இந்தியப்பாராளுமன்றத்தேர்தலில் ஃபாஸிசமும் வாக்காளர்களின் பொறுப்பும்

Vinkmag ad


ஜும்ஆ உரை

 நமது இந்திய தேசம் பதினாறாவது மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. நடைபெற இருக்கின்ற இந்த தேர்தல் இந்தியாவில் இதுவரை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைய இருக்கின்றது. சரியாகச் சொன்னால் இந்த தேர்தலில் இந்திய வாக்காளர்கள் கொஞ்சம் கவனக் குறைவாக செயல்பட்டு விட்டாலும் இந்தியாவின் தலைவிதியே மாறியமைந்து விடுகின்ற ஒரு தேர்தலாக இருக்கின்றது.

ஆமாம், இந்தத்தேர்தலில்தான் ஃபாஸிசம் தன்னுடைய முழு பலத்தையும் நேரடியாக முழு வீச்சுடன் களமிறக்கியுள்ளது. இன்றைக்கு ஃபாசிசம்தான் நம்முடைய அரசியல் களத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தத்தேர்தலில்தான் நாம் ‘பிரதமர் வேட்பாளர்’ என்கிற சொற்பிரயோகத்தை அதிகமாகக் கேட்கிறோம். அமெரிக்காவில் ஒருவர் தலைவர் பதவிக்கும் பிரதமர் பதவிக்கும் போட்டியிட அனுமதியுண்டு. ஆனால், இந்தியாவில் இந்த பதவிக்கு ஒருவர் போட்டியிடவே முடியாது. இந்தியாவைப்பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் எனும் சொற்பிரயோகம் அரசியல் ரீதியாகவும் மொழி ரீதியாகவும் முழுத்தவறாகும். காரணம், இந்தியாவின் பிரதமர் தேர்வு என்பது, 540 MP க்கள் கொண்ட மக்களவையில், மக்களவை அங்கீகரிக்கின்ற ஒருவர்தான் மக்களவைத்தலைவராக அதாவது பிரதம மந்திரியாக முடியும், அதனால் இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் என்ற வார்த்தையே ஒரு திருட்டுத்தனமான வார்த்தைப்பிரயோகமாகும்.

இந்திய வாக்காளர்களுக்கு முன்னால் இந்தப்பதவியின் பெயரால் ஒருவரை ஊதிப் பெரிதாக்குவதும் தனியொரு மனிதனை ஒரு ‘சூப்பர் மேனாக சித்தரித்துக்காட்டுவதும்  ஃபாசிசத்தின் நடைமுறையாகும்.

மக்களவைத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் எனும் பதவி இல்லையென்பதையும் அப்படிச்சொல்வது மக்களை தவறான கருத்தில் சிக்க வைக்கின்ற மோசடி என்யென்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தனியொரு மனிதனைக்குறித்து போலியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது மீடியாக்கள்தான். இருப்பதையும் இல்லாததையும் உண்மையைய்ம் பொய்யையும் உண்மைக்குப் புறம்பான விஷயங்களையும் எடுத்து வைப்பதும், பிரச்சாரம் செய்வதும் விலைக்கு வாங்கப்பட்ட இந்திய மற்றும்  வெளிநாட்டு மீடியாக்கள்தான்.

மீடியாக்கள் இன்றைக்கு ஃபாஸிசத்திற்கு விலை போய் விட்டன. பத்திரிக்கைகளும் சானல்களும் தாய்மைக்குச் சமமான தங்களின் இறையான்மையை விற்பனை செய்து விட்டன.  இந்த உலகத்தில் ஃபாஸிசத்தை அறிமுகம் செய்த கொடுங்கோலர்களான ஹிட்லரையும், முசோலினியையும், ஸ்டாலினையும் சூப்பர் மேன்கள் என்று ஊதிப்பெரிதாக்கியது மீடியாக்கள்தான்.

உண்மையில் இப்படி ஊதிப்பெரிதாக்குவது ஜனநாயக விரோதமாகும். ஒரு போதும் ஒரு கட்சியோ, கூட்டணியோ அரசோ ஒரு தனி மனிதனின் பேரில் தேர்தலில் பங்கு பெறக்கூடாது; மாறாக, கொள்கை, நிலைப்பாடுகள் மற்றும் நடைமுறைகளின் பெயரில்தான் ஒரு அரசு அல்லது கட்சி, அல்லது கூட்டணி தேர்தலில் பங்கு பெற வேண்டும்.

இந்த ஃபாஸிசம் ஒரேயொரு மாநிலத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தியதன் விளைவை நாம் பார்த்தி ருக்கிறோம். அன்றைக்கு அந்த கொடுமையான வன்முறைகளை ஃபாஸிசம் தலைமை தாங்கி நடத்திய போது அதன் வாக்குமூலம் என்னவாக இருந்தது? “இது இந்தியா முழுவதும் நடத்தப்படுவதற்கான ஒரு முன்னோட் டம் மட்டும்தான்.” என்று கூறியது. இப்படிப்பட்ட ஃபாசிஸ சக்திகளிடம் இந்த நாட்டின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் நம்முடைய ஓட்டுக்களின் மூலம் வழங்கினால் இந்தியா முழுவதும் ரத்தக்காடாகும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்திய மக்களின் வாக்களிக்கும் உரிமை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய மக்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமையை  கவனத்துடன் பயன்படுத்தவில்லையானால் இந்திய நாடே ஃபாசிசத்திற்கு பலியாகி விடும்அபாயமுண்டு.

ஃபாஸிசம் தமிழகத்துக்குள் நுழைவதற்கு இங்கிருக்கும் சில மாநிலக்கட்சிகள் கூட்டணி என்கிற பெயரில் வழியமைத்துக்கொடுத்திருக்கின்றன. வழி மொழிந்து கொண்டும் இருக்கின்றன.

