தொழுகையில் அணிவகுத்த நாம் – கொள்கையில் விலகி போகலாமா?

Vinkmag ad

KamalMusthafaSTEmaneswaram

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்
தொழுகையில் அணிவகுத்த நாம் – கொள்கையில் விலகிப் போகலாமா ?
 —-சி.து. கமால் முஸ்தபா —-
எமனேஸ்வரம்
இராமநாதபுரம் மாவட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கம் ஒரு நூற்றாண்டை அடைந்த போதும், இந்திய முஸ்லிம்கள் சிலர் கைப்புண்ணை பார்க்க கண்ணாடி தேடிக் கொண்டு இருக்கிறார்கள். குர்ஆன் ஹதிஸ்களை வாசிப்பவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் வாழ்கிறார்கள்.
ஒரு சாரார் தன் வளர்ச்சிக்கு பொருளாதாரம் இருந்தால் போதும், எதையும் பணம் கொடுத்து சாதித்து விடலாம் என்ற நினைப்பிலும், மற்றொரு சாரார் கட்சி சோறு போடப் போகிறதா ? என்ற குறுகிய வட்டத்துக்குள்ளும், வேறு சிலர் பெரும்பான்மை இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டும், இன்னொரு சாரார் தனிக்குடித்தனம் போல் தாய்ச்சபையில் இருந்து பிரிந்தும், பிரிதொரு சாரார் ஜனநாயக மரபை பேணுகிற நாட்டில் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை மறந்தும், மத சகிப்புத்தன்மை இல்லாமல் அமைப்புகளை ஏற்படுத்தி பதிலுக்குப் பதில் என்று விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாதவர்களாய் செயல்படுவதால் அவர்களின் செயல்பாடுகள் கடலில் கரைத்த பெருங்காயம் போன்று ஆகி வருகிறது.
இது போன்ற சந்தர்ப்பவாதிகள் சமுதாயத்தை நினைத்துப் பார்க்காதவர்கள். இவர்களின் போக்கு மாற வேண்டாமா ? ஒற்றுமை இல்லாததால், கொள்கை பிடிப்பு இல்லாததால் படிப்பினை போதாதா ? உலகளாவிய பார்வையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் பயங்கரவாதம் தலை தூக்கி தலை விரித்தாடுகின்ற இந்த காலகட்டத்தில் சமுதாய ஒற்றுமை மிக அவசியம். வேற்றுமையில் ஒற்றுமையாக தன்னிறைவு பெற இந்தியத் திருநாடு மத நல்லிணக்க உணர்வு மேலோங்கி தழைக்க வேண்டிய இந்த தருணத்தில் சமுதாய உணர்வு நபிகள் பெருமான் ( ஸல் ) வாழ்ந்து காட்டிய சகோதரத்துவம், சமத்துவம் ஓங்கி எதிரொலிக்க ஒவ்வொரு இஸ்லாமியரும் பங்களிப்பின் சங்கமமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்து செயல்படுவதுதான் சிறந்த வழி.
குறிப்பாக மத நல்லிணக்க பூங்காவாக இருந்து வந்த தமிழகம் மீண்டும் அந்த பெயரை தக்க வைத்துக் கொள்ள தமிழக முஸ்லிம்கள் ஓரணியாகி ஒப்பற்ற தலைவர் ‘சமாதனப்புறா’ பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் கரத்தை வலுப்படுத்த அரசியலை தவிர்த்து வாழும் இஸ்லாமிய குடும்பத் தலைவர்களையும், பல்வேறு அமைப்புகள் மூலமாக நெல்லிக்காய்களைப் போன்று சிதறி செயல்படும் அமைப்புகளைச் சார்ந்தவர்களையும் இந்த சந்தர்ப்பத்தில் அனைவரையும் கரம் நீட்டி அழைக்கின்றோம்.
வஸ்ஸலாம்.

News

Read Previous

மது ஒரு பெரும் பாவம்

Read Next

நவ.27ல் மக்கள் தொடர்பு முகாம்

One Comment

  • Firstly, be a one group that goes to Jannah not amoung one in 72 groups that will go to hell as stated my our beloved prophet.

    He has also given the indication of one group that He and his Sahabas were on that side ( just follow Quran and Sunnah).

Leave a Reply

Your email address will not be published.