மேரி வெரோனா ஆகியோர் பேசுகின்றனர்.இந்த அமர்விற்கு திருமதி மகேஸ்வரி சற்குரு தலைமையேற்கிறார். முன்னதாக திரு. அன்னபூர்ணா ஶ்ரீநிவாசன் வரவேற்றுப் பேசுகிறார்.திரு.ஜான்பீட்டர் நன்றி நவில்கிறார்.
 
யார் அந்த கண்ணம்மா??
விடுகதைக்கு விடைகாண வாருங்கள் ..
“பாரதியின் முதல் காதல்” நாட்டிய நாடகம்
 
பாரதி திருவிழாவின் அங்கமாய் “பாரதியின் முதல் காதல்”என்னும் தலைப்பில் நாட்டிய நாடகம் இன்று மாலை 5.30 மணிக்கு கிக்கானி பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் நிகழ்கிறது.
மகாகவியின் சுயசரிதையில் உள்ள கவிதைகளும் மரபின்மைந்தன் முத்தையாவின் துணை வரிகளுமாய் உருவாகியுள்ள இந்த நாட்டிய நாடகம் ஶ்ரீ சுருதிலயா கல்சுரல் அகாதெமியின் இயக்குநர் திருமதி பிரியங்கா வரதன் நெறியாள்கையிலும் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது.
பாரதி தன் கண்ணம்மாவை எங்கே,எப்போது பார்த்தார்? கண்ணம்மா வேறு செல்லம்மா வேறா? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண இன்று மாலை சரோஜினி நடராஜ் கலையரங்கம் வாருங்கள்.
 
பெட்டகமாய் பாரதி ..திறவுகோலாய் கவிஞர்கள்
இன்று பாரதி திருவிழா கவியரங்கம்
நாட்டிய நாடகம் முடிந்ததும் மாலை6.30 மணிக்கு “சொல்புதிது பொருள்புதிது “எனும் தலைப்பில் கவியரங்கம் நிகழ்கிறது.பாரதியின் சொல்லழகுப் பெட்டகங்களை தங்கள் கவிதைத் திறவுகோலால் கவிஞர்கள் திறக்கிறார்கள்.இந்தக் கவியரங்கிற்கு கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா தலைமையேற்கிறார்.கீழோர்க்கு அஞ்சேல் எனும் தலைப்பில் கவிஞர் தஞ்சை இனியன்,சிதையா நெஞ்சுகொள் எனும் தலைப்பில் கவிஞர் மகுடேசுவரன்,தேசத்தைக் காத்தல் செய் எனும் தலைப்பில் கவியன்பன் பாபு, தெய்வம்நீ என்றுணர் எனும் தலைப்பில் கவிஞர் ஆத்தூர் சுந்தரம் ஆகியோர் கவிதைகள் வாசிக்கின்றனர்.முன்னதாக முனைவர் ஏ.வி.வரதராஜ் வரவேற்றுப் பேசுகிறார்.இடம் சரோஜினி நடராஜ் கலையரங்கம்.
14.12.2014
சமூகமும் பாரதியும்…ஒரு சூடான சர்ச்சை
பாரதி திருவிழாவில் பட்டிமண்டபம்
கோவை பாரதி பாசறை வழங்கும் பாரதி திருவிழாவில் நான்காம் நாளான இன்று காலை 10 மணிக்கு பட்டி மண்டபம் நிகழ்கிறது. “இந்த சமுதாயம் பாரதியை முழுமையாக புரிந்து கொண்டுள்ளது,புரிந்து கொள்ளவில்லை”என்ற இருவேறு  தலைப்புகளில் நிகழும் பட்டிமண்டபத்திற்கு நடுவர் சொல்வேந்தர் சுகிசிவம் பங்கேற்கும் அறிஞர்கள், வழக்கறிஞர் த.இராமலிங்கம்,முனைவர் இராம சௌந்தரவல்லி, முனைவர் பர்வீன் சுல்தானா,முனைவர் நீலகண்டன்,முனைவர் இளங்கோவன்,எழுத்தாளர் கனகதூரிகா…பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் கேட்கவா வேண்டும்…!! குடும்பத்தோடு வாருங்கள் கோவை கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கிற்கு!!
பாரதி விருது ! பரவசப்பேச்சு!
பாரதி திருவிழாவின் நிறைவுவிழா! 
பாரதி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி 14.12.2014 மாலை 6 மணிக்கு கோவை கிக்கானி பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் நிகழ்கிறது. விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் இராமசுப்பிரமணியம் தலைமையேற்கிறார்.ரூ.25,000 ரொக்கமும் பாராட்டுப் பட்டயமும் கொண்ட பாரதி விருது,ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் திரு.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விழாவில் திரைப்பட இயக்குநர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை நிகழ்த்துகிறார். முன்னதாக திரு.என்.வி.நாகசுப்பிரமணியம் வரவேற்றுப் பேசுகிறார்.
இது கோவை மாநகரின் கூட்டுக் கொண்டாட்டம்..அவசியம் வாருங்கள்

 

News

Read Previous

எங்கு செல்கிறது நமது சமுதாயம் ?. : திருமண செலவுகள்

Read Next

சிறந்த தமிழ் நாவல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Leave a Reply

Your email address will not be published.