உண்மையில் ஒவ்வொரு தேர்தலும் தொலை நோக்குத்திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டுதான் நடக்க வேண்டும். குறைந்த பட்சம் இந்த நாட்டின் நிலையான வளர்ச்சி, பொதுவுடைமைக் கான அடிப்படையான பாதுகாப்பு, ஒவ்வொரு குடிமகனின் சமூக, பொருளாதார முன்னேற்றம் போன்ற கண்ணோட்டங்களையாவது மக்களின் முன்னால் வைத்துக்கொண்டு தேசிய அளவில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், இந்த பதினாறாவது மக்களவைத்தேர்தல் இரண்டு தனி மனிதர்களுக்கிடையிலான போராட்டமாகத் தான் நடை பெற இருக்கிறது. மக்களுடன் நேரடியாக கருத்துப்பரிமாற்றம் செய்ய முடியாத இரண்டு தனி மனிதர்களின் குற்றங்குறைகளை மட்டும் கேட்டு வாக்களிக்க வேண்டிய நிலைமை உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயாக நாட்டுக்கு மரியாதையில்லை.

இந்த சூழ்நிலையில்…,

  • ஐந்து வருடங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இந்தப் பிரச்னைகளை எப்படி அணுகியது?
  • எதனை அடைந்து கொண்டது?
  • எதனை இழந்துள்ளது?
  • இனி வர இருக்கின்ற அரசிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன?
  • அந்த எதிர்பார்ப்பை சாத்தியமாக்குவதற்கு தகுதியான கூட்டணி எது?
  • கட்சி எது?
  • வேட்பாளர் யார்?

என்பது போன்ற ஏராளமான விஷயங்களை ஓட்டுச்சாவடிக்கு செல்வதற்கு முன் வாக்காளர் யோசிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால், இத்தகைய முக்கியமான விஷயங்கள் எதுவும் சீரியசாக விவாதம் செய்யப் படுவதில்லை என்பதுதான் உண்மை.

கூட்டணிகளிலிருக்கும் கட்சிகளும், கட்சிகளிலிருக்கும் தலைவர்களின் மாறுபட்ட நிலைப்பாடுகளும் புதிய கூட்டணிகளின் பிறப்புகளும், பிளவுகளும் பிரதமர் வேட்பாளர்களும்தான் இன்றைய போது விவாதங்களில் முக்கிய விஷயங்களாக இருக்கின்றன. இந்த நிலைமையானது, இந்திய அரசியல் என்பது மக்களிடமிருந்தும் அவர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளிலிருந்தும் விலகி சென்று கொண்டு இருக்கிறது என்பதன் அடையாள மாகும். மக்கள் பிரதிநிதி சபைகளை முதலீட்டாளர்களும் மற்ற சுயநலமிகளும் கைப்பற்றுவதற்கு இது வாய்ப்பை வழங்கி விடுகிறது.

எனவே, வாக்களிப்பது நம்முடைய ஜனநாயகக்கடமை என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டியிருக்கிறது. இந்த ஜனநாயகக்கடமை என்பது வாக்காளர்களான நமக்கு மட்டுமல்ல; வாக்குகளை பெற்று விட்டு பாராளு மன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளாக செல்கின்றவர்களுக்கும், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கும் இந்த ஜனநாயகக் கடமை என்பது இருக்கிறதா, இல்லையா? என்று சிந்தித்துப்பார்க்கின்ற கடமையும் நமக்கு இருக்கிறது.

ஜனநாயகத்தின் புனிதமான ஆலயம் என்று சிறப்பித்து கூறப்படுகின்ற அமைப்புதான் பாராளுமன்றம். இந்திய மக்களின் கனவுகளை நனவாக்கவும், அவைகளை சாத்தியமாக்க வும் வழி தேடப்படுகின்ற உன்னதமான நிலையம்அது. மக்கள் நலனுக்கும் வளர்ச்சிக்கும் உரிய வழிகளை திட்டமிடுவதும், அதனை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை வடிவ மைப்பதும்தான் மக்கள் பிரதிநிதி சபையான பாராளு மன்றத்தின் பொறுப்பு.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் பின்புலமாக நின்று உதவி செய்யும்போது, எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி அதனைத் திருத்துவதற்கு நிர்பந்திக்கவும் செய்ய வேண்டும். மக்களவையின் உறுப்பினர்கள் வழியாக மக்களின் ஆசைகளும் விருப்பங் களும்தான் எதிரொலிக்க வேண்டும். இரண்டு பிரிவினர்களும் அவரவர்களின் பொறுப்புகளை சரிவர நிறை வேற்றும்போதுதான் மக்களுக்கான மக்கள் ஆட்சி என்கிற கருத்தாக்கம் நடைமுறைக்கு வரும்.

தேசப்பற்றும், மக்கள் சேவையின் மீதான விருப்பமும், ராஜ தந்திர அறிவும் தான் மக்கள் பிரதிநிதியாகு வதற்கான தகுதி. சுதந்திர இந்தியாவின் ஆரம்ப வருடங்களில் மக்கள் பிரதிநிதி சபைகள் இந்த முறையில்தான் கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது செயல்பட்டு வந்திருந்தன. ஆனால். இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்த நடைமுறைகள் தலை கீழாகி விட்டது.

