அத்தரி பச்சா கொழுக்கட்டை செய்முறை …

Vinkmag ad
 

காள + அத்ரி <<< இழையின் தாக்கம்…
https://groups.google.com/d/msg/mintamil/N2zqK_t7AYg/YEhv1Pg6rUYJ

சிறுவயதில் அத்தரி பச்சா கொழுக்கட்டை  கதை கேட்ட நினைவு உண்டா?

நினைவில்லாவிட்டால் இதோ கீழே ….

ref: http://eluthu.com/kavithai/158750.html

அத்தரி பச்சா கொழுக்கட்டை கதை 

இந்த கதை பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்தது தான்

ஒரு ஊரில் கணவன் மனைவி இனிதே குடும்பம் நடத்தி வந்தனர். புதிதாக திருமணம் ஆனவர்கள். கணவன் ஒரு நாள் தன் மாமியார் வீட்டுக்குச் சென்றான். அங்கே அவர்கள் அவனுக்கு கொழுக்கட்டை அவித்து தந்தார்கள். சுவையாக உள்ளது அத்தை. உங்கள் மகளுக்கு இதெல்லாம் செய்ய தெரியுமா என்று கேட்டான். மிகவும் நன்றாக செய்வாள் என்றாள் மாமியார்.

மகிழ்வுடன் விடை பெற்று வீட்டுக்குத் திரும்பினான். கொழுக்கட்டை என்று சொல்லிக்கொண்டே வந்தான். திரும்பிய வழியில் நல்ல மழை. ஆங்கங்கே உள்ள சிறிய ஓடைகளில் நீர் நிறைந்து ஓடியது. அதை தாண்டும் போது அத்திரி பச்சா என்று சொல்லி எல்லோரும் தாண்டினர். இவனும் அதே போல் தாண்டிக் கொண்டே வந்தான். கொழுக்கட்டையை மறந்து விட்டான். வீட்டுக்கு வந்தவுடன் அத்திரி பச்சா செய்து கொடு என்று மனைவியிடம் கேட்டான். அவள் அப்படி ஒரு பலகாரமே கிடையாது என்றாள். கோபம் வந்தது இவனுக்கு. பொய் சொல்லுகிறாய் என்று அடித்து விட்டான். விஷயம் தெரிந்து மாமியார் வந்து மகளை பார்த்து “ஐயோ இப்படி கொழுக்கட்டை கொழுக்கட்டாய வீங்கும் படி அடிச்சி புட்டேகளே மாப்பிளை” என்று அழுதாள்.

அதே தான் அந்த பலகாரம் தன் என்றான் அவன். நொந்து கொண்டார்கள் தாயும் மகளும். இப்படி தான் இன்றைய வாழ்க்கை உள்ளது

_________________________________________________________________________

இனி இந்தக் கொழுக்கட்டை செய்முறை, இது இஸ்லாமிய மக்களின் நோன்புக் கொழுக்கட்டையா இருக்கலாமோ?

முகரம் மாதம் செய்து சாபிடுவார்களாம் ….

நன்றி: ஜலீலா கமால்

ref: http://samaiyalattakaasam.blogspot.com/2009/12/blog-post_22.html

வெல்லம் பிடி (அத்தரி பச்சா) கொழுக்கட்டை

சிக‌ப்ப‌ரிசி மாவு = ஒரு க‌ப்
ம‌ண்டை வெல்ல‌ம் = முக்கால் க‌ப்
உப்பு = கால் தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
தேங்காய் = அரை க‌ப் துருவிய‌து
பாசி ப‌ருப்பு = ஒரு மேசை க‌ர‌ண்டி ( வ‌ருத்து ஊற‌வைத்த‌து)

வெல்ல‌த்தை தூளாக்கி கொஞ்ச‌மா கால் க‌ப் த‌ண்ணீர் ஊற்றி க‌ரைத்து சூடு ப‌டுத்தி ம‌ண்ணை வ‌டிக‌ட்ட‌வும்.

மாவில் ஊற‌வைத்த‌ பாசி ப‌ருப்பு,நெய்,உப்பு, தேங்காய் துருவ‌ல் எல்லாம் சேர்த்து விற‌வி வெல்ல‌க்க‌ரைச‌லை ஊற்றி ந‌ன்கு க‌ல‌க்கி 5 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

கொழுக‌ட்டை பிடிக்கும் போது தேவைக்கு த‌ண்ணீர் தெளித்து பிடித்து கொள்ள‌வும்.

பிற‌கு சின்ன‌ கொழுக்க‌ட்டைக‌ளாக‌ பிடித்து இட்லி பானையில் ஈர‌ துணியை விரித்து அவித்து எடுக்க‌வும்.

இது இத‌ற்கு முன் கொடுத்த‌ வெல்ல‌ உருண்டை சிகப்பரிசி மாவு வெல்லம் உருண்டைபோல‌வும் செய்ய‌லாம்.

குறிப்பு: த‌ண்ணீர் அதிக‌ம் ஊற்றி விட‌ கூடாது. ரொம்ப கொழ‌ கொழ‌ என்று ஆகிவிடும், பிற‌கு கொழுக‌ட்டை பிடிக்க‌ வ‌ராது. மனத்துக்கு பொடி செய்த ஏலக்காய் சேர்த்து கொள்ளலாம்.

இதே கார‌த்தில் செய்ய‌ சிகப்பரிசி மாவு கொழுக்கட்டைஇதில் பார்க்க‌வும்.

 

News

Read Previous

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

Read Next

ம்வுலிபுரமா?மலிவு புரமா?

Leave a Reply

Your email address will not be published.