அரபிமொழித்திறனை மேம்படுத்திக்கொள்ள சிறந்த வழி

Vinkmag ad

அரபிமொழித்திறனை மேம்படுத்திக்கொள்ள சிறந்த வழி
தமிழ்ப்பதிப்புகளாக அரபிமொழி இலக்கணம், அரபிமொழிப் பாடநூல்கள், நடைமுறை அரபிமொழி மற்றும் அரபி-தமிழ்ச்சொல்லகராதி ஆகிய நூல்கள்

அரபிமொழியும் தமிழ்மொழியும் செம்மொழிகளாகத் திகழ்கின்றன. இஸ்லாத்திற்கு முன்பிருந்தே இவ்விரு மொழி களுக்கிடையிலான உறவின் காரணமாகவும் திருமறை அரபிமொழியில் அருளப்பட்ட காரணத்தினாலும் மற்ற உலக நாடுகளைப்போல் தமிழர்களும் அரபிமொழியினைக் கற்க முற்பட்டனர். பல அறிஞர்கள், ஆன்மீகப் பெரியார்கள் உருவாகி பெரும்பணியாற்றியுள்ளதோடு திருமறை அருளப்பட்ட இம்மொழியும் மார்க்க விளக் கங்களும் மக்களுக்கு போதிக்கப்படவேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழகம் மட்டுமல்லாது இலங்கை யிலும் பல அரபிக்கல்லூரிகள் நிறுவப்பட்டு ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்கள் கற்றுத்தேர்ந்து மார்க்கப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் வழிவகுத்தனர்.

அரபிக்கல்லூரிகளின் இம்முயற்சியினாலும் உலமாப்பெருமக்களின் உழைப்பினாலும் தமிழகமெங்கும் அனைத் துப் பள்ளிவாசல்களிலும் இமாம்கள் ஆலிம்களாகவே இருப்பதோடு சிறப்பான பணிகளை ஆற்றியும் வருகின் றனர். மார்க்கக் கல்விக்கான ஆதாரம் அரபிமொழியிலுள்ள மூல நூல்கள் என்ற அடிப்படையில், அரபிக்கல்லூரி களில் பயிலும் மாணவர்களான வருங்கால ஆலிம்களின் இளைய தலைமுறையினர் என்ற வகையில் தமிழ் மொழி மட்டுமல்லாது அரபிமொழியிலும் சிறந்த ஆற்றலையும் திறனையும் உருவாக்கிக்கொண்டால் மட்டுமே அரபிமொழி மூல நூல்கள், திருக்குர்ஆன் மற்றும் நபிமொழித்தொகுப்புகளின் விரிவுரைகளையும் மார்க்கச் சட்ட நூல்களையும் ஆய்ந்தறியும் திறனைப்பெறுவர். அரபிமொழித்திறன் மற்றும் இலக்கியப் பண்புகளை மேம் படுத்திக்கொள்ள அரபிக்கல்லூரிகளில் பயிலும் இந்த ஐந்தாண்டு காலத்தினை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படவேண்டும்.

அரபிக்கல்லூரிகளில் முதல் மூன்றாண்டுகள் அரபிமொழிப்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், அடுத் தக்கட்டப் பயிற்சியில் கவனம் செலுத்தப்படுவது முக்கியமானதாகும். பாடத்திட்டத்திலுள்ன நூல்கள் அரபி நூல்கள் என்ற வகையில் தேர்ச்சிபெற்ற உலமாப்பெருமக்களான பேராசிரியர்கள் சீரான முறையில் விளக்கங் களை அளித்து மாணவர்களை அடுத்தத் தலைமுறைக்கான ஆலிம்களாக உருவாக்கி, சான்றளித்து வழிகாட்டு தல்களும் அளிப்பதுடன் ஆண்டு விழாக்களில் மார்க்கக்கல்வி அனுபவமும் ஆன்மீகமும் ஒருங்கே பெற்ற சிறந்த உலமாக்களை அழைத்து சிறப்புரையாற்றி அவர்களுடைய பொறுப்புக்களை உணர்த்திக் களமிறக்கு கின்றனர். ஆலிம்களாகச் சிறந்து விளங்கவிருக்கும் இந்த சான்று பெறுவோர்களின் வாழ்வில் இது மிகவும் முக்கியமான நிகழ்வு மட்டுமல்லாது அனுபவப் பரிமாற்றம் மற்றும் செறிவூட்டும் அமர்வாகவும் அமைகின்றது என்றால் அது மிகையாகாது.

