முதுகுளத்தூர் தாலுகாவில் 2 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை மூன்று மாதமாக நிறுத்தம் முதியோர் கடும் அவதி

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் தாலுகாவில் சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சமூக நலத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்றோர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், உழவர் பாது காப்பு திட்டம், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட பல் வேறு பிரிவில் வயதானோர் உதவி தொகை பெறுகின்றனர்.

இதில் முதுகுளத்தூர் தாலுகாவில் மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக நலத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுகின்றனர். இத்திட்டத்தில் தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கடந்த மூன்ற மாதங்களாக உதவித் தொ கை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் சென்று கேட்டால் தாசில்தார் மற் றும் ஊழியர்கள் எந்த வித பதிலும் கூறுவதில்லை என வயதானோர் பலர் அலை ந்த வண்ணம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து முதுகுளத்தூரை சேர்ந்த கணபதியம்மாள், லெட்சுமி கூறுகை யில், வயதான நாங்கள் அரசாங்கம்  கொடுக்கும் மாத உதவித்தொகை ஆயிரத்தை வைத்துத்தான் பிழைப்பு நடத்தி வருகி றோம். இதனை வைத்துத் தான் மருந்து, மாத்திரைகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவைகள் வாங்கிக்கொள்கிறோம். கடந்த மூன்று மாதங்களாக எந்த அறிவிப்பும் இன்றி திடீ ரென உதவித்தொகையை நிறுத்தி விட்டனர்.

இத னால் உடல் நலம் சரி இல்லையென்றால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வழியில்லாமல் திண்டாடி வருகிறோம். நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மறு ஆய்வு செய்து பணம் வழ ங்க கலெக்டர் நவடிக்கை எடுக்க வேண்டும் என்ற னர்.

இதுகுறித்து சமூக நலத்திட்ட அலுவலகத்தில் கேட்டபோது, ஒவ்வொரு கிராமத்திலும் வசதியானர்வர்கள் குறித்து ஆய்வு நடத்தி கிராம நிர்வாக அலுவலர்கள், தனி கமிட்டி குழு அமைத்துத்தான் நிறுத்தியுள்ளோம். மேலும் உதவித்தொகை பெறுவோர் தவறான முறையில் நிறுத்தப்பட்டு இருந்தால் அலுவலகத்தில் மனு அளித்தால் மறு ஆய்வு நடத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தற்பொழுது அனைத்து தாலுகாவிலும் இறந்தவர்களுக்கு பணம் வந்துள்ளது. ஆனால் குடும்ப தலைவர் இறந்தால் மட்டும் தான் பணம் வழங்க முடியும் என முதுகுளத்தூர், கடலாடி தாலுகா அலுவலகங்களில் தாசில்தார்கள் தெரிவிப்பதாக கூறுகின்றனர். இத னால் வந்த பணத்தை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News

Read Previous

விபத்தை ஏற்படுத்தும் முதுகுளத்தூர்-கமுதி தார்ச்சாலை

Read Next

தியாகமே ஹிஜ்ரத்

Leave a Reply

Your email address will not be published.