தகிக்கும் தனிமை

Vinkmag ad

அன்புக்காக ஏங்குகின்றேன்
உண்மை அன்புக்காக ஏங்குகின்றேன்
ஒன்றே ஒன்று கேட்கின்றேன் அதுதான்
உண்மை அன்பு

பணம் இல்லை பாசம் இல்லை
பந்தம் இல்லை சொந்தம் இல்லை
சொந்த வீட்டில் நிம்மதி இல்லை
சென்ற இடத்தில் மதிப்பு இல்லை
வருவோரும் போவோரும் காட்டும்
அன்பு உண்மை இல்லை உறவு
என்று சொல்லி வரும் உறவும்
நிலைப்பது இல்லை நல்ல ராசி
இல்லை நான் என்ன செய்வேன்
தினமும் ஏங்குகின்றேன் உண்மை
அன்பைத் தேடுகின்றேன்

சோகத்துக்கு நான் தோழியானேன்
வெறுப்புக்கு நான் விருப்பானேன்
ஏமாற்றம் அது என் வீடானது இருந்தும்
என் இதயம் அதை ஏற்க மறுத்து அன்பை
நாடுகின்றது தேடுகின்றது

தினமும் ஏமாற்றம் விடிவு இல்லா
இருளாட்டம் முடிவில்லா தொடர்கதையாக
தொடரும் என் ஏக்கம்

ஆர் எஸ்  கலா

   இலங்கை

News

Read Previous

வாழ்தலை விடவும்…

Read Next

துணிவே துணை

Leave a Reply

Your email address will not be published.