பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

Vinkmag ad

அரசு நகர பேருந்தில் அரசியல் தலைவர் குறித்து தவறான வாசகம் எழுதிய பிரச்சினை: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

 

அரசு நகர பேருந்தில் குறிப்பிட்ட அரசியல் தலைவரைப்பற்றி தவறான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததையொட்டி, கமுதியி்ல் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து கமுதிக்கு அரசு நகர பேருந்து ஒன்று, பகலில் புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்தின் இருபுறமும் குறிப்பிட்ட தலைவர் ஒருவரைப்பற்றி தவறான வாசகங்கள் எழுதப்பட்டிரு்நதனவாம். இந்த வாசகங்களை இதே பேருந்தி்ல் வந்த கமுதி-கோட்டைமேடு அரசு மேனிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் பார்த்து விட்டு, பள்ளிக்கு வந்தவுடன் மற்ற மாணவர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனராம்.

இதையடுத்து பள்ளி மாண வர்கள், வகுப்புகளை விட்டு வெளியேறிச் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மூன்று சாலைகள் சந்திப்பி ல் கூடி நின்று, தவறான வாசகங்கள் எழுதப்பட்டிருந்த நகர பேருந்தையும் மற்ற வாகனங்களையும் நிறுத்தி திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்து பதற்றம் நிலவியது. இதையடுத்து உதவி காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன், ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள் திலகவதி, மாணிக்கம், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் மாடசாமி, வட்டாட்சியர் பி.நாகநாதன் ஆகியோர் போலீஸாருடன் சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த் தை நடத்தி கலைந்து செல்லச் செய்தனர்.

இதன் பின்பு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியர் ராமலிங்கம், நாராயணபுரம் ஊராட்சி தலைவர் பூமிநாதன் ஆகியோர் பேசியபோது, பள்ளிக்கு மாணவர்கள் வந்துவிட் டால் கல்வி கற்பதில்தான் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினர். உதவி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் பேசியபோது பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கல்வி கற்பதைத் தவிர வேறு சிந்தனையே வரக்கூடாது, வகுப்பறையிலோ, பள்ளிக்கு வெளியே சென்றோ சட்டம், ஒழுங்கு, அமைதி பாதிக்கச் செய்யும் செயல்களில் ஈடுபட்டு தங்களது வருங்கால வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

பள்ளி விதிமுறைகளை மீறியும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களிலும் ஈடுபடும் மாணவர்கள் மீது போலீஸ் கடும் நடவடிக்கை எடுக் கும் என்றும் எச்சரித்தார் உதவி காவல் கண்காணிப்பாளர்.

News

Read Previous

ஜுலை 24, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி

Read Next

தமிழ்மொழித்தேர்வுகள் =பரிசுகள் வழங்கும் மாபெரும் “தமிழ்விழா” 27-7-2014

Leave a Reply

Your email address will not be published.