சிறுகதை பயிற்சி பட்டறை

Vinkmag ad
சிறுகதை பயிற்சி பட்டறை

முன்பதிவுக்கு: 9840698236

நண்பர்களே, எதிர்வரும் 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் திருவண்ணாமலையில் உள்ள எழுத்தாளர் பவா செல்லத்துரையின் தோட்டத்தில் சிறுகதை பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறோம். தமிழ் ஸ்டுடியோவும், வம்சி பதிப்பகமும் இணைந்து இந்த சிறுகதை பயிற்சி பட்டறையை நடத்தவிருக்கிறது. சிறுகதை எழுதுவதில் உள்ள நுட்பங்கள், சிறுகதைகளை அணுகும் விதம் என இந்த பயிற்சி பட்டறை முழுவதும் உங்கள் எழுத்து கூர்த்தீட்டப்படவிருக்கிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கவிருக்கும் எழுத்தாளர்கள்:

எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் அழகியபெரியவன்
எழுத்தாளர் போப்
மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஜி. குப்புசாமி
எழுத்தாளர் பவா செல்லதுரை
மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஷைலஜா

இதில் கலந்துக்கொள்வதற்கு கட்டணம் ஏதுமில்லை. ஆனால் மூன்று நாட்களும் அங்கேயே தங்கி இந்த பயிற்சியில் கலந்துக்கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கும் உணவு ஏற்பாடு செய்ய மட்டும் ரூபாய் 1000 கட்டணமாக வசூலிக்கப்படும். அதிகபட்சம் முப்பது பங்கேற்பாளர்களே அனுமதிக்கப்படுவார்கள். அதிலும் தமிழ் ஸ்டுடியோவின் படிமை மாணவர்கள் பத்து பேர் இருக்கிறார்கள். எனவே வெளியில் இருந்து இருபது நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி. எனவே உடனே உங்கள் பெயரை முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். பவா செல்லத்துரையின் தோட்டத்தில் எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருப்பதே அலாதியான சுகம். அதையும் தாண்டி, தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் சிறுகதை எழுதவதற்கு பயிற்சி அளிக்கிறார்கள் என்றால், இதைவிட சிறந்ததொரு வாய்ப்பை நண்பர்கள் மீண்டும் பெற்றுவிட முடியாது.

முன்பதிவுக்கு: 9840698236



அன்புடன் 


தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com

News

Read Previous

பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்த ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

Read Next

மீண்டும் அடிமையாய் மாறலாம்!

Leave a Reply

Your email address will not be published.