ஆலிம்கள், அறிஞர்கள், வழிகாட்டிகள் மற்றும் வழிநடத்துபவர்கள் என்ற அந்தஸ்தினைப் பெற்று விளங்கும் இளைய தலைமுறையினரான உலமாக்கள் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சிக்கல் களை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், மார்க்கப்பற்றுள்ளவர்கள் பல்வேறு துறைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வினை மார்க்க அறிஞர்களிடம் எதிர்ப்பார்ப் பதும் நாடியிருப்பதும் இயல்பான ஒன்றே. இவ்வகையில், இன்றைய முஸ்லிம்களின் பிரச்சினைகளை அறிந்து அதற்கான தீர்வினைக் கண்டறியும் வகையில் மார்க்க அறிவின் அடிப்படையிலும்,அதற்கான ஆதாரங்களின் அடிப்படையிலும் ஆய்ந்தறிந்து மற்ற அறிஞர்களுடன் ஆலோசனை கலந்து தீர்வுகாண்பது அவசியமாகும். ஆய்ந்தறியும் அறிவாற்றல் மூல நூல்களின் மொழியான அரபிமொழித்திறனை அடிப்படையாகக் கொண்டது என்ற வகையில், இம்மொழித்திறனை மேம்படுத்தும் முயற்சியும் அரபிக்கல்லூரிகளிலேயே மூத்த அறிஞர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது முக்கியமானது.

மற்ற கல்விநிலையங்களில் பல்வேறு கலைகள் கற்பிக்கப்படுவது போன்றே அரபிக்கல்லூரிகளிலும் மார்க்கக் கலைகளும் அரபிமொழி இலக்கியமும் கற்பிக்கப்படுகின்றது. சீரான முறையில் கற்பிக்கப்பட்டாலும் கற்றுக் கொள்வது ஒரு மாணவன் தாமே கற்றுக்கொள்ளும் கற்றறியும் செயலுமாகும், ஏனெனில், கற்பிக்கப்பட்டா லும் சிலர் அறியாதவர்களாகவே ஆகிவிடுகின்றளர். கல்வியுடன் அனுபவமும் இருக்கவேண்டும், இவ்வகையில் அரபிமொழியுடனான அனுபவம் ஒரு தனித்தன்மை கொண்டதாகும். அரபிமொழிச்சொற்கள் அனைத்தும் மூலச்சொற்களிலிருந்து ஒரே சீரான முறையில் பல்வேறு துறைகளிலும் நிலைகளிலும் அதற்கான பொரு ளைத் தெளிவுடன் எடுத்துரைக்கும் வகையில் அதற்கான குறிப்பிட்ட வடிவங்களில் வருவிக்கப்படுகின் றன. இந்த வருவிக்கப்படும் முறை விதிமுறைகள் மற்றும் பல்வேறு இடைச்சொற்களின் செயல்பாட்டின் அடிப்படையிலானது என்பதைக் கருத்தில் கொண்டு கவனத்துடன் ஒருவாசகத்தினைப் படிக்கும்போது அதற்கான பொருளைத் திருத்தமாக அறியமுடிகிறது. வாசித்து விளங்கிக்கொள்ளும் அனுபவம் ஆய்ந்தறியும் ஆற்றல் உருவாவதற்கு அடிப்படையாக அமைகிறது. இதனை அனுபவமிக்க உலமாப்பெருமக்கள், பேராசிரியர் களின் மேற்பார்வை மற்றும் ஆதரவுடன் மட்டுமே பெறமுடியும், இதுவே முதாலஃஅஹ் முறை எனப்படும்.
அரபிமொழியில் ஒரு வாசகத்தினை வாசித்து அதற்கான பொருளை அறிவது அரபி இலக்கண அறிவு, மொழி நடை, இலக்கிய நயம் ஆகிய அனைத்தும் ஒருங்கே பெற்றிருந்து கவனத்துடன் பொருளை அறிய முயற்சிப் பதன் மூலமே இயலும். முதாலஆ முறை மேற்கொள்ளும் நிலையில் இலக்கண விதிமுறைகளை அறிந்திருந் தாலும் சில நேரங்களில் சந்தேகங்களும் விளங்காப்புதிர்களும் காணப்படும். அதனை அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் உலமாப்பெருமக்கள் தெளிவாக எடுத்துக்கூறுவர், ஆகவே, இந்த முதாலஆ பயிற்சி அரபிக்கல்லூரிகளில் அளிக்கப்படவேண்டும். தாய்மொழியில் கல்வி கற்பது சிறந்தது என்ற முறையிலும் அரபிக்கல்லூரிகளில் தமிழ் பயன்படுத்தப்படுகின்ற காரணத்தினாலும் தமிழில் பொருள் கூறுவதும் பயனுள்ள தாக இருக்கும் என்பதாலும் மாணவர்களும் ஆசிரியர்களும் அரபிமொழி தமிழ்ச்சொல்லகராதிகளைப் பயன் படுத்துவது இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது.

