முதுகுளத்தூர் வட்டாரத்தில் மழை நீடிப்பு விவசாய வேலைகள் மும்முரம்

Vinkmag ad

கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் விவசாய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கமுதி, முதுகுளத்தூர், கடலாடியில் பெய்த மழை அளவு(மி.மீ) விவரம் வருமாறு:

கமுதியில் 14-ஆம் தேதி-64.7, 15-ஆம் தேதி-73.6, 16-ஆம் தேதி-24.76, 17-ஆம் தேதி-19.5. 18-ஆம் தேதி -16.6, கடலாடியில் 15-ஆம் தேதி-10, 16-ஆம் தேதி-5.4, 17-ஆம் தேதி-3.5, 18-ஆம் தேதி-37.1. வாலிநோக்கத்தில் 11-ஆம் தேதி-15.4, 16-ஆம் தேதி-4.4, 17-ஆம் தேதி-8, 18-ஆம் தேதி-45.8 முதுகுளத்தூரில் 16-

ஆம் தேதி-15, 17-ஆம் தேதி-8, 18-ஆம் தேதி-20 சனிக்கிழமை இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்வதையொட்டி விவசாயப்பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஆனாலும் கண்மாய்களில் தண்ணீர் பெருகும் அளவு மழை பெய்யாததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது பெய்து வரும் மழையை நம்பி விவசாயத்தை துவக்கினாலும், தொடர்ந்து மழை பெய்து கண்மாய்கள் நிரம்பினால்தான் விளைச்சல் பார்க்க முடியும் என்றனர். மழை காரணமாக கிராமப்புற பழைய ரோடுகள அரிக்கப்பட்டும், சகதி நிறைந்தும் காணப்படுகின்றன. வாரச்சந்தை வியாபாரமும், கடைகளில் தீபாவளி வியாபாரமும் பாதிப்பு அடைந்துள்ளது.

News

Read Previous

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் மழைநீர்

Read Next

புத்தகங்களைப் படியுங்கள்!புத்துலகம் படைத்திடுங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.