கண்ணிலும், மூக்கிலும், மிளகாய் பொடி வீசுவது, க்ளோரோஃபாம் மயக்க மருந்தை சுவாசிக்க செய்வது, கத்தியைக்காட்டி மிரட்டுவது இவையெல்லாம் வழிப்பறிக்காரர்களும், மாஃபியா கொள்ளைக்கூட்டமும் மனிதர் களிடம் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்துகின்ற கொடூரமான வழிமுறைகளாகும். ஆனால், தாக்கல் செய்யப் பட்ட மசோதாக்களை கிழித்தெறிவதற்கும், உரைகளை தடுப்பதற்கும் மக்களவையின் நடவடிக்கைகளை முடக் குவதற்கும் இந்த வழிமுறைகள்தான் பாராளுமன்றத்தில் அரங்கேறியது. நம்முடைய மரியாதைக்குரிய மக்களவை உறுப்பினர்களின் ஒழுக்க நிலையும், குண்டாயிசத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

பாராளுமன்றத்தில் நடக்கின்ற கோமாளித்தனங்களை மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து தினம் தினம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், ஒரு பொறுப்பான மக்களிடமிருந்து எழுந்து வர வேண்டிய எதிர்ப்புகளும் மறுப்புகளும் அவர்களிடமிருந்து எழுவதே இல்லை. அது பாராளுமன்றத்தை ஒரு விளையாட்டு திடலாக்குகின்றவர்களுக்கு உற்சாகத்தை தந்து விடுகிறது.

பாராளுமன்றத்திற்காக நாம் பாழாக்கிக் கொண்டிருக்கின்ற தொகை எவ்வளவு என்பதைக் குறித்தும் நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

543 பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் தேர்ந்தெடுப்பதற்கு மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய்கள் செலவா கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்திர சம்பளம் மட்டும் 245 கோடி! மக்களவை கூடுவதற்காக ஒரு நிமிடத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய்! இது போக அவர்களின் வாகனங்களுக்கான பெட்ரோல் செலவு, இலவச விமான பயணங்கள், இதர சலுகைகள் என்று ஏராளமான செலவுகள்!

பரிதாபத்துக்குரிய இந்திய மக்களின் இவ்வளவு பணத்தையும் செலவு செய்து இந்த அவையை நடத்திக் கொண்டிருப்பது மக்களவையில் பரஸ்பரம் சண்டையிடுவதற்கும் மல்யுத்தம் நடத்துவதற்கும்தானா என்று இனியாவது குடிமையுணர்வு கொண்டவர்கள் சிந்தித்தாக வேண்டும். “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா…!” என்று சொல்லிக்கொண்டு போய் விடுவது ஒரு உண்மையான இந்தியக்குடிமகனின் பொறுப்பான பேச்சாக இருக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலனை விட்டு விலகும்போது ஜனநாயகத்தின் ஆன்மா செத்துப் போகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களுக்காக பேசுவதற்கும், மக்களுக்காக பணி செய்வதற்கும்தான் தாங்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றோம் என்கிற உணர்வு மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும். அதே போல மக்கள் பிரதிநிதிகள் பேசுவதும் செயல்படுவதும் தங்களுக்கு வேண்டித்தானா என்று மக்களும் சோதித்து பார்க்க வேண்டும்.

மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்கிற இந்த இரண்டு பிரிவினருக்கும் இன்றைக்கு இந்த பொறுப்புணர்வு இல்லை என்பதுதான் இன்றைய மோசமான நிலை.

மக்கள் சிந்தித்தால்தான் இந்த நிலைமைக்கு முடிவு கட்ட முடியும். ஒழுக்கமும், பொறுப்புணர்வும், மக்கள் நலனில் அக்கறையும் இல்லாதவர்களை பாராளுமன்றத்திற்கு இனி அனுப்புவதில்லை என்று அவர்கள் முடிவெடுக்க வேண்டும்.

இந்தியப்பாரளுமன்றம் வெட்கக்கேட்டின் அதல பாதாளத்தில் இருக்கிறது என்று கடந்த 2008 ம் வருடத்தில் அன்றைய மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கூறினார். எப்படிப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பதை வரவிருக்கின்ற தேர்தலில் வாக்களார்கள் கவனத்துடன் சிந்தித்து செயல் படுவதற்கு தயாராக இல்லையென்றால் 16 வது மக்களவையும் வெட்கக்கேட்டின் உச்சத்திற்கு செல்லும் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்.

முஸ்லிம்களின் நிலைப்பாடு

அடுத்ததாக, நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தின் நிலையையும் இந்த பாராளு மன்றத் தேர்தல் சமயத்தில் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இந்தியாவில் மிகவும் சிறுபான்மையாக இருக்கின்ற முஸ்லிம் சமுதாயம் சுட்டுப்பொசுக்கும் பிரச்னைகளை அதிகமாக எதிர் கொண்டு வருகின்றவர்கள்தான்.

பொதுவான மற்ற பிரச்னைகளைத்தாண்டி வேறுபாடு காட்டப்படுதல், பாதுகாப்பில்லாமை, தனிமனித ஒழுக்கத்துக்கு எதிராக உயர்ந்து வருகின்ற சவால், பயங்கரவாதத்தடுப்பு நடவடிக்கை எனும் பெயரில் அரங் கேறுகின்ற கொடுமையான அச்சுறுத்தல்கள் என்று ஏராளமான வேதனைகளை அவர்கள் அனுபவித்து வருகின்றார்கள்.

நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கின்ற இந்த சமுதாயம் உண்மையில், ஏராளமான ஜாதி – மத, உட்சாதிப்பிரிவுகளைக் கொண்டிருக்கின்ற இந்த ஜனநாயக நாட்டில் என்றைக்கும் பிரபலமாக இருக்கின்ற ஒரே சமுதாயமாகும். ஒரு லட்சிய உணர்வோடு அவர்களின் ஒட்டு வங்கி திட்டமிட்டுப் பயன்படுத்தப் பட்டிருந்தால் சமுதாயத்தின் பிரச்னைகள் கணிசமான அளவுக்கு இதற்குள் தீர்க்கப்பட்டிருக்கும். நாட்டின் மொத்த அரசியல் அம்சங்களிலும் அது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஒற்றுமையுடன் இருந்திருந்தால் எந்தக்கட்சியாலும் முஸ்லிம்களை தவிர்த்து விட்டு முன்னேறிச் சென்றிருக்க முடியாது. இந்த உண்மையை உரிய முக்கியத்துவத்துடன் கவனத்தில் கொள்வதற்கு சமுதாயத் தலைமைகள் தயாராவதில்லை. ஒருபுறம் முஸ்லிம் மக்கள் தொகை பெருகிக்கொண்டிருக்கும்போது மறு புறம் சட்ட வடிவமைப்பு சபைகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்ற மோசமான நிலைமைதான் உள்ளது.  1980 ல் தான் மிக அதிகமான முஸ்லிம் MP க்கள் மக்களவையில் இருந்தார்கள். அதாவது, 49 MP க்கள். இது கூட பத்து சதவீதத்திற்கும் குறைவுதான். 2009 ல் 30 MP க்கள் வெறும் 5.52% மட்டும்.

வாகாளிப்பதில் நமது பொறுப்புணர்வு பற்றி திருக்குர்ஆன்  

மார்க்க விஷயங்களைப்போலவே அரசியல் களத்திலும் முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கின்றார்கள். வாக்களிப்ப தென்பது சமுதாயத்தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் சொல்வதற்கு தக்கபடி நிறைவேற்ற வேண்டிய ஒரு சேவையாகும். அதனுடைய பலத்தையும் சாத்தியங்களையும் அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. திருக்குர்ஆன் இந்த தேர்தல் பங்களிப்பைப்பற்றி இப்படி கூறுகிறது :

 

وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ

 

G¨£o |À»uõPÄ® CøÓ¯a\zvØS E›¯-uõPÄ® EÒÍ÷uõ AvÀ GÀ÷»õ¸hÝ® JzxøDz[PÒ! BÚõÀ Gx £õÁ©õÚuõPÄ®, Áர®¦ Ph¢uuõPÄ® EÒÍ÷uõ AvÀ GÁ¸hÝ® JzxøǯõwºPÒ. ÷©¾®, CøÓÁøÚ Ag_[PÒ! {a\¯©õP AÁÝøh¯ ushøÚ ªPU Pkø©¯õÚx. 5 – 2

ஆனால், அதே நேரத்தில் இந்த வாக்களிக்கும் பொறுப்பு பற்றி ஒரு எச்சரிக்கையையும் குர்ஆன் எடுத்துச் சொல்கிறது. அதனையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

 

مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا

 وَكَانَ اللّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُّقِيتًا

 ¯õº |ßø©UPõP¨£›¢xரைக்கின்றாரோ AÁº A¢|ßø©°À £[S ö£ÖÁõº; ÷©¾®, ¯õº wø©UPõP¨ £›¢xரைக்கின் றாரோ AÁº Azwø©°À £[S ö£ÖÁõº. ÷©¾®, AÀ»õð GÀ»õÁØøÓ-²® PsPõo¨£ÁÚõP C¸UQßÓõß. 4 – 85

சமுதாயத்தலைமையும் அறிஞர்களும்

இத்தனைக்கும் நமது சமுதாயத்தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் அரசியல் ஞானமும், அறிவும், உணர் வும் உள்ளவர்கள்தான், ஆனால், தங்களின் அரசியல் பலத்தை ஒருங்கிணைத்து சமுதாயத்தின் எரிகின்ற பிரச்ச னைகளுக்கு பரிகாரம் காணுகின்ற வகையில் பயன்படுத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்வதில்லை.

ஒவ்வொரு தலைவருக்கும் அவரவர்களுக்கே உரிய கண்ணோட்டமும் இலட்சியங்களும்தான் இருக்கின்றன.  அவர்களுக்கு இருக்கின்ற இந்த கண்ணோட்டமும் லட்சியமும்தான் ஒட்டு மொத்த சமுதாயத்தின் உன்னதமான நோக்கங்கள் என்று அவர்கள் பிடிவாதமாகவும் இருக்கின்றார்கள்.

தேர்தல்களில் அவரவர்களுக்கு பிடித்த கட்சி, அல்லது கூட்டணியின் ஏஜண்டுகளாக செயல்படுகின்றார்கள். அவர்களாக ஒரு முடிவை எடுத்து விட்டு அந்த முடிவின்படி தங்களுக்கு சாதகமான கட்சியோடு கூட்டு சேர்ந்து கொண்டு ஒட்டு மொத்த சமுதாயமும் இவர்களுக்குப்பின்னால் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்; அப்படியே பிரசாரமும் செய்கின்றார்கள்.

இவர்கள் தங்களின் சொந்த நலன்களுக்காக கூட்டு சேர்ந்திருக்கின்றார்களே ‘அந்தக்  கட்சிகளில் கூட்டு வைத்துக்கொள்ளலாமா?’ என்று சமுதாய மக்களிடம், அல்லது சமுதாய மக்களின் பிரதிநிதிகள் என்று யாரிட மாவது ஆலோசனை செய்துதான் கூட்டு வைத்துக்கொண்டார்களா?

இல்லையெனும்போது முஸ்லிம் சமுதாயத்தை எப்படி வேண்டுமானாலும் ஒட்டிச்செல்லலாம் என்று நினைக் கின்ற மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

தேர்தல் காலங்களில் முஸ்லிம் அமைப்புகளும் அதன் தலைவர்களும் முஸ்லிம் அரசியலைப்பற்றி ஆய்வரங் கங்களையும், கருத்தரங்கங்களையும் முறையாக நடத்துவதுண்டு. சமுதாயத்திற்கு உறுதியான அரசியல் நிலைப்பாடு இருக்க வேண்டும்; வாக்களிப்பதில் ஒருமித்த சிந்தனை வேண்டும்; என்றெல்லாம் எல்லோரும் கூறுவார்கள். ஆனால், அவை எவற்றிலும் உருப்படியான முடிவுகள் காணப்படாது. சமுதாயத்திற்கு சரியான முடிவும் வழியும் கிடைக்காது.

பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகளும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் பல்வேறு அரசியல் கட்சிகளின் அல்லது கூட்டணிகளின் ஆதரவாளர்கள்தான். முஸ்லிம் ஒட்டு வங்கியின் இந்த சிதறடிப்பு முக்கியமான தேசியக்கட்சிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கிறது. தங்களுக்குப்பின்னால் நின்றவர்களுக்கு ஏதேனும் எலும்புத்துண்டுகளை வீசி எறிவதைத்தவிர முஸ்லிம் சமுதாயத்திற்கென்று எதனையும் அவர்கள் செய்ய வேண்டியதில்லை என்று அவர்கள் நினைக்கின்றார்கள். முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரே தலைமையோ, அரசியல் நிலைப்பாடோ இல்லையென்று முக்கிய தேசிய கட்சிகள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். பல்வேறு ஏஜண்டுகளின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்ற ஒட்டு விகிதத்தின் பேரில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று எதனையும் கொடுக்க வேண்டியதில்லை என்று அவர்கள் நினைக்கின்றார்கள்

எந்தக்கட்சியும் இந்த சமுதாயத்தின் சகோதரர்கள் அல்ல. ஏறக்குறைய எல்லோருமே சுரண்டல்காரர்கள்தான். சுரண்டக்கூடியவர்களிடமிருந்து சுரண்டப்படுபவர்களுக்கு கிடைக்க வேண்டியது மட்டுமே முஸ்லிம்களுக்கு கிடைக்கும்.

முஸ்லிம் மக்கள் தொகையின் பலத்தை கவனித்து பார்க்கும்போது இந்திய அரசியலின் போக்கில் குறிப்பிட்ட பங்கு வகிப்பதற்கு தகுதியான ஒரு சமுதாயத்தின் இந்த பலவீனத்திற்குக்காரணம் அரசியல் விழிப்புணர் வில்லாமை, சரியான தலைமையில்லாமை, ஒற்றுமையில்லாமை என்பதைத்தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

சமுதாயம் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து நிற்பதற்கு தயாரானால் ஆதரவு தேடி மற்ற கட்சிகளுக்குப் பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை. கட்சிகள் நமக்குப்பின்னால் ஓடி வருகின்ற நிலைமையை உருவாக்கி விடலாம். முஸ்லிம் சமுதாயம் இந்த பாடத்தை கற்றுக்கொள்வதற்கு போதுமான கால அளவுதான் சுதந்திர இந்தியா கண்ட 65 ஆண்டு காலமும். ஆனால், சமுதாயம் இப்பொழுதும் பழைய வழியிலேயேதான் நடந்து சென்று கொண்டிருக்கிறது. இனி எப்போது இந்த சமுதாயம் தன்னுடைய சிந்தனையை மாற்றிக் கொள்ளப் போகிறது?

குர்ஆனின் வரலாற்று முன்மாதிரி 

குர்ஆன் கூறும் வரலாற்று முன்மாதிரிகளில் இருந்தும் நாம் பாடம் படித்தாக வேண்டும்.

முன்னர் வரலாற்றில் வாழ்ந்து மறைந்த மகத்தான மனிதர்தான் மூஸா (அலை) எனும் இறைத்தூதர். எகிப்து நாட்டில்தான் மூஸா நபி பிறந்தார்.அவரது செயல்பாடுகளின் தலைமையிடமாக இருந்ததும் எகிப்துதான். ஃபிர்அவ்ன்கள் எனப்படும் மன்னர்கள்தான் அந்த நாட்டை ஆட்சி செய்து வந்தார்கள். அவர்கள் இறை மறுப்பாளர்களாக மட்டுமல்ல; முழுக்க முழுக்க மக்கள் விரோதிகளாகவும் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு கீழ் இருந்த மக்களின் மீது கொடுமையான அநீதியையும் பயங்கரமான அட்டூழியங்களையும் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஃபிர்அவ்ன் ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளின் மிகப்பெரிய இரைகளாக பனூ இஸ்ரவேல் சமுதாயம் இருந்தது.

நான்தான் சரியென்றது மட்டுமல்ல; நான் மட்டும்தான் சரி என்பதுதான் ஃபிர்அவ்ன் ஆட்சியின் நிலைப்பாடு. பனூ இஸ்ரவேல் சமுதாய மக்களின் ஆண் குழந்தைகளை முற்றிலுமாக கொன்றொழித்ததுடன் பெண் குழந்தைகளை கொல்லாமல் கொல்வதும்தான் ஃபிர்அவ்னின் வழக்கமாக இருந்தது.

ஒடுக்கப்பட்ட பனூ இஸ்ராயீல் சமுதாயத்தை அத்தகைய ஒடுக்கும் ஆட்சியின் பிடியிலிருந்து மீட்டெடுப் பதுதான் இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் முக்கியமான இலக்காக இருந்தது. விடுதலைக்கான அந்த வழியில் மூஸா நபியும் அவரை பின்பற்றியவர்களும் கொடுமையான அக்கிரமங்களையும் ஒடுக்குதலையும் சகிக்க வேண்டி வந்தது. நெடுங்காலம் வரை, தொடர்ந்த முயற்சிகளுக்கும் பொறுமைக்கும் பிறகு இறைத்தூதர் மூஸாவையும் அவரது சமூகத்தையும் கொடுமையாளர்களிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினான். அத்துடன் ஃபிர்அவ்னையும் அவனது பிரதானிகளையும் கடலில் மூழ்கடித்து அழிக்கவும் செய்தான்.