முதாலஆ மற்றும் நூலகப் பயன்பாட்டினை ஊக்குவித்தல் மற்றும் அதற்கான சாதனங்கள்:

தமிழ் மொழியில் அரபி இலக்கண நூல்கள், அரபித்தமிழ் அகராதிகள் மற்றும் நடைமுறை அரபிமொழி நூல் களில்லாதிருந்த காலம் வரை முதாலஆ பயிற்சியளிப்பது சற்று கடினமாகவே இருந்து வந்தது மற்றும் பெரும் பாலான கல்லூரிகளில் அதற்கான முக்கியத்துவம் அளிக்கப்படாமலிருந்தது என்றால் அது மிகையாகாது. தாமாகவே மொழித்திறனை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியில் மாணவர்கள் முற்பட்டாலும் அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது பல்வேறு சொற்களின் பொருளை அறிந்துகொள்ள முடியாத நிலை. ஓவ்வொரு சொல்லும் அதன் வருவிப்பின் அடிப்படையில் அதற்கான பொருளைத்தரும் என்ற வகையில் அதனைச் சரியாக விளங்கிக்கொள்ளாத நிலையில் அந்த வாசகத்தைக் கைவிடும் நிலை ஏற்படுகின்றது, சில நேரங்களில் உடன் பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு சில சொற்களுக்கான பொருளை நேரடியாகவே எடுத்துச் சொல்வதும் இயலாது போகிறது, இதற்கான தீர்வு அகராதிகளே. ஆகவே, இம்முறை பயனள்ளதாக அமை வதற்கான சாதனங்களில் அரபிமொழி இலக்கண நூல்கள் மற்றும் அரபி தமிழ்ச்சொல்லாகராதிகள் முக்கிய மானவை.

எழுத்தாற்றலைப் பெறுவதற்கு எழுதிப்பழகுவதும் பேச்சாற்றலை மேம்படுத்திக்கொள்ள பேசிப்பழகுவதும் இயல் பானவையே. முதாலஆ மூலம் மொழித்திறனையும் ஆய்ந்தறியும் ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்ளவேண்டும்
என்று விரும்புவோர் அதற்கான முயற்சியினைப் படிப்படியாக மேற்கொள்வது சிறந்தது, ஏனெனில், ஒரு நூலை எடுத்து வாசிக்க முற்படும் நிலையில் நூலாசிரியரின் மொழிநடை, இலக்கிய நயம் மற்றும் சொல்வளம் ஆகிய வற்றுடன் ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்படும், இதனால் ஆர்வ முனைப்பும் பாதிக்கப்படும். ஆகவே, இதற் கான பயிற்சியும் படிப்படியாக அளிக்கப்படவேண்டும். இப்பயிற்சிக்கு ஏற்ற பல பாடப்புத்தகங்கள் இருந்தாலும், எளிமையாகவும் பயனுள்ள முறையிலும் இதற்காக மொழிபெயர்ப்புப் பயிற்சியினை அளிக்க (அரபி-தமிழ், தமிழ்-அரபி), முதல் மூன்று ஆண்டுகளிலேயே நிஸ்வான் கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் மின்ஹாஜ் அல் அரபிய்யாவின் தமிழ்ப்பதிப்பினை அனைத்து அரபிக்கல்லூரிகளிலும் கூடுதலாகப் பயன்படுத்தலாம்.

