கோடை வெயிலை எதிர்கொள்ள தினமும் 5 லிட் தண்ணீர் குடிக்க வேண்டும்

Vinkmag ad

 

கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்ப வாய்ப்புள்ளது. இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல் வயதானவர்களுக்கு உடலில் நீர்சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தால் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க டாக்டர்கள் கூறிய ஆலோசனை வருமாறு:

கோடை காலத்தில் சுற்றுப்புற வெக்கை அதிகமாக இருப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பெரியவர்கள் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மோர், பழச்சாறு போன்றவைகளை பருக வேண்டும். குழந்தைகள் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பிரட், பரோட்டா, ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். இவ்வகை உணவுகள் நமது உடலில் அதிகளவு தண்ணீர் சத்தை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. உடலில் வெப்பம் அதிகமாகும் போது, இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கும்.
சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். வாந்திபேதி, டயரியா வந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் சென்றால், உடலில் நீச்சத்து குறைந்து விட்டது என அறிந்துகொள்ளலாம். இதனை தவிர்க்க போதிய அளவு சுத்தமான தண்ணீர் பருகவேண்டும்.
சார்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது, சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படும். இவர்கள் கையில் எப்பொழுதும் குளுக்கோஸ் கலந்த தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு உடலில் தண்ணீர் சத்து குறைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரை அணுகி, உடலில் போதிய அளவு தண்ணீர் சத்து உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் வயிற்றில் உள்ள குழந்தை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க பழச்சாறு, தண்ணீர் அதிகமாக பருகவேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். தண்ணீர் சத்து குறைந்தால், குழந்தை அக்கி குடிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கடுமையான வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளை வெயிலில் அலையவிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, அம்மை, தோல் கொப்பளம் உட்பட பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள ஆகாரத்தை அதிகளவில் தரவேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் தரவேண்டும். சுகாதாரமாக இருக்க வேண்டும். சுத்தமில்லாமல் தயார் செய்யப்படும் உணவு வகைகளை வாங்கி தரக்கூடாது. குழந்தைகளை தினமும் இருமுறை குளிக்க வைக்கலாம். பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம். இளநீர், பாழரசங்கள், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, தர்பூசணி தரலாம்.
இவ்வாறு டாகடர்கள் தெரிவித்துள்ளனர்.

News

Read Previous

ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

Read Next

கோடை நோய்களைத் தடுப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published.