மதுவின் மடியில்

Vinkmag ad

மதுவின் மடியில்
===============

ஐயோ எனக்குப்
பிடிக்காது நான்
குடிப்பது இல்லை
சத்தியமாக நீங்க
கேட்டதும் ஏற்பாடு
செய்தேன் என்னைக்
கட்டாயப் படுத்தாதே
மச்சான் சரி சரி
உனக்காக ஒரு கட்டிங்
போடுகின்றேன் திரும்பக்
கட்டாயப் படுத்தாதே வாக்
வாக் எப்படிடா இதைக்
குடிப்பது நாத்தம் மூக்கைத்
துளைக்கின்றது அப்பா
சுட்டெரித்துப் போகின்றது
நெஞ்சை இது போதும்
என்னை விட்டு விடுங்கள்
இதுதான் ஒரு ஆண் மகனின்
குடி பழக்கம் ஆரம்பமாகும்
முதல் படி…!!!

டேய் மச்சான் உன்
வீட்டு விஷேசத்துக்கு
நாங்க குடித்து உன்னை
சந்தோசப் படுத்தினோம்
சும்மா எங்களுடன் நீயும்
கலந்துக்கோ ஒரு தடவை
மட்டும் தான் மச்சான்
அப்புறம் தெரியும் தானே
விரட்டலும் கெஞ்சலுமாய்
நண்பரகள் வேறு வழியின்றி
வாங்கி ஊத்துகின்றான்
வாயில் இரண்டாம் படியை
தொட்டுவிட்டான்…!!!

விழுந்தான் காதலில்
அடைந்தான் தோல்வியை
அதை மறக்க நண்பன்
கொடுக்கிறான் மது காதல்
தோல்வியில் தேறிய பின்
திருமணச் சொந்தத்தில்
இறங்கிய பின்னும் அவனை
தொடரும் சொந்தம் மது…!!

அந்த சொந்தத்தை
தொடர அவன் கூறும்
வழி முறைதான்
விசித்திரமானவை
உடல் வலி அதனால்
குடிக்கின்றேன்
இன்று அதிக சந்தோசம்
அதனால் குடிக்கின்றேன்
மன வேதனை அதனால்
குடிக்கின்றேன் வீட்டில்
சண்டை கோபத்தில்
குடிக்கின்றேன் பழைய
நண்பன் வந்தான்
அவனுடன் குடித்தேன்
பல பல கதை கூறி பல பல
காரணம் சொல்லி பல பல
வழிகண்டு பிடித்து தினமும்
படுத்து விடுகின்றான் மதுவின்
மடியினில்….!!!

தன் உழைப்பையும் அழித்து
தன்னையும் அழித்து
பொன்னான வாழ்வையும்
அழித்தும் கலங்கா
மனிதனாய் அவன் இருக்க
அவனைத் திருத்த கையில்
எடுக்கும் வழியெல்லாம்
கைநழுவியே போய் விடும்
உறவுக்கு ஊரார் முன்னே
அவன் ஒரு மனித உருவின்
நடமாடும் தெருநாய் தான்
மதிப்பு மரியாதை இவை
இல்லை இனி அவன்
வாழ்வில்…!!!!

News

Read Previous

சோம்பலை விலக்கு; வெற்றியே இலக்கு

Read Next

மூச்சு திணறல்: 82 ஆடுகள் பலி; முதுகுளத்தூர் விவசாயிகள் சோகம்

Leave a Reply

Your email address will not be published.