அரபிமொழியில் பேச, உரையாட மற்றும் நடைமுறை அரபிமொழிக்கான எளிய வழி:

அரபிமொழியில் பேசுவதற்கு அதற்கான உரையாடும் சுற்றுச்சூழல் தேவை, மாணவர்களிடையே தயக்கமும் தன்னம்பிக்கையும் குறைவாக உள்ள காரணத்தினால் இந்த சுற்றுச்சூழல் உருவாவதில்லை, ஊக்குவிக்கப்பட வேண்டும். நடைமுறை அரபிமொழி அல்லது பேச்சு வழக்கிலுள்ள மொழியும் சீரான இலக்கிய மொழியினையே அடிப்படையாகக்கொண்டதாகும் என்ற வகையில் நாம் கற்கும் அரபிமொழியும் (திருக்ஃகுர்ஆன், நபிமொழித் தொகுப்புகள் மற்றும் மார்க்க நூல்களின் சீரான இலக்கிய மொழி)அரபு நாடுகளில் வழக்கிலுள்ள மொழியும் வேறுபட்டது என்ற கருத்து இருந்து வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றே கூறவேண்டும். வழக் கிலுள்ள சொற்களும் மூலச்சொற்களை அடிப்படையாகக் கொண்டவையே என்பதால், முறையாக அரபி மொழியினைக் கற்பவர் அம்மொழியில் உரையாடும் ஆற்றலை இயல்பாகவே பெற்றவர். அனுபவமின்மையின் காரணத்தினால் இது ஒரு வேறுபாடாகவே கருதப்படுகின்றது.

நாம் கற்கும் இலக்கியங்கள், மார்க்க நூல்கள் மற்றவை யாவும் பல தலைப்புகளில் எழுதப்பட்டவை என்ற வகையில் அங்கே பயன்படுத்தப்படும் சொற்களும் அதனையே சார்ந்தவைகளாக இருப்பதால் நம்முடைய அன்றான உரையாடல்களுக்கு உகந்தவையல்ல. ஆக, கற்றறிந்த சொற்களில் பெரும்பாலானவை பயன்படுத்த முடியாத நிலையில் நடைமுறை அரபிமொழிக்குத் தேவையான சொற்களின் பற்றாக்குறை ஏற்பட்டு உரையாட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒரு அந்நிய நாட்டிற்குச் செல்லும்போது நாம் அந்நாட்டுச் செலாவணி (பணத்தை) எடுத்துச்செல்கிறோம். நம்மிடம் பணம் இருப்பின் தேவையான அனைத்து அரிய பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம், பணம் இல்லாத நிலையில் தேவையானவை மற்றும் விரும்பியதை ருசித்துப் பார்க்கவும் இயலாது போகும். அவ்வாறே, அரபிமொழியில் இலக்கண, இலக்கிய அறிவு இருந்தும் சொல்வளமில்லாத நிலையில் நாம் கூற விரும்புவதையும் எடுத்துச்சொல்ல முடியாத நிலையில் தவிக்கவேண்டி யிருப்பதோடு ஒரு தடையாகவும் ஆகிவிடுகிறது.
இந்தக் குறைவினைப் போக்கும் நோக்குடன் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு பல பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பில் பாடத்திட்டத்தில் இடம்பெறும் EASY STEPS TO FUNCTIONAL ARABIC என்ற நூலின் தமிழ்ப்பதிப்பு “நடைமுறை அரபிமொழி: எளிய வழி” வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலில் பொதுவாகவே பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள், பல்வேறு சூழ்நிலை மற்றும் இடங்களில் பேசப்படும் மாதிரி உரையாடல் கள் பல்வேறு சூழ்நிலை, இடங்களுக்கான பொதுவான அன்றாட வாழ்வில் தேவையான சொற்கள், வகைப் படுத்தப்பட்ட சொற்கள், பல்வேறு தேவைகளை விவரிக்கும் வினைச்சொற்கள், அவற்றைத் தேவைக்கேற்ப மாற்றியமைத்துப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில்; அடிப்படை இலக்கணக் குறிப்புகள் விளக்கங்கள், ஏடுத்துக்காட்டுக்கள் அனைத்தும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொற்றொடர்கள், பொதுவான, வகைப்படுத்தப்பட்ட கலைச்சொற்கள், வினைச்சொற்கள், அனைத்துமே தமிழில் அவற்றிற்கான பொருளை அடிப்படையாகக்கொண்டு அகரவரிசையிலேயே தொகுக்கப்பட்டிருப்பதால் Pick and Choose (Use)  முறையில் தேவையான சொற்கள், வினைச்சொற்கள் ஆகியவற்றை இந்த நூலிலிருந்தே தமிழிலுள்ள சொற்பட்டியல்களி லிருந்தே எளிதாகவே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் அமைப்பிலான பயனுள்ள நூலாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், தரப்பட்டுள்ள அனைத்து அரபிச்சொற்களின் உச்சரிப்பும் தமிழ்நடையிலேயே கொடுக்கப்பட்டும் உள்ளது.