எகிப்து தேசத்தின் அனைத்து வளங்களும் தனிப்பட்ட ஒரு சில ஃபிர்அவ்னிய குடும்பங்களுக்கும் சமுதாய பிரமுகர்களுக்கும் மட்டுமே உரியது என்று கூறிக்கொண்டு நாட்டு மக்களின் அறிவையும் ஆற்றல்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம்தான் ஃபிர்அவ்னின் அரசியல் கூட்டம்.

நாட்டு மக்கள் அனைவரையும் ஒரு சில பணக்காரர்களுக்கும் சூனியக்காரர்களுக்கும் அடிமையாக்கிக் கொடுத்து, நான் மட்டும்தான் சரியானவன்; நான்தான் அனைவரின் கடவுள்; மற்றவர்களெல்லாம் என்னுடைய அடிமைகள்” என்று ஃபாசிசம் பேசியவன்தான் ஃபிர்அவ்ன்! பெரும்பான்மையான கிப்தி இன மக்கள் ஆள வேண்டும்; சிறுபான்மையான இஸ்ரவேல் சமுதாயம் பெரும்பான்மையினரின் ஆளுகையின் கீழ் வாழ வேண்டும்.” இதுதான் கிப்தி இன மக்களின் ஆணவமான குரலாக இருந்தது. இன்றைக்கும் இந்தியாவில் இந்த ஆணவக்குரல் சில ஃபாசிச அரசியல் சக்திகளின் பின்பலத்தோடு ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அன்றைக்கு ஃபிர்அவ்னியம்! இன்றைக்கு ஃபாசிசம்

ஃபிர்அவ்னின் அராஜக அரசியல் நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த பனூ இஸ்ரவேல் சமுதாயம் மூஸா நபி எனும் புரட்சித்தலைவரின் பின்னால் அணி வகுத்த போது ஃபிர்அவ்னின் அராஜக அரசியல் முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டது.

இன்றைக்கு இந்தியாவுக்கும் மூஸா நபியின் உறுதியும் வீரமும் தேவைப்படுகிறது. இன்றைக்கு நம் நாட்டில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கும் இந்த தருணத்தில் தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக நிற்கின்ற பிரதானமான இரண்டு தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் இதர மாநிலக்கட்சிகளின் நிலைப்பாடுகளை, வாக்காளர்களாக இருக்கின்ற – வேறு வார்த்தைகளில் சொன்னால் ஆளுகின்றவர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தில் இருக்கின்ற – மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன.

பொதுவாக தேர்தல் களத்தில் நின்று வெற்றியடைவதும் தோல்வியடைவதும் அரசியல் கட்சிகளல்ல; அப்படித்தான் நாம் ஒவ்வொரு தேர்தலின் போதும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், உண்மை அதுவல்ல. தேர்தலில் எந்தக்கட்சி வெற்றியடையும் என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. சில தேர்தல் களில் சில கட்சிகள் வெற்றியடையும். வேறு சில தேர்தல்களில் அடுத்த சில கட்சிகள் வெற்றியடையும். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியடைபவர்கள் யாரென்பதை நிச்சயமாக சொல்ல முடியும். தோல்வியடைபவர்கள் வேறு யார்? ஒட்டுப்போட்ட மக்கள்தான்!

தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக நிற்பவர்கள் இரு வேறு அரசியல் கட்சிகளல்ல; உண்மையில் ஒருபுறம் வாக்காளர்களும் மறுபுறம் அரசியல் கட்சிகளும்தான்.

இந்தப்போட்டியில் வாக்களர்களின் நிலை என்பது வாழும் தலைமுறையையும் வரும் தலைமுறையையும் பாதுகாப்பது என்பதாக இருக்கும்போது, அரசியல் கட்சிகளின் நிலை என்பது மக்கள் விரோத அரசியலும் பொருளாதார நோக்கங்களும் மட்டும்தான். கார்ப்பரேட் கம்பெனிகள், மல்டிநேஷன் கம்பெனிகள், அவர்களின் பேங்க் பேலன்ஸ் ஆகியவற்றின் பெருக்கம் ஆகியவை மட்டும்தான்.

பூனை எலியை துரத்திக்கொண்டு ஓடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். பூனை ஓடுவது தன்னுடைய உணவுக் காக! ஆனால், எலி ஓடுவதோ தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக! தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் பூனை என்றால்.., வாக்காளர்களாகிய மக்கள்தான் எலி!

என்ன செய்ய வேண்டும்?

  • எது தேசம்?
  • தேச பக்தி என்பது என்ன?
  • இந்த நாடு உண்மையில் யாருடையது?
  • இந்த நாட்டின் வளங்கள் யாருக்குரியது?

இந்தக்கேள்விகளுக்கான அரசியல் கட்சிகளின் பதில்கள் என்ன தெரியுமா?

v  அரசியல் ஸ்திரத்தன்மைதான் தேசம்!

v  சிறுபான்மையினரை ஒழித்துக்கட்டுவதுதான் தேச பக்தி!

v  இந்த நாட்டின் வளங்கள் அனைத்தும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குரியது!

v  இந்த நாடு பணக்கார்களுக்குரியது!

வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் இந்தகேள்விகளுக்கான பதில்களை, சரியான பதில்களை வாக்களர்களான நாட்டு மக்கள்தான் சொல்ல வேண்டும்.

இதற்கான பதில்களை கார்ப்பரேட் கம்பெனிகளின் விருப்பங்களால் கட்டுப்படுத்தப்படுகின்ற ஆட்சியமைப்பல்ல; நாட்டினுடைய சாதாரண மக்கள் இந்தக்கேள்விகளுக்கான சரியான பதில்களை தங்களுடைய வாக்குகளால் சொல்ல வேண்டும்.

