ஏடிஎம் ரசீது தாள்களால் புற்றுநோய் ஏற்படுமா? ஒரு பகீர் தகவல்

Vinkmag ad

ஏடிஎம் ரசீது தாள்களால் புற்றுநோய் ஏற்படுமா? ஒரு பகீர் தகவல்

 

 

atm_slipஏடிஎம்களில் பணம் எடுத்த பிறகு வரும் ரசீது தாள்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும் போது தரப்படும் பில்லினால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏடிஎம் ரசீது போன்ற கணினிகளால் ஜெனரேட் செய்யப்படும் தாள்களை தயாரிக்க பிஸ்பினால் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிஸ்பினால் ரசாயனம், மனித தோலினை ஊடுருவிச் சென்று உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இது குறித்து ராஜஸ்தான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, அம்மாநில அமைச்சர்  பதில் அளிக்கையில், ‘ஏ.டி.எம். தாள்களால் புற்று நோய் ஏற்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதுபற்றி ஆய்வு நடத்த உயர் நிலைக் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

வங்கி அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், வங்கி ஏடிஎம் மட்டுமில்லாமல் சிறிய கடைகளில் கொடுக்கும் ரசீதில் கூட பிஸ்பினால் கலக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏடிஎம் ரசீதினால் புற்றுநோய் ஏற்பட்டதாக எந்த புகாரும் வரவில்லை என்பதே பதிலாக உள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏடிஎம்களில் இதுபோன்ற தெர்மல் காகிதங்கள் பயன்படுத்த ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது இதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

இதுவரை அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லையெனினும், மனிதர்களிடையே புற்றுநோய் தாக்கம் அதிகரித்திருப்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையேக் காட்டுகிறது..

பலரும் ஏடிஎம் பேப்பர்களை கிழித்தெறியாமல் பத்திரப்படுத்தி கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் சுவாமி பிரசாதத்தை அதில் மடித்து வைத்து அவ்வபோது பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த செய்தி நிச்சயம் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது உண்மை.

http://blog.dinamani.com/?p=5739

News

Read Previous

அருவி

Read Next

காஞ்சியிலே பிறந்த அண்ணா

Leave a Reply

Your email address will not be published.