கோலாலம்பூரில் 9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

Vinkmag ad

கோலாலம்பூர்: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து நடத்தும் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

1966ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரிலும், இரண்டாவது மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னை மாநகரிலும் நடைபெற்றன.

 

இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் இம்மாநாடு நடைபெற்றுள்ளது. பிரான்சில்-1970, இலங்கையின் யாழ்ப்பாணத்தில்-1974; தமிழகத்தின் மதுரையில்-1981; மலேசியாவின் கோலாலம்பூரில் -1987 ஆம் ஆண்டுகள் மாநாடுகள் நடைபெற்றன. இதேபோல் மொரிசியஸில்-1989;

தமிழகத்தின் தஞ்சாவூரில் 1995 ஆம் ஆண்டும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 -ந் தேதி வரை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இம்மாநாடு நடைபெற உள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/art-culture/essays/9th-international-tamil-conference-kualalumpur-212648.html

News

Read Previous

தீபாவளி பண்டிகைக்கான 10 உறுதிமொழி

Read Next

கட்சித் தேர்தல்: திமுகவினர் வேட்பு மனு

Leave a Reply

Your email address will not be published.