இயற்கையைக் காப்போம்

Vinkmag ad

வான் மழை பூமியை நணைக்க
நீர் பட்ட நிலம் ஈரப்பசை அடைய
தண்ணீர் தேங்கிய மண்ணில்
புதையுண்ட விதை முளையிட்டு
துளியிட்டு தளியிட்டு கொழுந்து
வளர்ந்து இலையாகி செடியாகி
கொடியாகும்…!!!

வளர்ந்த செடியோ
கெட்டு வளர்ந்து
பல கெவர் விட்டு
கிளைகள் நிறைம்பி
அதிக குச்சியை சுமர்ந்து
விருட்சமாகும்…!!!

சாலை ஓரமாக நட்ட செடி
தெருவோரம் நிழல் கொடுக்க
பாதையெல்லாம் பூக்கள் கிடக்க
வழிப் போக்கனும் அதைப் பார்த்து
ரசிக்க….!!!

அடடா பசுமையான நாடு உன் நாடு
ஐயேடா குளுமையான ஊர் உன்னுடையது
ஆமான்டா குளு குளுப்பாக உள்ளது உன்ட தேசம்
ஜாலி டா குளிச்சியாய் இருக்கு நீ இருககும்
இடம்…!!!!

தயக்கத்தோடு வந்தவளும்
மயங்கி நிக்க மயக்கத்தோடு
கூட்டி வந்தவனும் தயங்கி
இருக்கும் சோலை வனமாக
மாறவேண்டும் பசுமை படர்
நிலமாக ஆகவேண்டும்…!!

கதிரவன் வருகையில் பச்சை மரமாக
அதை தாங்க வேண்டும்
பகலவன் அதனுடன் உறவாட வேண்டும்
சூரியனின் கதிர்கள் கரத்தின் கிளைகளான்
இடையால் பூமியைத் தொட வேண்டும்
மாலையானதும் ஞாயிறு மெல்ல மறைந்து
செல்கையில் இத்தனை அழகு கொண்ட
பசுமை படர் உலகம் அல்லவா என்னும்
எதிர் காலம் வளரவேண்டும்…!!!

ஆர் எஸ் கலா

இலங்கை

News

Read Previous

அரபி மொழி பயில ……..

Read Next

இணையத் துடிக்கும் கரம்

Leave a Reply

Your email address will not be published.