தமிழ் ஸ்டுடியோ

Vinkmag ad
தமிழ் ஸ்டுடியோ 7 ஆம் ஆண்டில்….

நண்பர்களே 2008 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ் ஸ்டுடியோவிற்கு ஏழாவது பிறந்த நாள். இந்த ஏழு ஆண்டுகளில் தமிழ் ஸ்டுடியோ என்ன செய்திருக்கிறது என்கிற பட்டியலை கீழே கொடுத்துள்ளேன். தமிழ் ஸ்டுடியோவின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் என்னுடைய முதல் புத்தகமான நாடு கடந்த கலை வெளியீட்டு விழா இரண்டும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. நண்பர்கள் இந்த நிகழ்வில் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி…

தமிழ் ஸ்டுடியோவின் பயணத்தில்….

இன்றுவரை:

* 1020 நிகழ்ச்சிகள்
* 2650 குறும்படங்கள் திரையிடல்
* 168 ஆவணப்படங்கள் திரையிடல்
* 278 உலகப் படங்கள் திரையிடல்
* 205 இந்தியாவின் ஆக சிறந்த திரைப்படங்கள் திரையிடல்
* 55000 உறுப்பினர்கள்
* லட்சக்கணக்கான பார்வையாளர்கள் (தமிழ் ஸ்டுடியோ & பேசாமொழி இணையத்தளத்திற்கு)
* 278 வெள்ளித்திரை படைப்பாளிகளுடன் கலந்துரையாடல்
* 22 மாவட்டங்களில் குறும்பட / ஆவணப்படங்கள் திரையிடல்
* 10 பிரம்மாண்டமான பயிற்சிப் பட்டறைகள் (புகைப்பட பயிற்சி, சிறுகதை பயிற்சி உட்பட)
* இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
* தமிழில் மாற்று சினிமாவுக்கான இணைய இதழ் (www.pesaamoli.com)
* சினிமா தொடர்பான முக்கியமான நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்துக் கொண்டிருப்பது
* சிறுவர்களின் திரைப்பட ரசனை வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் திரையிடல்
————————–—-———————-——–———————————-
தமிழ்நாட்டில் முதல் முறையாக குழந்தைகளுக்கான உலகத் திரைப்பட விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடத்தியது
————————–—-———————-——–———————————-
இந்தியாவில் வேறெங்கும் சாத்தியப்படாத திரைப்பட பயிற்சி இயக்கம் படிமை, இப்படியான ஒரு பயிற்சி இயக்கம் இரானில் மட்டுமே உள்ளது
————————–—-———————-——–———————————-
புழக்கத்தில் இருந்து அறவே அழிந்துப் போன கதை சொல்லல் முறையை மீண்டும் இணையத்தில் கொண்டுவந்தது…
————————–—-———————-——–———————————-
குறும்படங்களுக்கான சந்தை மற்றும் போட்டிகளை அதிகளவில் உருவாக்கியதில் பங்கு, குறும்படங்களை தொடர்ச்சியாக திரையிட்டும் விவாதித்தும் அதற்கான தளத்தை உருவாக்கியது
————————–—-———————-——–———————————-
2010 ஆம் முதல் சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்காக தமிழ் நாட்டில் முதல் முறையாக உருவாக்கிய லெனின் விருது
————————–—-———————-——–———————————-
2014 ஆம் ஆண்டு முதல் குறும்படங்களுக்கான பாலு மகேந்திரா விருது 
————————–—-———————-——–———————————-
பிரான்சில் மட்டுமே நடைபெற்று வந்த திரைப்படங்களைப் பார்க்கும் ரசனை முறையை பௌர்ணமி இரவாக தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தியது
————————–—-———————-——–———————————-
ரசனை மாற்றத்திற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்டால் தலைப்பில், தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில், தினசரி திரைப்படங்கள் திரையிடல் நடத்துவது
————————–—-———————-——–———————————-
அரசு தணிக்கை மற்றும் கும்பல் தணிக்கையால் திரையரங்கிற்கு வர முடியாத படங்களை திரையிடுவதற்கான வெளியை உருவாக்கியது.

——————————————————————————————————————
தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு தொடக்க விழா
&
நாடு கடந்த கலை நூல் வெளியீட்டு விழா…

23-11-2014, ஞாயிறு. மாலை 6 மணிக்கு.

பிரசாத் லேப், சாலிகிராமம். (AVM ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலை)

சிறப்பு அழைப்பாளர்கள்:

படத்தொகுப்பாளர் B.லெனின்
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது
நடிகர் சார்லி
இயக்குனர் மிஷ்கின்
இயக்குனர் ராம்
இயக்குனர் விக்ரம் சுகுமாரன்
எழுத்தாளர் பவா செல்லதுரை
இயக்குனர் அம்ஷன் குமார்

பதிப்பாசிரியர்: ஓவியர் சீனிவாசன்

நிகழ்வில் இசையமைப்பாளர் பிரபா “கீ போர்டு” இசைக்கவிருக்கிறார்.

அனைவரும் வருக…

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 9840698236


அன்புடன் 


தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com

News

Read Previous

முக்கந்தர் சாகுல் ஹமீது வஃபாத்து

Read Next

காந்தி கண்ட கனவு கிராமம் ‘காசாங்காடு’!

Leave a Reply

Your email address will not be published.