‘மெட்ராஸ் ஐ’ – கண் நோய் பாதிக்காமல் தடுப்பது எப்படி? அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் விளக்கம்

Vinkmag ad
மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் வேகமாக பரவுகிறது. இந்த நோய் கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் வரக்கூடியது. ‘அடினோ’ என்ற வைரஸ் கிருமி மூலம் கண் நோய் பரவுகிறது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்த பலர் சிகிச்சை பெற்று செல்வதை காண முடிகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இது பாதிக்க கூடியது.

இதுகுறித்து அகர்வால் கண் மருத்துவமனையின் கண் ஆலோசகர் டாக்டர் சவுந்தரி கூறியதாவது: ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. தினசரி 10 நோயாளிகள் கண் நோய் பாதித்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்நோய் பாதித்தவர்களை மற்றவர்கள் பார்ப்பதனால் தங்களுக்கும் இந்நோய் பரவும் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிகப்பாக இருக்கும். ரத்த வீக்கம் காணப்படும். கண்ணில் இருந்து நீர் வடியும். கண் உருத்தல் இருக்கும்.
காலையில் கண் விழிக்கும்போது கண்களை திறக்க கடினமாக இருக்கும். கண்கள் ஒட்டி காணப்படுவது போன்றவை கண் நோயின் அறிகுறிகளாகும்.
கண்ணில் இருந்து வடியும் நீரினால் இந்நோய் மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதிப்புள்ள அந்த நீர் பிறர் கையில் படும்போது அவருக்கு இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஒரு குடும்பத்தில் ஒரு வருக்கு வந்தால் மற்றவர்களுக்கு வரும். கண் நோய் பாதித்தவர்கள் படுக்கை, துண்டு போன்ற வற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அதன் மூலம் அவை பரவும்.
எனவே கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண் நோய் வந்தால் குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை இருக்கும். அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகி முறைவான சிகிச்சை பெற வேண்டும். மருந்து கடைகளில் சொட்டு மருந்து வாங்கி தானே போட்டு கொள்ளக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

News

Read Previous

புண்ணியத் தளிர்வுகள் !

Read Next

நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா??

Leave a Reply

Your email address will not be published.