இதனைத்தான் மூஸா நபியும் அவரைப் பின்தொடர்ந்தவர்களும் நிரூபித்துக் காட்டினார்கள்.

கடந்த ஒரு பாராளுமன்றத் தேர்தலின் போது ஃபாசிஸ அரசியல்வாதிகள் அகில இந்திய அளவில் சொன்ன ஒரு பொய்தான் “INDIA SHAINING! – “இந்தியா ஒளிர்கிறது!” என்ற உலகமகாப்பொய்! இந்த உலகமகாப்பொய்க்கான “ஆரம்ப கட்ட செலவு மட்டும் ரூபாய் ஏழு கோடியாக்கும்!” என்று இந்தப்பொய்யைவடிவமைத்த ‘கிரே வேர்ல்ட் வைடு’ நிறுவனத்தின் இயக்குனர் பிரதாப் சுதன் பெருமையாகச் சொன்னார்.

இதோ, இப்பொழுதும் அடுத்து நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக அதே மாதிரியான ஒரு உலக மாகாப் பொய்யை இந்திய மக்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். அந்தப்பொய் VIBRANT GUJRAT என்கிற பொய்!

கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால்…அதைக்கேட்டுக்கொண்டு போக இந்திய மக்கள் ஒன்றும் ஏமாளிகளல்ல என்பதை ஃபாசிஸ அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள செய்ய வேண்டும்.

ஒரு பழமொழி கேட்டிருப்போம் இப்படி: “பொய்யைப் பொருத்தமாகச்சொன்னால் உண்மை நின்னுக்கிட்டு ‘திரு திரு’ன்னு முழிக்குமாம்!” என்று! அதைப்போலத்தான் இன்றைக்கு VIBRANT GUJRAT – துடிக்கும் குஜராத் என்கிற பொய்க்கு முன்னால் பல உண்மைகள் மூடி மறைக்கப் படுகின்றன. குஜராத் மாநிலத்தை இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலமாக்கிய நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்கிற பெரும் முதலாளிகளின் விருப்பத்தை  இந்திய மக்கள் அனைவரின் விருப்பமாக சித்தரிப்பதற்கு பல கோடி ரூபாய் களை செலவு செய்து வருகின்றார்கள்.

மோடி பிரதமராக வர வேண்டும் என்று யார் விரும்புகிறார்கள்? வெளிப்படையாக தங்களுடைய கருத்தை சொல்லி இருப்பவர்கள் யார்? 2013 செப்டெம்பர் 6 – ஆம் தேதி ECONOMIC TIMES பத்திரிக்கையை பார்த்தால் அதனை தெரிந்து கொள்ளலாம். அது இந்திய முதலாளிவர்க்கத்தின் பத்திரிக்கை இந்தியாவின் டாப் 100 முதலாளிகளில் (டாடா, பிர்லா, அம்பானி, கோயங்கா, அதானி உட்பட) 74 பேர் அடுத்த பிரதமராக மோடி வர வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள்.

இது முதலாளிகளின் விருப்பம். இன்றைய அரசியல்வாதிகள், நாட்டு வளங்களை பன்னாட்டுக் கம்பெனி  களுக்கும் இந்திய பண முதலைகளுக்கும் தாரை வார்த்துக்கொடுப்பதைத்தான் தேசம் மற்றும் தேசத்தின் பாதுகாப்பு, வளர்ச்சி என்று சொல்கிறார்கள். அப்படியானால் தேசம் என்பது சில பணக்காரர்களுக்கான அரசியல் நடவடிக்கை என்று சுருங்கி விடுகிறது. அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தேசத்தை விரும்புபவர்களாகவும் அதனை எதிர்ப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்களாகவும் ஆகி விடுகின்றார்கள்.

நான் சொல்வது மட்டும்தான் சரி என்பது ஜனநாயகத்தின் குரலல்ல; அது ஃபாசிசத்தின் ஓங்காரம்! இவையெல்லாம் நமது அரசியல் எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்பதன் வெளிப்படையான சில குறிப்புகள் மட்டும்தான்.

இதே மாதிரியான நடவடிக்கைகளைத்தான் ஃபிர்அவ்ன் மேற்கொண்டான்.

 

وَنَادَى فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِن تَحْتِي أَفَلَا تُبْصِرُونَ

 (J¸|õÒ) L¤ºAÆß uß \‰PzvÚøµ ÷|õUQUTÔÚõß@ “”Gß ©UP÷Í! GQ¨vß Aµ\õm] GßÝøh¯uÀ»Áõ? C¢u BÖPÒ GÚUSUR÷ǯÀ»Áõ KiUöPõsi¸UQßÓÚ? GßÚ,E[PÐUSzöu›¯ÂÀø»¯õ?  அல்குர்ஆன் : 43 – 51

 

இந்த தேசத்தின் மண்ணையும் காடுகளையும் நீரையும் எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாட்டின் குடி மக்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும்.

அப்படிக்காப்பாற்ற வேண்டும் என்று போராடுகின்றவர்களை தேச துரோகிகளாகவும் அப்படிப்பட்ட போராட்டங் களை தேச துரோகமாகவும் அரசியல்வாதிகளால் சித்தரிக்கப்படுகின்றது.

மறுபுறம் பணக்கார முதலைகளின் பொருளாதார மேம்பாடு ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு நாட்டினுடைய மண்ணையும் காடுகளையும் நீராதாரங்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டு பண முதலைகளுக்கும் தாரை வார்த்துக்கொடுப்பவர்கள் தங்களை தேசாபிமானிகளாகவும் சித்தரிதுக் கொள்கின் றார்கள்.

