கடலோரக் கூடார வாசிகள்===ஆர் எஸ் கலா இலங்கை

Vinkmag ad

கடலோரக் கூடார வாசிகள்===ஆர் எஸ் கலா இலங்கை

ஐலேசா ===ஐலேசா
ஐலேசா  ===ஐலேசா
ஏலேலோ  ===ஏலேலோ ==
ஐலேசா………\

துடிக்கும்  மீனை தூக்குப் போடு
கண்ணையா……ஐலேசா
கூடயை நிறைச்சிக்கோ
பொன்னையா……ஐலேசா
கொட்டிப்புட்டு துட்டு
வாங்கு சுப்பையா….ஐலேசா
பெட்டிக்குள்ளே துட்டைப் போடு
குப்பம்மா……ஐலேசா

ஐலசா===ஐலசா===
ஐலேசா….ஐலேசா…
ஏலேலோ…..ஏலேலோ…
ஐலேசா….ஐலேசா…..\

ஐயா  வாரார் …. ஐலேசா
கை மேலே பையைப் பார்…ஐலேசா
கண்ண மூக்கப் பார்த்து
அள்ளப் போரார்….ஐலேசா
கவணமாகப்  பாத்துகோடா…ஐலேசா
வாயாடியே வென்று விடுவார்….ஐலேசா
வாதாடப்  பழகிக்கோடா…..ஐலேசா…..\

ஐலேசா  ===ஐலேசா
ஏலேலோ===ஏலேலோ
ஐலேசா===ஐலேசா…..\

துண்டாகப் போன மீன்
எடுத்து சின்னம்மா….ஐலேசா
தூக்கலாக  உப்பு போட்டு…ஐலேசா
உச்சி வெயிலில் வெட்ட வெளியில்
போட்டு…..ஐலேசா
பக்குபமாக கருவாடாய் எடுத்து
விடு சின்னம்மா….ஐலேசா…..\

ஐலேசா===ஐலேசா
ஏலேலோ===ஏலேலோ
ஐலேசா===ஐலேசா…..\

கட்டு மரம ஏற வேண்டும்
மாமாவே மாமாவே  …ஐலேசா
கட்டுச் சோறு கட்டிப்புட்டேன்
மாமாவே  மாமாவே….ஐலேசா
கருவாடும் வறுத்து வைத்தேன்
மாமாவே  மாமாவே….ஐலேசா
கண்ணாத்தா என் கையாலே
ஆக்கி வைத்தேன் மாமாவே
என் மாமாவே…..\

ஐலேசா===ஐலேசா
ஏலேலோ===ஏலலோ
ஐலேசா==ஐலேசா…..\

கோழி கூவும் நேரம் நான்
வீடு வருவேன்….ஐலேசா
எரியும் விளக்கை தூண்டி
விட்டு காத்திரு கண்ணம்மா….ஐலேசா
கூடாரத்தை மூடிக்கோ கண்ணம்மா…ஐலேசா
கூடாத பசங்க நடமாட்டம் உள்ளதடி…ஐலேசா….\

ஐலேசா=====ஐலேசா
ஏலேலோ=====ஏலேலோ
ஐலேசா===ஐலேசா……\

கூடார வீட்டுக்குள்ளே மாமாவே
மாமாவே….ஐலேசா
கூராண அருவாள் இருக்கு
மாமாவே  மாமாவே…ஐலேசா
கூடவே துணிவும் இருக்கு
மாமாவே மாமாவே…..ஐலேசா
கூவி உரக்க அழைக்க
குரலும்  இருக்கு மாமாவே
மாமாவே….ஐலேசா…..\

ஐலேசா===ஐலேசா
ஏலேலோ===ஏலேலோ
ஐலேசா===ஐலேசா….\

அப்படி தள்ளுடா ..ஐலேசா
இப்படி பிடிடிடா…ஐலேசா
ஐலேசா…..ஐலேசா….\

News

Read Previous

ஆசிரியர் அப்துல்லாவுக்கு ஆண் குழந்தை

Read Next

சென்னையில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு

Leave a Reply

Your email address will not be published.