அறிஞர் க.பூரணச்சந்திரன் இணையதளம் அறிமுகம்

Vinkmag ad
poornaஅறிஞர் க.பூரணச்சந்திரன் www.poornachandran.com இணையதள அறிமுகம்

அறிஞர் க.பூரணச்சந்திரன் அவர்கள் எங்களைப் போன்ற பல தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும்,முனைவர் பட்ட ஆய்வறிஞர்களையும் உருவாக்கியவர். அவர் திருச்சிராப்பள்ளி பிஷப் ஈபர் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

 

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்து கொடுத்தவர். நல்ல விமரிசகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர்.2011இல் ஆனந்தவிகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது. பத்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். அவற்றில் சில கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன.

 

அறிஞர் க. பூரணச்சந்திரன் அவர்களின் சமூகம் சார்ந்த கட்டுரைகள், விமர்சனங்கள், கேள்வி – பதில் பகுதிகள், நூல் அறிமுகம் – மதிப்புரைகள், உலகத் திரைப்பட அறிமுகங்கள், மொழியியல் கொள்கை என பல்வேறு தலைப்புகளை சமூகம் சார்ந்து எழுதப்பட்டுவரும் அனைத்தும் ஒரு தொகுப்பாகக் கிடைக்கும்படி எங்களைப்போன்ற மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அறிஞர் பூரணச்சந்திரன் அவர்களும் அவரது மகன் திரு. செவ்வேள் அவர்களும் இசைவு தந்து, இன்று ஒரு இணைய தளமாக http://www.poornachandran.com என வடிவம் பெற்றுள்ளது.

 

இந்த இணையதளம் அறிஞர் க.பூரணச்சந்திரன் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள விரும்பும்மாணவர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் உள்ளதனால், தமிழர்கள், தமிழ் மாணவர்கள், புலம் பெயர் தமிழர்கள் என அனைவரிடமும் இந்த இணையதளம் சென்றடைந்தால், மொழி வளர்ச்ச்சி குறித்த சிந்தனையாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் நன்மை பயக்கும்.

நன்றி.

 

அன்புடன்,

காசி விசுவநாதன்.

 “ வரலாற்றில் விழிப்பு எதிர் காலத்தின் மீட்பு “

 

akasi108@gmail.com

News

Read Previous

மலேசியா குவந்தான் சிராஜ்தீன் சேட்டுக்கு ஆண் குழந்தை

Read Next

வெள்ளையாடை ………….

Leave a Reply

Your email address will not be published.