தற்கால மனிதர்களின் வாழ்வையும், இனி பிறக்கவிருக்கின்ற அடுத்த தலைமுறையின் வாழ்வையும்  பாதுகாப்பதற்கான முயற்சி செய்வதும் போராடுவதும் தேச துரோகம் என்றால் அந்த தேச துரோகத்தை ஆயிரம் முறை செய்வதற்கு இந்திய மக்கள் – குறிப்பாக முஸ்லிம்கள் – தயாராக வேண்டும். இந்த பரஸ்பர உதவிக்கான வழியில் ஜாதி, மதம், இனம், மொழி, பிரதேசம், கொள்கை, சொந்த கருத்துக்கள் எதனையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டாக வேண்டும்.

ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் என்பது மட்டும்தான் நம்மனை வரையும் ஒன்றிணைக்கும் கண்ணியாக வேண்டும். இல்லையென்றால் ஃபிர்அவ்னின் சமுதாய மக்கள் குட்டக்குட்ட குனிந்ததால் பாவிகளாக குர்ஆனில் சித்தரிக்கப்பட்ட நிலைக்கு ஆளாக வேண்டி வரும்.

 

فَاسْتَخَفَّ قَوْمَهُ فَأَطَاعُوهُ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ

AÁß (L¤ºAÆß) ußÝøh¯ \‰Pzuõøµa \õuõµn-©õPU P¸vÚõß.AÁºPÒ AÁÝUSU R̨£i¢uõºPÒ. Esø©°À AÁºPÒ £õÁ® ¦›²® ©UPÍõP÷Á C¸¢uÚº. அல்குர்ஆன் : 43 – 54

 

இந்தச்சிறு வாசகத்தில் ஒரு பேருண்மை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஒருவன் ஏதாவது ஒரு நாட்டில் தன்னுடைய கட்டுப்பாடற்ற அதிகாரத்தை செயல்படுத்த முற்படுகின்றான்; மேலும், அதற்காக வெளிப்படையான அனைத்து விதமான சூழ்சிகளையும் மோசடிகளையும் செய்கின்றான்; பகிரங்கமாக ‘மனசாட்சியை’ வியாபாரம் செய்கின்றான்; எவர்கள் மனசாட்சியை விற்கத்தயாராக இல்லையோ அவர்களை தயக்கமின்றி நசுக்குகின்றான் என்றால்…, அந்த மனிதன் தனது நாவால் கூறாமல் போனாலும் சரி, தனது செயலால் தெளிவாக இதனையே உணர்த்திக் கொண்டிருக்கின்றான்: அதாவது, உண்மையில் இந்த நாட்டில் வசிக்கும் மக்களுடைய அறிவு, ஒழுக்கம், வீரம் ஆகியவற்றை துச்சமாகக் கருதுகின்றான். மேலும் மக்களைக்குறித்து அவன் இந்தக் கருத்தைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றான். அதாவது, அறிவீனர் களான- மனசாட்சி அற்றவர்களான, கோழைகளான இந்த மக்களை தான் விரும்பும் திசையில் ‘ஓட்டிச்செல்ல முடியும்’ என்று! பிறகு இந்த உபாயங்கள் வெற்றியடைந்து விடுகின்றன என்றால்…,அந்த நாட்டு மக்கள் அவன் முன் கைகட்டி நிற்கின்றனர் என்றால்..,அப்போது தம் செயல்களால் அம்மக்களும் இதனைத்தான் நிரூபிக் கின்றனர்: அந்தக்கேடு கெட்ட மனிதன் அவர்களை எந்த அளவு துச்சமாக, இழிவாகக் கருதினானோ, உண்மை யில் அவர்கள் அவ்வாறே இருக்கின்றனர். அவர்கள் இந்த இழிவான நிலையில் ஆழ்த்தப்பட்டிருப்பதற்கு உண்மையான காரணம், அடிப்படையில் அவர்கள் பாவிகளாகவே இருப்பதுதான்.

ஆனாலும், இறுதி வெற்றி என்றைக்குமே ஒடுக்கப்பட்டவர்களுக்குத்தான் என்பதுதான் வரலாறு நமக்குக் கற்றுத்தருகின்ற பெரிய பாடம். காலத்தின் வெள்ளப்பிரளயத்தின் ஆழங்களில் என்றைக்கும் மூழ்கி தரை தொட்டது மக்கள் விரோத சக்திகளும் அவர்களின் அநீதிகளும்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

 

فَلَمَّا آسَفُونَا انتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخِرِينَ

 CÖv°À, AÁºPÒ |®ø©U ÷Põ£©øh¯a ö\´u÷£õx|õ® AÁºPÎh® £È Áõ[Q÷Úõ®. AÁºPÒ AøÚÁøµ²® ‰ÌPiz÷uõ®. ¤ØPõ» ©UPÐUS •ß÷ÚõiPÍõPÄ®, £i¨¤øÚ³mk® •ßÝuõµn[PÍõPÄ® AÁºPøÍ BUQ øÁz÷uõ® – அல்குர்ஆன் : 43 – 55,56

இந்தப்பாடத்தைத்தான் மூஸா நபி மற்றும் ஃபிர்அவ்னின் வரலாறும் நமக்கு உணர்த்தி நிற்கிறது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் நம்முடைய வாக்களிக்கும் பொறுப்பை பற்றி இந்தியர்களாக, இஸ்லாமியர்களாக நாம் தீவிரமான சிந்தனையை மேற் கொண்டு செயல்பட்டாக வேண்டும். அப்படியே சிந்தித்து செயல்பட அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக!

 

 

தொகுப்பு : மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இமாம் : மஸ்ஜிதுல் இஹ்சான் , கோவை.

தாளாளர் : ஹிதாயா மகளிர் இஸ்லாமியக்கல்லூரி – கோவை.

News

Read Previous

தேர்தல் வருகிறது… நம் தேசத்தைக் காப்போம்

Read Next

தமிழக வாக்காளர்களுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published.