வைஷ்ணவ ஜனதோ !

Vinkmag ad

நாமக்கல்லாரின் தமிழ் சுவையோ சுவை. பகிர்ந்து கொள்கிறேன்.

http://emadal.blogspot.in/2008/09/blog-post_12.html

வைஷ்ணவ ஜனதோ ! (தமிழ் மொழி பெயர்ப்பு – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை)

(மகாத்மா நிறைய விரும்பி கேட்ட பாடல்)

(பாட்டின் இணையதள இணைப்புகள் கீழே)
பல்லவி

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)

சரணங்கள்

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;
உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள். (வைஷ்)

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்
உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோதும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம். (வைஷ்)

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்யன்
நாயக னாகிய சிறீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்
பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்
ஆகும்அவனே வைஷ்ணவனாம். (வைஷ்)

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமுடை வார்கள் எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்
அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரை சேர்வார். (வைஷ்)

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
இந்தி மூலம்: நரசிம்ம மேத்தா

News

Read Previous

குளியல் பொடி

Read Next

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?

Leave a Reply

Your email address will not be published.