நீண்ட ஆயுளுக்கு சிரிப்பே மருந்து!

Vinkmag ad

பொதுவாக மக்கள் அனைவரும் “சிரிப்பே சிறந்த மருந்து; இதனால் நாம் எப்போதும் சிரித்து வாழ வேண்டும்” என கூறுவர். பொதுவாக சிரிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். மருத்துவர்கள் பெரும்பாலும் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் “மகிழ்ச்சியாக வாழுங்கள்” என அறிவுறுத்துவர். சில மக்கள் காலையில் சிறப்பு சிரிப்பு வகுப்புகளுக்கு செல்கின்றனர். இந்த வகுப்புகளில் அனைவரும் வெவ்வேறு விதங்களில், சத்தமாக சிரிக்கின்றனர்.

நன்றாக சிரிப்பதால் நீண்ட ஆயுள் வாழலாம். இவ்வாறு கூறுவதற்கு பல காரணங்களும், உண்மைகளும் இருக்கின்றன. சிரிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளையும், நமது ஆரோக்கியத்திற்கு ஏற்படும் முன்னேற்றங்களையும் கீழ்க்கண்டவாறு காணலாம். சிரிப்பதால் மனம் இளைப்பாறும் பொதுவாக சிரிப்பு அல்லது நகைச்சுவை, நமது மனதை நிம்மதியாக வைப்பதற்கு உதவும். மன அழுத்தம், மன வேதனை, வலி போன்றவற்றிற்கு சிரிப்பு நல்ல மருந்து. மன உளைச்சல் மற்றும் கோபம் போன்றவற்றை கட்டுபடுத்த, சிரிப்பு உதவுகிறது. சிரிக்கும் போது வெளியாக கூடிய ஹார்மோன், நமக்கு நல்லது. துன்பத்தை கண்டு சிரித்தால், நமக்கு விதிக்கப்பட்டதை விட சில நாட்கள் கூடுதலாக வாழலாம். நாம் மன உளைச்சலுக்கு உள்ளான நேரங்களில், நகைச்சுவை திரைப்படங்களையும், நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் காண வேண்டும்.

 

ஏனெனில் மகிழ்ச்சியும், நகைச்சுவையும் நமக்கு சிரிப்பை வரவழைக்கும். சிரிப்பானது மன அழுத்தத்திற்கு உண்டான ஹார்மோனை குறைத்து, நம் உடலுக்கு நன்மை செய்யும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. சிரிப்பு நமக்கு உறுதியை அளிக்கும் நன்றாக சிரித்தால் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். இதனால் மனதளவிலும், உணர்வுபூர்வமாகவும் நமக்கு நேர்மறையான மற்றும் ஊக்கமயமான எண்ணங்கள் ஏற்பட்டு, மனஉறுதி கிடைக்கும். சிரிப்பு உணர்வு, மன அழுத்தத்திற்கான ஹார்மோனை குறைத்து, ஆற்றலை அளிக்கிறது. நமக்கு துன்பங்கள் ஏற்படும் காலங்களில், தெளிவாக சிந்திப்பதற்கும், இளைப்பாறுவதற்கும் சிரிப்பு ஒரு அருமருந்து. சிரித்து வாழ்வது, உறுதியாக வாழவும், நீண்ட காலம் வாழவும் உதவுகிறது.

 

சிரிப்பு அமைதியைத் தருகிறது நாம் கோபம் அல்லது வெறுப்பு ஏற்படும் காலங்களில், சிரித்து விடுவது நல்லது. சிரிப்பு மன உளைச்சலைக் குறைத்து, நல்ல உணர்வுகளை உடலிலும், மனதிலும் நிரப்புகிறது. சில மக்கள் கோபத்தை கட்டுபடுத்த சிரிப்பு பயிற்சியை மேற்கொள்கின்றனர். இந்த பயிற்சியின் நியதிப்படி, கோபமோ அல்லது மனவேதனையோ வரும் நேரங்களில், சத்தமாக சிரிக்க வேண்டும். இந்த வேடிக்கையான சிரிப்பு சத்தம், நமக்கு உடனடி நிவாரணத்தை அளிக்கும். சிரிப்பு கோபத்தை நிர்வகிக்கும் சிறந்த மருந்து.

 

சிரிப்பு ஒரு சிறந்த பயிற்சி பலர் சிரிப்பை ஒரு பயிற்சியாக மேற்கொள்கின்றனர். இதனால் வழக்கமாக நாம் சுவாசிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனை விட, சிரிக்கும் போது அதிக அளவு ஆக்ஸிஜன் நமது உடலுக்கு கிடைக்கிறது. இதனால் ஆக்ஸிஜன் உள்வாங்கல் அதிகரிக்கிறது. இது இதய துடிப்பின் வீதத்தை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் காலையில் திறந்த வெளியில், சிரிப்பு பயிற்சி எடுப்பது உறுதியாக நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும். பொதுவாக வயதான மக்களே, கூட்டமாக இருந்து கொண்டு இந்த பயிற்சியை மேற்கொள்வர்.

 

ஏனெனில், அவர்களுக்கு இது சிறிய மற்றும் எளிய பயிற்சி ஆகும். அத்தோடு இது அவர்களுக்கு பல நன்மைகளையும் அளிக்கிறது. எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது சிரிப்பு மேற்கூறிய அனைத்து நன்மைகளும், சிரிப்பினால் உடல் அளவிலும், மனதளவிலும், உணர்வு ரீதியாகவும் நமக்கு ஏற்படும் நிலைப்பாட்டை உணர்த்துகிறது. சிரிப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

உடல் உறுப்புகளின் இயக்கத்தை அதிகரிப்பதிலும், கலோரிகளை எரிப்பதிலும் மற்றும் நல்ல ஹார்மோன்கள், செல்கள் இவற்றின் வெளிப்பாட்டிலும் சிரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சில ஆராய்ச்சி முடிவுகள், சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை குறைப்பதில் சிரிப்பு உதவுகிறது என தெரிவிக்கின்றன. இவ்வாறாக சிரிப்பு நமக்கு நோயெதிர்ப்பு சக்தியை அளித்ததோடு, ஆரோக்கியத்தையும் தருகிறது.

Read more at: http://tamil.boldsky.com/insync/pulse/2013/is-laughter-good-medicine-live-longer-004727.html

News

Read Previous

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!

Read Next

முதுகுளத்தூரில் வீடு இடிந்து 2 குழந்தைகள் காயம்

Leave a Reply

Your email address will not be published.