புற்றுநோயைக் காட்டிக்கொடுக்கும் சிறுநீர்ப் பரிசோதனை

Vinkmag ad

புற்றுநோயைக் கண்டறிய தற்போது கொஞ்சம் சிக்கலான, பெரிய பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

இந்நிலையில், ஒருவரின் சிறுநீரைக் கொண்டு அவருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதற்கான எளிய பரிசோதனையை வடிவமைக்கும் முயற்சியின் இறுதிகட்டத்தை தாங்கள் அடைந்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெண்கள் கர்ப்பம் தரித்திருப்பதை உறுதிசெய்து கொள்ள, கடையில் இருந்து ஒரு சிறு பட்டியை வாங்கிவந்து அதனை தமது சிறுநீரில் நனைத்து பின்னர் அதில் ஒரு கோடு தெரிகிறதா அல்லது இரண்டு கோடுகள் தெரிகிறதா என்பதை வைத்து தாம் கருத்தரித்துள்ளோமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதைப்போல, ஒருவருக்கு ஓர் ஊசியைப் போட்டு, பின்னர் அவரது சிறுநீரில் இதேபோல ஒரு பட்டியை நனைத்து, அவருக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்று கண்டறிவதற்கான ஒரு பரிசோதனை முறையை அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கிவருகின்றனர்.

தற்போது வெள்ளை எலிகளில் இந்தப் பரிசோதனையை நடத்தி, வெறும் சிறுநீரைக் கொண்டே, கட்டிகளை உருவாக்கும் பலவித புற்றுநோய்கள் முதல், உடலுக்குள் ரத்தம் உறைந்திருக்கிறதா என்பது வரை பல்வேறு நோய்கள் இருக்கிறதா, இல்லையா என்பதை தங்களால் கண்டறிய முடிந்துள்ளது என்று ஓர் அறிவியல் இதழில் இந்த மருத்துவ ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர்.

பலவிதமான நோய்களைக் கண்டுபிடிப்பதற்கான மலிவு விலை பரிசோதனையாக இந்தப் பரிசோதனை உருவெடுக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலையில் உடலை அறுத்து வாழும் மக்கள் பெரும் பயன் அடைவார்கள் என்று கருதப்படுகிறது.

புற்றுநோயை அடையாளம் காட்டக்கூடிய புதிய வகை செயற்கை பயோ மார்க்கர்களை உருவாக்கியுள்ளதாகவும், நானோபார்டிக்கிள்ஸ் என்று சொல்லப்படும் நுண்துகள்களை ஊசி மூலம் உடலில் செலுத்திவிட்டால், பின்னர் சிறுநீரிலிருந்து புற்று நோய் இருக்கிறதா என அந்த பயோமார்க்கர்களை வைத்துக் கண்டறிய முடிகிறது என்றும் இந்த பரிசோதனை முறையை உருவாக்கிவரும் குழுவின் மூத்த விஞ்ஞானியான பேராசிரியை சங்கீதா பாட்டியா கூறுகிறார்.

இந்த பயோ மார்க்கர்களை அடையாளம் காண்பதற்கு மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற அதிக விலை கொண்ட கருவி தேவைப்பட்டு வந்தது. ஆனால் பரிசோதனையை செலவு குறைந்ததாக்க வேண்டும் என்பதற்காக இந்த பயோ மார்க்கர்களை காண்பிக்கும் உயிரியல் ரசாயனம் பூசப்பட்ட தாள் பட்டிகளை தாங்கள் உருவாக்கியதாகவும், சிறுநீரில் நனையும் போது புற்றுநோள் இருக்கிறதா என்று அவை அடையாளம் காட்டிவிடுகின்றன என்றும் சங்கீதா பாட்டியா குறிப்பிட்டார்.

எலிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பரிசோதனையை அடுத்தகட்டமாக மனிதர்களிடத்தில் செய்துபார்க்கப் போவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது பொதுவாக புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருகிறது. உடம்பில் ஏற்படும் எந்தக் கட்டியையும், அது புற்றுக் கட்டியாக இருக்குமோ என்று பலரும் அஞ்சுகின்றனர். இந்நிலையில், வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய இந்த எளிய சிறுநீர்ப் பரிசோதனை, நிம்மதிப் பெருமூச்சுவிட வைக்கும்.

.

News

Read Previous

படிக்கும் காலத்தில் இலக்கு நிர்ணயித்து கொள்வது முக்கியம்: உ.சகாயம் ஐ.ஏ.எஸ்

Read Next

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மகன் பொறியியல் பட்டம் பெற்றார்

Leave a Reply

Your email address will not be published.