இலக்கு

Vinkmag ad

இலக்கு
========
இலக்கு வை
அர்சுனனைப் போல்
இலையை மறைத்து
கிளியை நோக்கும்
கண் கொண்டு

உழைப்பை இலக்கு வை
நேர்மையைத் துணைக்கு எடு
நெஞ்சத்தில் உறுதி பூண்டு
உண்மையை நண்பனாக்கி
இலக்கை நோக்கி நடைபோடு

வெற்றிக்கு விகாரம் இல்லை
இடை நிறுத்தம் வைக்காமல்
இலக்கு  வை வெற்றிக் கனி
உன் கையில்

தடை வரும் இடறி விழுவாய்
தாவி எழுந்து நில் இலக்கை
அடையும் வரை

நிமிர்ந்து நில் மலைபோல் வரும்
தடையும் மண்மேடாகத் தெரியும்.

கவலையில் துவண்டு விடாதே
கன்னியத்தைக் கை விடாதே
தலைக்கனம் கொண்டு ஆட்டம் போடாதே
தன்னடக்கத்துடன் நல்லவையை இலக்கு வை

ஊரும் எறும்பு உச்சி தேனைக் கண்டு
ஐயோ உச்சி என்று கை விட்டது இல்லை
அதன் முயற்சியை வைத்த இலக்கை
அடையும் வரை ஊர்ந்தே செல்லும்

நடக்கும் நீ ஏன் முடங்க வேண்டும்
உன் இலக்கை
நினைத்த  இலக்கை அடையும் வரை
நீ  ஓயாதே

ஓய்ந்து நின்றால் ஒட்டிக் கொள்ளும்
மனசலிப்பு  நீ வழி விடாதே அவைக்கு
கட்டு உன் நெஞ்சில் கற்பனையை
பாராட்டு  உன்னையே நீ

அடைவாய் நீ வைத்த இலக்கை
மகிழ்வோடு இறக்கை இன்றி
பறப்பாய்  நிலத்தில் தொட்டு விடு
வெற்றியை தட்டி எடு உன் கையிலே

ஆர்  எஸ்  கலா

  இலங்கை

News

Read Previous

பத்திரமாக வெடிப்போம் பட்டாசு

Read Next

தீபம்

Leave a Reply

Your email address will not be published.