குவைத்தில் “பத்ரு யுத்தம் – இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்” புனித ரமழான் சிறப்பு நிகழ்ச்சி!

Vinkmag ad
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்
பத்ரு யுத்தம் – இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல் சிறப்பு நிகழ்ச்சி!
 
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…
 
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாதத்தில் நடைபெற்ற பத்ரு யுத்தம் பற்றிய சிந்தனைகளையும், படிப்பினைகளையும், அதனால் ஏற்பட்ட இஸ்லாமிய எழுச்சியையும் தெளிவான வகையில் எளிய முறையில் அழகிய தமிழில் எடுத்துரைக்கும் விதமாக கீழ்க்கண்டவாறு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
 
நாள்: 11.07.2014 வெள்ளிக்கிழமை இன்ஷா அல்லாஹ்…
 
நேரம்: நண்பகல் 11:50 மணி முதல்….
 
இடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) மஸ்ஜித், ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஃகைத்தான்.
 
தலைமை: மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ –  தலைவர், K-Tic.
 
ஜும்ஆப் பேருரை: மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., – பொதுச் செயலாளர், K-Tic.
 
சிறப்புரை: தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் குவைத் இந்தியா ஃப்ரட்டநிட்டி ஃபாரம் KIFFன் சிறப்பு விருந்தினர் ஜனாப் ஏ. முஹ்யத்தீன் அப்துல் காதர் அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா.
 
கருப்பொருள்: பத்ரு யுத்தம் – இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்!
 
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மேலதிக விபரங்கள் இணைப்பில்…
 
அனைவரும் குடும்பத்துடன் வருக…! அன்பர்களையும் அழைத்து வருக…!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக….!!!
 
நன்றி! வஸ்ஸலாம்.

News

Read Previous

ஊடக விபச்சாரம் !

Read Next

பெப்பர் சிக்கன்

Leave a Reply

Your email address will not be published.