பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!

Vinkmag ad

Korai_Mat copyபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!

‘பாய்’ என்ற இந்த வார்த்தைக்குப்பின்னால் எத்தனை விதமான தகவல்கள் இருக்கின்றன என்பதை மட்டும் இந்தக் கட்டுரையின் மூலம் பதிவு செய்கிறேன்.

வீட்டில் சாணம் மெழுகிய வெற்றுத் தரையில் படுத்து உறங்கிய ஆதிதமிழன், சற்று சுகமாகப் படுத்து உறங்க வேண்டி பாய்களைப் பின்ன ஆரம்பித்தான்

முதன்முதலில் தென்னை ஓலையில் இருந்துதான் பாய்களைத் தயாரித்தார்கள். முற்றாத இளம் தென்னை ஓலையை வெட்டி எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற மட்டையை இரண்டாக வெட்டிப்பிளந்துவிட்டால் மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் கிடைக்கும்.

இரண்டு துண்டுகளில் மட்டைப்பகுதிகளும், வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளைப் பின்னினால் நமக்கு தென்னம் பாய் கிடைக்கும்.

இளம்பச்சை (தென்னை) ஓலைகளால் பின்னப்பட்ட இந்தத் தென்னம்பாய் படுப்பதற்கு சுகமாக இருக்கும். குளிர்ச்சியாகவும் இருக்கும்.

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

* கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

* கோரைப்பாய் – உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

*பிரம்பு பாய் – சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

* ஈச்சம்பாய் – வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
அதிகரிக்கும்.

* மூங்கில் பாய் – உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

* தாழம்பாய் – வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

* பேரீச்சம்பாய் – வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

* இலவம்பஞ்சு படுக்கை – உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

* மலர்ப்படுக்கை – ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

* இரத்தினக் கம்பளம் – நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

News

Read Previous

அபுதாபி அமீனுதீனுக்கு பெண் குழந்தை

Read Next

பாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்

Leave a Reply

Your email address will not be published.