ஆகவே, கற்றுத்தேர்ந்த பின்னும் இயலாமைக்கு ஆளாகிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் பலருடைய நிலையை மாற்றி அதற்கு முன்னரே கற்றுத்தேரும் சூழ்நிலை மற்றும் ஆர்வ முனைப்பின் சூடு தணிவதற்கு முன்பே அரபிக்கல்லூரிகளிலேயே வழிவகை செய்து தரவேண்டும் என்பது எம்முடைய பணிவான கருத்து.

கற்பிப்பது பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்களின் முயற்சி, கடின உழைப்பு மற்றும் அனுபவப் பரிமாற்றத்தின் அடிப்படையிலானது. கற்றறிவது ஒரு தனி நபர் (மாணவர்கள்) செயலாகும். இது தாமாகவே செய்யப்பட வேண்டும் என்ற வகையில் அவர்கள் தாமாகவே முற்படும்போது தேவையான ஆதாரங்களில்லாது போகின்றன. இந்நிலையில், உரிய நேரத்தில் அவர்களை உருவாக்கும் அரபிக்கல்லூரிகளும் மார்க்க, அரபிமொழிக் கல்விக்காக வாரிவழங்கும் நல்லுள்ளம் படைத்தோரும் வசதிகளை அவர்களுக்கு உண்டாக்கித்தரவேண்டும். கல்வி கற்கும் காலக்கட்டத்தில் அனைத்துத் தேவைகளையும் குறைவின்றியும் நிறைவாகவும் செய்து கொடுக்கும் அதே நேரத்தில் அவர்களுடைய இந்த தேவையினையும் பூர்த்தி செய்யும் வகையில் அவர்க ளுடைய அரபிமொழித்திறன் மற்றும் ஆய்ந்தறியும் ஆற்றலை உண்டாக்கிக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள் ளவும் உதவும் வகையில், உற்ற நண்பனாக, உடனடி பார்வைக்கான நூல்களாக (Ready reference) இந்த நூல்கள் அவர்கள் ஒவ்வொரு வருக்கும் இலவசமாகவே அளிக்கப்படவேண்டும்.

இந்நூல்களை அவர்கள் ஐந்தாண்டு காலம் பயன்படுத்திக் கொள்வதோடு தேவையான அனைத்து விளக்கங்களையும் ஆசிரியர் கள், உலமாப்பெருமக்களின் உதவியோடு பெற்று, அவற்றைத் தம்முடனே எடுத்துச் சென்று என்றும் பயனடைந்து மேலும் மேலும் தம்முடைய அனுபவத்தினையும் ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்ளமுடியும்.
இதற்காக கீழ்காகாணும் நூல்கள் அன்பளிப்பாக அளிக்கப்படலாம்:
(1). மின்ஹாஜ் அல் அரபிய்யா (5 பாகங்கள்) (2). அரபிமொழி இலக்கணம் (தமிழில் முதன்முதலான நூல்)
(3). நடைமுறை அரபிமொழி: எளிய வழி (4). ஃகாமூசுல் அவிஃப் அரபிமொழி தமிழ்ச்சொல்லகராதி

