தேங்காய்ப் பால் ரசம்

Vinkmag ad
தேங்காய்ப் பால் ரசம்
தேவையானப் பொருட்கள்
தேங்காய் – ஒரு மூடி
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – ஒன்றரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
#செய்முறை
தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து பாலுடன் சேர்த்து, உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, மிளகாயைக் கிள்ளிப் போட்டு சிவந்ததும், மிளகைப் போடவும்.
மிளகு படபட வென்று வெடித்ததும் ரசக் கரைசலை ஊற்றி நுரை கூடியதும் ஒரு முறை கிண்டி விட்டு இறக்கவும்
கூட்டு வகைகளை வைத்துக் கொண்டு உண்ண இந்த ரசம் நன்றாக இருக்கும்.
இந்த ரசம் கொதித்து விட்டால் திரிந்த பால் போல நன்றாக இருக்காது.

News

Read Previous

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

Read Next

ஆன்மீக வியாதி

Leave a Reply

Your email address will not be published.