எழில் நிறைந்த இளமங்கை

Vinkmag ad

 

 


 
 
படமும் பாடலும் – 1
 
மனதைத் தொட்ட வரிகளை அதற்கு இணையான படங்களுடன் இங்கு பதிவு செய்கின்றேன்.

எந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தாலும் அதனை ஒரு இலக்கியக் குறிப்புடனோ அல்லது ஒரு வரலாற்று நிகழ்வுடனோ ஒப்பிட்டுப் பார்ப்பது என் இயல்பாகிவிட்டது. ஒரு ஓவியன் தன உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் கூட அதனையும் மீறிய ஒரு தளம் ஒன்று அந்தப் படைப்பில் பதிந்துவிடுவது இயற்கையானது. அதுதான் நான் தொக்கி நிற்கும் இடமாக உள்ளது. அது நம்முடைய உரிமையும் கூட.
இந்த ஓவியம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், பிரஞ்சு ஓவியப் பள்ளியில் படித்த ஒரு ஓவிய மாணவன் வரைந்ததாக அந்த ஓவியப் பள்ளியின் குறிப்பு தெரிவிக்கின்றது. என்ன ஒரு அழகிய ஓவியம். வரைந்த ஓவியனின் உள்ள உணர்வுகள் என்ன என்று ஒரு கலைஞனின் மன நிலையில் இருந்து பார்க்கும் போது அப்பப்பா இந்த ஓவியன் ஏன் தன பெயரைப் பதியவில்லை என்றுதான் கேட்கின்றது மனம். ஆயினும் நாம் அந்தக் கலைஞனின் மேதா விலாசத்தை பாராட்டுவோம். ஓவியப்பள்ளியில் இந்த ஓவியத்திற்கு வைக்கப்பட்ட பெயர் : “ எழில் நிறைந்த இளமங்கை “.
ஆயினும் இந்த மங்கையின் இளமையும் எழிலும் சொல்வதை கண்ணதாசன் இந்த வரிகளால் நிரப்பியுள்ளார் :

அவன் போருக்குப் போனான்….நான்
போர்க்களம் ஆனேன். – அவன் வேல்
கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன்.
அவன் காவலன் என்றான் – நான்
காவலை இழந்தேன்… அவன்
பாவலன் என்றான் – நான் பாடலை இழந்தேன்.
அவன் தேரும் வராதோ ஒரு சேதி சொல்லாதோ..?????
அவன் தோளும் வராதோ ஒரு தூது சொல்லாதோ ?????
எனை ஆடையில் காண்டான் பாவாடையில் கண்டான்
மன மேடைய மறந்தான் பூவாடையை மறந்தான்…
என் மனமறிவானோ…??? திரு மலர்க் கொடுப்பானோ..???
அவன் கண் திறப்பானோ ??? இரு கை கொடுப்பானோ ????
அவன் போருக்குப் போனான்….நான்
போர்க்களம் ஆனேன்…….!!!!!!!!!!!!

அன்புடன்,
காசி விசுவநாதன்.
 ” வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு “
akasi108@gmail.com

News

Read Previous

கவிதையில் வாழுகின்றாய் !

Read Next

ஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாறு

Leave a Reply

Your email address will not be published.