அனைவருக்கும் அரபிமொழி:

அரபிமொழி திருமறை அருளப்பட்ட மொழி என்ற வகையில் அனைவராலும் கற்கப்படவேண்டும் என்பது முக்கியமானது. அரபிக்கல்லூரிகளின் பாடத்திட்டத்திலுள் பெரும்பாலான நூல்கள் திருமறை விரிவுரைகள், நபிமொழித்தொகுப்புகளி மற்றும் மார்க்கச்சட்;ட நூல்கள் அரபிமொழியில் இருப்பதால் அரபிமொழிக்கு முக்கியத் துவம் அளிக்கப்படுகின்றது. ஏனெனில், உலமாப்பெருமக்கள் அரபிமொழித்திறன் மற்றும் மூல நூல்களை ஆய்ந்தறியும் ஆற்றல் பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது என்ற வகையில் மற்றவர்கள் இதனைக் கற்பது எளிதானதல்ல என்று கருதப்பட்டு வந்துள்ளது.

ஒரு மொழியில் கருத்துப்பரிமாற்றமாயினும் ஆய்வு மேற்கொள்வதானாலும், அம்மொழி ஒரே அமைப்பிலான சாதனமாகவே செயல்படுகின்றது, மொழியளவில் வேறுபடுவதில்லை. இவ்வகையில் மூன்றாண்டுகளில் அரபிக் கல்லூரிகளில் பாடத்திட்டத்தின் பகுதியாக அரபிமொழி கற்பிக்கப்படுவது போன்றே ஆர்வமுள்ள அனை வருக்கும் கற்பிக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

இத்திட்;டத்தின் மூலம் ஆர்வமுள்ள அனைவரும் திருமறை விளக்கங்களைப்பெறும் வகையில் அரபிமொழி யினைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களை உண்டாக்கித்தர வழிவகுக்கப்படுகிறது. இதன் மூலம் சிறுவர் களுக்கு பள்ளிவாசல்களுடன் இணைந்து செயல்படும் மக்தபுகளிலும் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஆங்கில, தமிழ்வழிப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் அனைத்து முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கும் தமிழ் வழி யாகவே வாரத்தில் இரண்டு நாட்கள் என்ற வகையில் அரபிமொழியினைக் கற்றுக்கொடுக்க முடியும்.
கல்வி கற்பதில் வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற வகையில் ஆர்வமுடைய முதியோர் அனை வருக்கும் பள்ளிவாசல்களில் அரபிமொழிப்பயிற்சி அளிக்க இத்திட்டம் வகை செய்கிறது. ஆனைத்துப் பள்ளி வாசல்களிரும் இமாம்கள் ஆலிம்களாகவே இருப்பதால் இதனை எளிதாகவே மேற்கொள்ளலாம். இளைஞர் மற்றும் முதியோர்களிடையே மார்க்க மற்றும் திருமறை விளக்கம்பெறும் ஆர்வமும் விழிப்புணர்வும் உள்ள நிலை யில் வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சியளிக் வேண்டும்.

கல்வியில் கெண்களுக்கும் சம உரிமையுண்டு மற்றும் கல்வி கற்பது ஆண் கெண் அளைவர் மீதும் கடமை என்ற வகையில் அனைத்துப் பெண்களுக்கும் அந்தந்த ஊர்களிலேயே சிறப்பு மையங்கள் மூலம் அரபி மொழி வகுப்புகள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடத்தவேண்டும். தமிழகத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட நிஸ்வான் அரபிக்கல்லூரிகள் பெரும்பாலான ஊர்களில் உள்ளன. இக்கல்லூரிகளே இதற்கான சிறப்பு மையங்களாகச் செயல்பட்டு இப்பணியினை மேற்கொள்ளவேண்டும்;. ஆர்வமுள்ள பெண்கள் அனைவரும் நிஸ்வான் கல்லூரிகள் இதற்கான சிறப்பு வகுப்புகளில் சேர்ந்து கற்றுக்கொள்ள முடியும்.

