கமுதி பகுதி வாக்கு சாவடிகளில் மின்னணு எந்திரம் பழுது

Vinkmag ad

 

தன.திராவிட மணி, கமுதி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதி சில வாக்கு சாவடிகளில் மின்னணு எந்திர பழுது காரணமாக ,வாக்குப்பதிவு தடைப்பட்டது.   

கமுதி தனியார் மேனிலைப்ள்ளியில் 4 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் எண்-29 வாக்குச் சாவடியில் காலை 8 மணிக்கு மேல் மின்னணு எந்திரத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.முகம்மதபு ஜலீலுவிற்குரிய 6-வது எண் பட்டன் இயங்கவில்லை.உடனே தி.மு.க. ஏஜண்டுகள் இதை ஆட்சேபித்து, வாக்கு பதிவை நிறுத்தச்செய்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்து தொகுதி தே ர்தல் துணை அலுவலர் நாகநாதன் உத்தரவில் வட்டாட்சியர் சி.இந்திர வள்ளி, மின்னணு எந்திர டெக்னீஷியனுடன் கமுதி பள்ளி க்கு விரைந்தார்.

மின்னணு எந்திரம் சீரமைக்கப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப பின்பு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இதே போன்று ஓ.கரிசல் குளம் பள்ளி வாக்குச் சாவியிலும், பேரையூர் அரசு மேனிலைப்பள்ளியில் எண்-48, எண்-50 வாக்குச் சாவடிகள் ஆகியவற்றிலும் மின்நணு எந்திர பட்டன் பழுதாகி, அதனால் வாக்குப்பதிவு தடைப்பட்டது.பின்னர் சிறிது நேர த்தில் எந்திரம் சீரமைக்கப்பட்டது.  முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி அளவில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையிலும் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு வாக்குப் பதிவு சதவீத விவரம்:

காலை 9 மணி-14.26, பகல் 11 மண-32.58, பகல் 1 மணி–47.64,  பகல் 3 மணி-55.82,  மாலை 6 மணி-61.12

News

Read Previous

அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றவர் கைது

Read Next

பாட்டில்களில் புற்று நோய் காரணிகள் : 5ம் எண்ணுக்கு கீழ் இருந்தால் விஷ தன்மை இருக்குமாம்

Leave a Reply

Your email address will not be published.