இணைய தொழில்நுட்பங்கள் – பகுதி இரண்டு

Vinkmag ad

இணைய தொழில்நுட்பங்கள் – பகுதி இரண்டு

internettechnology

ரவி நடராஜன்

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

சென்னை

 

உருவாக்கம்: ரவி நடராஜன்

மின்னஞ்சல்:  ravinat@gmail.com

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

முன்னுரை

சொல்வனம்’ இதழில் 2010 மற்றும் 2011 –ல் எழுதிய இணையம் சம்மந்தப்பட்ட கட்டுரை தொகுப்பு, இப்புத்தகம். இதில் இரு பகுதிகள் அடக்கம்.

முதல் பகுதி, ”எப்படி பல சேவைகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது?” என்ற கேள்வியை ஆராயும் மூன்று கட்டுரைகள். காற்றைத் தவிர இன்று உலகத்தில் இலவசம் என்று ஏதும் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனால்,எப்படி பல மின்னஞ்சல் சேவைகள், தேடல் சேவைகள், உலாவிகள் போன்ற பல மென்பொருட்களும் நிறுவனங்கள் இலவசமாக வெளியிடுகின்றன? எப்படி இவர்களுக்குக் கட்டுப்படியாகிறது? இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் எளிமையான கட்டுரைகள் இவை. முக்கியமாக இலவசத்திலும் பல வகைகள் உண்டு. இன்றைய வணிக உலகம் இத்தகைய இலவசங்களின் சக்தியை முழுவதும் புரிந்து கொள்ளவில்லை. இக்கட்டுரைகள், கணினி விஞ்ஞானம்/மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கு புரிவது மிக அவசியம்.

இரண்டாம் பகுதி, இணைய வியாபாரம் பற்றிய மூன்று கட்டுரைகள். 1990 -களில், இணையம் மூலம் வியாபாரம் செய்ய மிகவும் தயங்கிய உலகம், இன்று அதை ஏராளமாக நம்பவும் ஆரம்பித்துள்ளது. இணையமும், செல்பேசிகளும் தங்களது சக்தியில் வளர்வதால், புதிய வணிக முறைகள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. ’பணம்’ என்ற சொல்லுக்கே எதிர்காலம் என்ற ஒன்று இருக்குமா என்ற கேள்வி இன்று கேட்கப்படுகிறது. பல வகைகளிலும்,ப்ளாஸ்டிக் கார்டுகள், கரண்சி நோட்டுக்களின் வணிக உருவமாக மாறத் தொடங்கிவிட்டது. மேற்குலகில், பையில் 1டாலர் கூட இல்லாமல், பல மாதங்கள் தள்ளலாம். ஏனென்னில், ப்ளாஸ்டிக் கார்டுகள், கொண்டு எதையும் வாங்கலாம்.இன்று ‘பிட்காயின்’ என்ற மாற்று பண அமைப்பு பல சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. எப்படி, இணைய வணிகம் தொடங்கியவுடன், அரசாங்கங்கள் வரி வருமானம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சியதைப் போல, இன்று மாற்று பண அமைப்புகள் அரசாங்கங்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கிவிட்டது உண்மை. பணம் என்றால் என்னவென்று இன்று நாம் புரிந்து கொள்வது அவசியமாகிவிட்டது. இன்றைய நிலையில் பணம் என்பதற்கும், ‘டேடா’,அதாவது தரவு என்பதற்கும் வித்தியாசம் இல்லை. உதாரணத்திற்கு, என்னைவிட உங்களிடம் இரு மடங்கு பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எதை வைத்து இப்படிச் சொல்கிறோம்? உங்களது வங்கி கணக்கு ‘டேடா’ வைத்துத் தானே?

வெகு விரைவாக மாறி வரும் புதிய இணைய வணிக முறைகளை புரிந்து கொள்ளுதல் இன்றைய நாகரீகங்களுக்கு அவசியம். இதில் எல்லா தொழில்நுட்பங்களைப் போலவே, நன்மைகள் மற்றும் மறைமுக தீமைகளும் அடங்கியுள்ளன.இக்கட்டுரைகள், புதிய இணைய வணிக முறைகளை எப்படி அணுக வேண்டும், எங்கு உஷாராக இருக்க வேண்டும் என்று எளிமையாக விளக்கும் முயற்சி.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி.

பதிவிறக்க*

 

http://freetamilebooks.com/ebooks/internet-technologies-part-2/

News

Read Previous

அன்பே ஆருயிரோ

Read Next

யூனியன் கார்பைடும் ‘மேக் இன் இந்தியா’வும்: மோடியின் பார்வைக்கு ஒரு கடிதம்

Leave a Reply

Your email address will not be published.