இவ்வகையில் யாருமே விடுபடாமல் ஆர்வமுள்ள அனைத்துப் பெண்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையிலும் தமிழ்வழியாகவோ அல்லது ஆங்கிலம், உருது வழியாகவோ இந்தப்பயிற்சித்திட்டம் மேற்கொள்ளப்படும். இப்பாடத்திட்டத்திற்கான பயிற்சி நூல்கள் அனைத்து மொழிகளிலும் எழுத்துப்பயிற்சி, அரபிப்பாடநூல்களின் ஆங்கில, தமிழ்ப்பதிப்புகள், அரபிமொழி இலக்கணம், நடைமுறை அரபிமொழி (Functional Arabic), அரபிமொழி தமிழ்ச் சொல்லகராதி மற்றும் திருக்ஃகுர்ஆன் சொல்லகராதிகளும் ஆங்கில, தமிழ்ப்பதிப்புகளாக வெளி யிடப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தினை எந்த ஒரு ஊரிலும் மேற்கூறப்பட்ட வகையில் பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் நிஸ்வான் அரபிக்கல்லூரிகளை மையமாகக்கொண்டு எளிதாகவே செயல்படுத்தலாம்.

இத்திட்டத்தின் மூலம் பயனடையவும், தங்ள் ஊர்களில் கல்வி மையங்களை அமைத்துச் செயல்படவும் விரும்பும் அமைப்புகள் மேலும் விவரங்கள், பாடத்திட்டம் மற்றும் ஆலோசனைகளை இலவசமாகப்பெற உடனே தொடர்புகொள்ளவும்.
டாக்டர் சையத் கராமதுல்லாஹ் பஹ்மனி (94443 23011)
முன்னாள் பேராசிரியர், புதுக்கல்லூரி, சென்னை
முன்னாள் பேராசிரியர் ஃதலைவர் , இஸ்லாமியத்துறைஈ செ;னனைப் பல்கலைக்கழகம்
நிறுவனர், அகாடமி ஆஃப் அரபிக் ஸ்டடீஸ், சென்னை
அனைவரும் அரபிமொழி கற்கச் சிறந்த நூல்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் அரபி-தமிழ், திருக்குர்ஆன் சொல்லகராதிகள் (தமிழ் ஆங்கிலப் பதிப்புகளாக)

 

தமிழ்ப் பதிப்புகள்

ஆங்கிலப் பதிப்புகள்

BEGINNERS / ELEMENTARY LEVEL

ARABIC PRIMER I & ARABIC WORK BOOK I

ARABIC PRIMER II & ARABIC WORK BOOK II

அரபிமொழி கையெழுத்துப் பயிற்சிப் பதிவேடு

MATRICULATION SCHOOLS / COLLEGES

மின்ஹாஜ் அல் அரபிய்யா Parts I,II,III,IV,V

தஜ்வீதுல் ஃகுர்ஆன்

COLLEGES / REFERENCE / EVERYONE

அரபிமொழி இலக்கணம்
நடைமுறை அரபிமொழி : எளிய வழி

ஃகாமூசுல் அலிஃப் அரபிமொழி தமிழ்ச்சொல்லகராதி

அல்ஃபாஸில் ஃகுர்ஆன்

 (Arabic-English-Tamil)

BEGINNERS / ELEMENTARY LEVEL

ARABIC PRIMER I & ARABIC WORK BOOK I

ARABIC PRIMER II & ARABIC WORK BOOK II

ARABIC HAND  WRITING AND WORK BOOK

MATRICULATION SCHOOLS / COLLEGES

MINHAJ AL ARABIYYAH Parts I,II,III,IV,V

LETTE WRITING IN ARABIC

HOW TO RECITE QUR’AN?

COLLEGES / REFERENCE / EVERYONE

COMPREHENSIVE ARABIC GRAMMAR

EASY STEPS TO FUNCTIONAL ARABIC

DICTIONARY OF THE HOLY QUR’AN (Arabic-English-Urdu)

 

 

Published by: ALIF BOOKS & PRINTS, 11/6, MANICKAM MAISTRY STREET, ROYAPETTAH, CHENNAI 600014

News

Read Previous

ஒரு சாண் வயிறு

Read Next

மதுரை இப்ராஹிம் ஹார்டுவேர் எம்.கே.இப்ராஹிம் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.